Saturday 3 December 2011

என் கிராமத்து வீடு

ஊரெங்கும் வாணவேடிக்கை ..
வண்ண வண்ண விளக்குகள்,
சலசலப்பும் ...
பாடுசத்தமுமாய் நம்ம ஊர அம்மன் கோவில் .
பார்ப்பவர் முகத்தில் எல்லாம் சந்தோசம் ,
பார்வையால் பேசிக்கொள்ளும் ,
காதலர் கூட்டம் .
சிட்டென பறக்கும் சிறுசுகள் ,
என் வீட்டு வாசலிலேயே ..
போடப்பட்ட கூத்து மேடை ..
என்ன பயன் ..
பார்த்து மகிழ யாரும் இல்லாத ,
பாழடைந்த என் ..
கிராமத்து வீடு.

4 comments:

  1. அன்பும் உறவும் கூடசேர்ந்து வீடாக இருந்தது
    மனிதர்கள் இன்றிப் போக
    பாழடைந்த கட்டிடமாகிப் போனதை
    மிக அழகாகச் சொல்லிப் போகிறது பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  3. கவிதைநூலை இலவசமாகத் தந்த சோதரிக்கு நன்றிகூறிடக் கணினியில் கிடைத்த ஓர் எண்ணிற்குப் பன்முறை முயன்றும் பயனில்லை. வலைப்பக்கமோ அறிந்தேனில்லை.தென்றலின் கனவு வலைப்பூவாயில்லை.என் கிராமத்து வீடு தென்றல் சசிகலாவிடம் கொண்டு சேர்த்தது.” வான” வேடிக்கை ”வாண “ வேடிக்கையாக வேண்டும். கவிதை நன்று. காட்டிய வீடு அதைவிட நன்று பின்னர் எப்படிப் பாழடைந்து போகும்? மனம் வைத்தால் பாழடைந்த வீடும் படத்தில் பார்க்கும் வீடுபோல் பளிச்சென்று இருக்கும்.ஊரில் உள்ள நல்லோருக்கு இலவசமாகவோ குறைந்த ரூபாய்க்கோ வாடகைக்கு விடலாம். அல்லது கூட்டிப் பெருக்கிக் கோலமிட்டுப் பாதுகாக்கச் செய்திடலாம். வாய்ப்பும் வசதியும் உள்ளபோது கிராமத்துத் தென்றலையும் சுகித்து வரலாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete