Saturday 31 December 2011

பேசிக்கொண்டே இருக்க

உன்னிடம் பேசிக்கொண்டே இருக்க
எந்த புதுப் புது சேதியும்
இல்லை என்னிடம் ...
இருப்பினும் நீ \'ம்   ...ம் \'
என்பதை கேட்டுக்கொண்டிருக்கவே
பழைய ஆயா வடை சுட்ட
கதையிலிருந்தே   மறுபடி ஆரம்பிக்கலாம்
போல் இருக்கு .
சசிகலா

பொக்கிசமே

நீண்ட காத்திருப்புக்குப்பின்
நீ அனுப்பியதாய் கிடைக்கும்
வெற்று காகிதம் கூட
எனக்கு கிடைத்த பொக்கிசமே  .
சசிகலா

பிரிவு மடல்

2011

சில நேரங்களில்
அழ வைத்தாய் ..
சில நேரங்களில்
சிரிக்க வைத்தாய் ...
அனுபவங்களை அள்ளித்தந்தாய் ....
அழும் போது ஆறுதல் சொல்ல  ...
நண்பர்கூட்டத்தை கொடுத்தாய் ..
உறவுகளுக்குள் உழல வைத்தாய் ...
உண்மை நிலை புரிய வைத்தாய் ...
உன்னை விட்டு பிரிவதில்
துளியும்  சம்மதமில்லை தான்
எனினும் என் செய்ய ..
காலச்சக்கரம் எனை
இழுத்துக்கொண்டு செல்கிறது ...
என் தாய் எனை தமிழுக்கு அறிமுகம் செய்தால் ..
நீயே எனை தமிழ்மணத்தில்
கவிதைக்கு அறிமுகம் செய்தாய்
உன்னை என்றென்றும் மறவேன் .
இப்படிக்கு
சசிகலா

Friday 30 December 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வண்ண காகிதங்களை
ஆடையாய் உடுத்தி ....
மத்தாப்பு சிரிப்பை ...
புன்னகையாய் ஏந்தி...
வளம் வர போகிற புத்தாண்டுக்கு ...
புன்னைகையும் ..
புத்துணர்ச்சியையும் ...முகத்தில் ஏந்தி ..
என்றென்றும் நட்பு சோலைக்குள் ..
வாடா மலராய் ..
மலர்களாய் பூத்துக்குலுங்கி ...வரவேற்ப்போம் .
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

பழக்க தோஷம்


விற்றது தெரியாமல்
மேச்சலுக்கு பிறகு ..
எங்கள் வீடு வந்து சேரும்
பசுவைப்போல் ...
நீ வெளிஊர் சென்றிருப்பது
தெரிந்தும் நீ வரும் நேரம் ஆனதும் ..
வாசலில் காத்துக்கிடக்கும் என் விழிகள் .

Wednesday 28 December 2011

புயலைப்போல .

நீ உதிர்த்து போகப்போகும் ..
ஓரிரு அன்பு வார்த்தைகளுக்காக ..
காத்திருக்கிறேன் ..
நீயோ ..
உதறி எழுகையில்
உதிர்ந்த வார்த்தைகளைக்கூட ..
வாரி சுருட்டி எடுத்து ..
மறைகிறாய் புயலைப்போல .
சசிகலா

நம்மில் இருந்து சற்று ..


"நான் ஒன்று சொல்கிறேன்
தப்பா நினைக்கமாட்டியே "
என நீ சொல்லி முடிக்கும் முன்னமே ..
நம்மில் இருந்து சற்று ..
தள்ளி நிற்கிறது நட்பு .
சசிகலா

நான் எங்கு பயணம் போவது ?

என்னை விட்டு பிரிவதில்
அத்தனை சந்தோசமா ...உனக்கு
சிரித்த முகத்தோடு வந்து நிற்க்கிறாய்?.    .
எது எப்படியோ ...
வழி அனுப்புகிறேன் என்று ...
என் முன் வந்து நின்றுவிடாதே ..
உன் முகம் கண்ட பிறகு ..
நான் எங்கு பயணம்  போவது ?
சசிகலா

Tuesday 27 December 2011

தொலைத்து விட்டேன்

உன் நினைவுகள் தான்
எனக்கு வழிகாட்டியே..
தோழியை பார்த்த
சந்தோஷத்தில் தொலைத்து விட்டேன்
உன் நினைவுகளை
வீட்டிற்க்கு அழைத்து போ
என்றவளையும் அழைத்துக்கொண்டு
வீதி வீதயாய் திரிகிறேன் ...
நம் வீட்டு விலாசம் தெரியாமல் .
சசிகலா

Monday 26 December 2011

இன்னமும்

அம்மாவின் சாயலில் ...
இருந்த அந்த எடுப்பான பல்லையும் ...
எடுத்தாகிவிட்டது ...
அடுத்த வீட்டு பெண்ணின் ..
அரைகுறை அலங்காரத்தையும் ..
எப்படியோ காப்பி அடித்தும் ...
இன்னமும் நாலு வார்த்தை ...
கோர்வையாக ...
அழகாக பேசத்தெரியவில்லை .

Friday 23 December 2011

சொல்லிப் போகிறது நட்பு ..

உன்னிடத்தில்
என் காதலை சொல்ல ...
அந்த நிலவை தூது அனுப்பினேன் ..
அது நீ உறங்கும் அழகை கண்டு ...
அங்கேயே நின்று விட்டது .
தென்றலை அனுப்பினேன் ...
அது உனை தீண்டிய ...
இன்பமே போதுமென ...
இருந்து விட்டது ....
நீயும் நானும் ...
சொல்லத்துணியாத ...
காதலை சொல்லிப்  போகிறது நட்பு ..
அதோ பாருடி உன் ஆளு .....

தொடரும் ....

தொடரும் ....
எனும் வார்த்தைக்கு பின்பு தான் ..
எத்தனை எத்தனை ..
உச்சு கொட்டல்கள் ..
எத்தனை எதிர்பார்ப்புகள் ..
ஏன் தான் ஆரம்பித்தோமோ ..
என்ற தவிப்பு ..
இது போலவே காத்திருக்கிறேன்  நானும் ...
பேசிகொண்டிருக்கும் போதே ..
ஒரு நிமிடம் என்று ...
உரையாடலை துண்டித்து போகும் உனக்காக .
சசிகலா .

Thursday 22 December 2011

நம் பிரிவை போல


நிரந்தர இருளும் இல்லை
நிரந்தர வெளிச்சமும் இல்லை
நேற்றைய நம் பிரிவை போல

அறிமுகம்

சமையலறையும் ....
சலவைத்துணியுமே ...
உலகம் என்றிருந்தேன் ...
கவிதையின் அறிமுகம்
கிடைக்கும் வரை .
சசிகலா .

Wednesday 21 December 2011

தேவதை


கோபம் எனும்
கருங்குரங்கு வந்து
கலைத்து போட்ட வார்த்தைகளை
மன்னிப்பு எனும்
தேவதை வந்து ஒழுங்கு படுத்தி போகிறாள் .
சசிகலா

Tuesday 20 December 2011

புன்னகை

புன்னகை......
சந்தோஷ உணர்வுகளை
வெளிக்காட்டும்
கண்ணாடி

இளைப்பாறுதல்

ஒவ்வொரு
புயல் மழைக்கும் ..
கொஞ்சம் கொஞ்சமாக
தன் கூரைச்சடையை
கிழித்துக்கொண்டிருக்கும்
என் தாய் வீடு
இன்னமும் இளைப்பாறுதல் தருகிறது ,
கால்நடைகளுக்கு .
சசிகலா

Monday 19 December 2011

உறக்கம் கலைக்கும் வரிசையில் .

உறங்க மறுத்த இமைகளை
இழுத்து அணைத்து
உறங்கச்  செல்கிறேன் ....
சுரீர்ரென்று  முகத்தில் அடிப்பது போல
ஓட்டின் மீது விழும்
மழைத்தூறல் ..
அடித்து பிடித்து எழுந்து அமர்கிறேன் ,
மடியில் வந்து அமர்ந்து கொள்கிறது ..
உன் நினைவு ..
சமாதன படுத்தி உறங்க செல்வதற்குள் ..
இடையே வந்து பயமுறுத்துகிறது ..
இடியும் மின்னலும் ...
அதையும் சமாளித்து ..
பட படவென அடிக்கும் நெஞ்சை ..
எச்சில் விழுங்கி தட்டிகொடுப்பதர்க்குள் ..
மின் வெட்டும் சேர்ந்து கொள்ள
மிரள விழித்து ..
போர்வைக்குள் தஞ்சம்
புகுந்த எனை ..
காதுக்குல் இசை பாடி ..
வெளி வரச்சொல்லும் கொசு ..
இன்னும் எத்தனை பேர் ..
இருக்கிறார்கள் ....
என் உறக்கம் கலைக்கும் வரிசையில் .

Sunday 18 December 2011

மறைக்கவும் தெரியவில்லை

உன்னைப்போல்
என்னுள் எங்கோ காதலை
வைத்துக்கொண்டு ..
மறக்கவும் முடியவில்லை ,
மறைக்கவும் தெரியவில்லை .
சசிகலா

மலர்கள்

வண்ணங்களாய் சிரித்தாலும் ..
எண்ணங்களோடும்
பேசுவதில்லை மலர்கள் .
சசிகலா

அனாதையாய்


பிரசவ காலத்தில்
அம்மா ..
அப்பா ...
அக்கா , தம்பி , தங்கை என..
உறவுகள் எல்லாம் சூழ ..
தாய்க்கும் சேய்க்கும் சேர்த்து ..
தாலாட்டு கேட்கிறது ..
பக்கத்து மெத்தைல்..
எனக்கு பசிக்கிறது என்பதைக்கூட ...
பகிர அலைபேசியை தேடுகிறேன் நான் .
சசிகலா

தாய்மை

ஐந்து அறிவுள்ள ..
பறவை , விலங்கினங்களுக்கும் ..
இயல்பாய் அமைந்து விட்ட
தாய்மை  எனும் சொல்லுக்கே ..
உரித்தான மகத்துவம் .
சசிகலா

கடிவாளம்

குதிரைக்கு கடிவாளம்
எனக்கு உன் நினைவு .
சசிகலா

Friday 16 December 2011

நிரந்தர மில்லா.

நிரந்தர மில்லா..
அழகை உணர்த்தவே ...
தினம் தினம் ...
அழிக்கப்படும் கோலங்கள் .
சசிகலா

என்ன விந்தை

என்ன விந்தை
விரல்களின் நாட்டியம் ..
வீதியெங்கும் ..
வண்ண வண்ண கோலங்களாய்  .
சசிகலா

எண்ண சிறகுகள்

விண்ணைதொடும் ஆசை இல்லை..
உன்னை தொடும் ஆசையோடே   ....
விரிகின்றன என் எண்ண சிறகுகள் .
சசிகலா

உயிரோட்டம்

காகித பூக்களும்
காட்சிக்கு ஏற்ப...
உயிர் பெற்று விடுகின்றன .
காண்பவர் பார்வையில் ...
இருக்கின்றன உயிரோட்டம் ...

விரட்டி விட்டு

உறக்கத்தை வெளியே ..
விரட்டி விட்டு ...
இமை கதவுகளை ..
இழுத்து சார்திக்கொண்டேன் ..
உன் நினைவுகளோடு ...
பேசிக்கொண்டிருப்பதை ...
நிறுத்த மனமில்லாது .....

பக்கம் பக்கமாக

பதினைந்து வரிகளுக்கு
மிகாமல் எழுதவும் எனும் ..
பகுதிக்கே சென்றதில்லை ....
பள்ளி இறுதி தேர்விலும் கூட ...
இன்று பக்கம் பக்கமாக..
எழுதுகிறேன் உன்னிடத்தில் ...
விரிவாய் விளக்கி சொல்ல தெரியா காதலைப் பற்றி .
சசிகலா

குருடாக்கி விடுங்கள்

படைப்புகளை திருடுவதற்கு முன் .
படைப்பாளிகளின் கண்களை ...
குருடாக்கி விடுங்கள் .

பெண்களின் அவலங்கள்

சாம்பிராணி வாசனை
மணக்க மணக்க ..
சுத்தமான மாட்டுதொழுவத்தில் ..
நிகழ்கிறது எங்கள் பசுவின் பிரசவம் ...
எங்களுக்கோ இங்கு ..
சுத்தமில்லா கழிவறை ,
முகம் சுளிக்க வைக்கும் துர்நாற்றம் ..
உக்கார கூசும் இருக்கைகள் ..
இரத்த பிசு பிசுப்போடு இருக்கும் மெத்தைகள் ...
நீண்ட தொரு வராண்டாவில் ...
நிகழும் தலைபிரசவங்பிறந்த குழந்தைன் ...
அழுகுரலையும் கேட்கவியலா ...
பெண்ணின் அலறல்கள் ...
ஒண்டிக்குடிதனத்தில் ...
இருபது போல ஒருவருக்கொருவர் ...
பார்த்துகொள்ளும் படியாக ..
ஒரு பெண்ணின் கருசிதைவை ...
பார்த்தபடி நிகழும் ...
மறுபெண்ணின் தலைபிரசவம் ...
அவரைக்காய் இன் உள்ளிருக்கும் ...
புழுவையும் காண சகியாத நாங்கள் ...
தாய்சேய் நல பிரிவில் இருக்கும்
நாட்களில் அனுபவிக்கும் ...
அவலங்களுக்கு ...என்றுதான் விடிவு கிடைக்குமோ ?


Thursday 15 December 2011

விதைத்து போனது யார்

இன்னமும் ..
அரும்பாத மீசையும் ...
அவளுக்கு ,
சரியாய் போடத்தெரியாத ..
பாவாடை முடிச்சும் ...
இதற்குள் இவர்களுக்குள் ...
விதைத்து போனது யார் காதலை  ?
சசிகலா

நெருடல் இன்றி

ஆள் இல்லா ஆற்றங்கரை ..
ஜன்னலோரத்தில் தெரியும் உலகம் ...
மலர் தேடும் வண்டு ....
வண்டு விரட்டும் பட்டாம்பூச்சி ..
தும்பி விரட்டும் தம்பி ...
தூரத்து பசுமை ..
அரிசி புடைக்கும் அன்னை மடி ..
அருகிலேயே வந்து போகும் சிட்டுகுருவி ..
திகட்டாமல் பேசும் மழலைகள் ..
தினந்தோறும் அமரும் குட்டிச்சுவர் ..
குதூகலமாய் ஆட்டம் போட்ட ...
புத்தாண்டு இரவு ...
கூத்தடித்த நண்பர் கூட்டம்...
முன் எப்போதும் போல் ..
இவற்றில் எல்லாம் நெருடல் இன்றி ...
நெகிழ்திருக்க முடிவதில்லை .
சசிகலா

Tuesday 13 December 2011

நீ எனைத்தான் ..
பார்க்கிறாய் என தெரிந்ததும் .
உன்னில் ஓடி ஒளிந்து கொண்டன ...
எனக்கான  காட்சிகள் ..
அதனால் தான் நான் உனையே பார்கிறேன்

ஏமாளிகளாய்

இறந்த கன்றுகுட்டிகுள்,
வைக்கோலை திணித்து ..
தாய்ப்பசுவை ஏமாற்றுவதை போல்..
இருக்கிறது ..
தேர்தல் வாக்குறிதிகள் யாவும் .

Thursday 8 December 2011

என் அன்புத் தோழிக்கு


என் அன்புத் தோழிக்கு
நியும் நானுமாய் ..
ஒன்றாய் கைகோர்த்து
நடந்து நடந்து  தேய்ந்து போன ...
சாலைகளை இப்போதுதான் ..
சரி பார்க்கப்படுகிறதாம் ,
வா சென்று பார்த்து வரலாம் ...
நம் புன்னகையும் ..
கேளிக்கையும் பாராமல் ..
பள்ளி வளாகத்தில் இருந்த ...
பாக்கு மரம் பட்டு போய் விட்டதாம் ..
வா சென்று பார்த்து வரலாம் ...
எனை உன் இதயத்தில் மட்டும் ...
சுமந்தது போதாதென ..
உன் இருசக்கர வாகனத்திலும் ..
அல்லவா சுமந்திருகிறாய் ..
என் அன்புத் தோழியே ..
எங்கிருக்கிறாய் நீயடி ..
என் தாய்க்கு பிறகு ..
என் பசி பொறுக்காதவள் ..
நியும் அல்லவா  ,
இனியவளே ..
உன்னிடத்தில் பிடித்தது ..
உன் மவுனமே என்பேன் ..
அதற்காக இப்படியா ..
நீ எங்கிருக்கிறாய் ..
என்பதை கூட தெரிவிக்காமல் ,
மவுனித்து கிடக்கிறாய் .
தேடலுடன்  அன்பு சசிகலா

Wednesday 7 December 2011

காதல் ஒத்திகை

மரத்திற்கு மரம் தாவிஓடி...
புல் தரைஇல் முகம் புதைத்து ...
பறப்பதாய் நினைத்து ..
வயல் வரப்பில் ஓடி ..
கிணற்று படிக்கட்டில்,
 அமர்ந்துகொண்டு கீதம் பாடி  ...
கடந்து சென்ற கண்ணாடியை ...
மறுபடி வந்து பார்த்து நின்று ..
ஜன்னலுக்கு பக்கத்தில் ..
அமர்ந்துகொண்டு கன்னத்தில் கைவைத்து ...
எதையோ முறைத்தபடி ...
காதல் வந்து விட்டதாய் நினைத்து ..
நடத்திய ஒத்திகையே ...
நன்றாய்த்தான் இருந்தது .
சசிகலா

நட்பின் வரி

சருகுகளாய் போன ..
நினைவுகள் ,
சத்தமில்லாமல் உறங்கிகிடக்கின்றன ..
ஆழ்மனதில் ,
அவ்வப்போது வரும் காற்றின் ...
அசைவுகளில் சலசலத்து ....
ஜாபகப்படுத்துகின்றன ...
நட்பின் வரிகளை ...
உன்னை அறிமுக படுத்திய பள்ளியும் ,
நாம் அசுர வேகத்தில் ...
ஓடிய போது பரந்த தூசியும் ...
இன்னமும் இடம் மாறாமல் ..
அங்கேதான் இருக்கிறது ...
நாம் மட்டும் என் எப்படி ...
பானைக்குள் அழுத்திய புளியாய்..
பாதுகாப்பாய் தான் இருக்கு ...
நண்பனே உன் நினைவுகள் .
சசிகலா

கொடூர செயலா...?

காரணமே இல்லாமல் ...
கனத்துப்போகிறது மனது ,
கனகாம்பரம் பூவை வைத்தாலும் ,
கல்லை சுமப்பது போன்று உணர்வு ,
எவர் பார்வை பட்டாலும் ,
எரிமலைக்கு பக்கத்தில்
 இருபதைப்போன்றதொரு  வெப்பம் தாக்குகிறது ,
காற்றே பட்டாலும் ..
காய்ச்சல் வந்துவிடும் போல ,
வேற்று கிரக வாசியை பார்ப்பது போல ...
என் வாசலை கடக்கும் ....
அதனை பேர் முகத்திலும் ..
கேளிக்கை , சிரிப்பு ....
அத்தனை கொடூர செயலா...?
காதலித்தது.......
சசிகலா

ரோஜா

ரோஜாவை மட்டும் ..
எனக்கு வாங்கி வராதே ,
அதற்கு என் கூந்தலை விட ..
உன் சட்டை இல் இருக்கத்தான் ..
ஆவலம் ..
என் தலை இல் ஏறி ...
அமர்ந்து கொண்டு குட்டிக்கொண்டே ..
இருக்கிறது .
சசிகலா

வந்து விடு

எத்தனை முறை தான் ...
திரியை தூண்டுவதாய் ...
வாசலிலேயே தவம் கிடப்பது ...
சீக்கிரம் வந்து விடு ..
தீபம் அணைவதற்குள் .

Tuesday 6 December 2011

எப்படி சொல்வேன்

வணக்கம் ,
எப்படி இருக்கீங்க ,
என்ன சாப்டிங்க ..
இப்படி ஏதேனும் ஒன்று ...
உன்னிடம் பேச நினைப்பதை .
எப்படி சொல்வேன் .

சட்டை இல்லாமல்

இரவு உணவுக்கு பின் .
உன்னை நடக்க சொன்னது ..
தப்பா போச்சி ..
நீ சட்டை இல்லாமல்
செல்லும்  அழகை காண ..
அந்த நிலா
உன் பின்னாலே  வருகிறது .

சோம்பேறித்தனம்

ஏ ..கடிகார முட்களே ..
ஏன் இந்த சோம்பேறித்தனம் ..
கொஞ்சம் வேகமாக தான் சுற்றேன்,
நான் சீக்கிரம் வீட்டுக்கு ..
போக வேண்டும் ..
எனக்காய் காத்திருக்கும் மழலைகள்.
சசிகலா

அழகிய தமிழை .

ஒன்றாம் வகுப்பு ..
மாணவனுக்கு சொல்லி கொடுப்பது போல ..
அதனை அழகாக ...
விரல் பிடித்து கத்துக்கொடுக்கிறாய் ...
அழகிய தமிழை .

எனக்கான காட்சிகள் ..

நீ எனைத்தான் ..
பார்க்கிறாய் என தெரிந்ததும் .
உன்னில் ஓடி ஒளிந்து கொண்டன ...
எனக்கான  காட்சிகள் ..

குச்சி மிட்டாய்

குச்சி மிட்டாய் ..
வேண்டுமென்றால் .
தயங்காமல் என்னிடம் கேள் ..
வாங்கித்தருகிறேன் ..
அதற்காக என் விரல்களை ..
ஏன் இந்த பாடு படுத்துகிறாய் .

பார்க்காதே

அப்படி குறு குறுன்னு ..
பார்க்காதே ..
என்று எத்தனை  முறை சொல்வது ..
பார் எத்தனை  முகப்பருக்கள் வந்திருக்கு .
சசிகலா

முதல் தேதி

முதல் தேதி ..
முகமலர்ச்சியோடு .
வரவேற்கும் தண்டல்காரன்

அழைத்துக்கொள்

உன் அன்பு வெள்ளத்தில் .சிக்கி ...
நீச்சல் தெரியாது
மூழ்கிகொண்டிருகிறேன் .
சீக்கிரம் கரம் நீட்டி ..
அழைத்துக்கொள் ..
உன் இதய வீட்டுக்குள் .
சசிகலா

விலகி நிற்காதே

இரட்டை கதவுகள் நாம் ..
இணைத்து இருந்தால் தான்..
பாதுகாப்பு ..
வீம்பு பிடித்து விலகி நிற்காதே ..
வேண்டாதவை எல்லாம் ..
உள்ளே புகுந்து விடும் .
சசிகலா

காதல் பிசாசு

காதல் பிசாசு
என்னில் புகுந்து கொண்டு ...
எனை ஆட்டி வைக்கும் ...
பிசாசாய்  உன் நினைவு .
சசிகலா

எப்படி ?

இன்னமும் நான் ..
அடுபங்கரை தாண்டி ...
வாசல் வரை கூட வரவில்லையே ..
அதற்குள் என்னை ...
உன் மேடை பேச்சுக்கு ...
உரை எழுத சொன்னால் எப்படி ?

திண்ணை

விடுதி இல் தங்கி ...
படித்த அக்கா..
நாலு பேர் கூடிய ...அறையல்
தங்கி வேலை பார்த்த ...
தம்பி..
இவர்களின் வருகைகாக ..
  வார கடைசில் ...
நான் காத்திருந்த ...
குட்டி திண்ணை ..
இன்னமும் காத்துகொண்டுதான் இருக்கிறது ..,
வருட முடிவில் வந்து போகும் எங்களுக்காக
சசிகலா

நீ அழைத்தால் தான் ..

இருண்டு கிடக்கும் ...
அலைபேசி இல் கூட ..
நீ  அழைத்தால் தான் ...
வெளிச்சமே வருகிறது .
சசிகலா