Monday 26 December 2011

இன்னமும்

அம்மாவின் சாயலில் ...
இருந்த அந்த எடுப்பான பல்லையும் ...
எடுத்தாகிவிட்டது ...
அடுத்த வீட்டு பெண்ணின் ..
அரைகுறை அலங்காரத்தையும் ..
எப்படியோ காப்பி அடித்தும் ...
இன்னமும் நாலு வார்த்தை ...
கோர்வையாக ...
அழகாக பேசத்தெரியவில்லை .

5 comments:

  1. கருத்தை மிகச் சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
    மீண்டும் முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  2. நாகரீகம் என்ற பெயரில் என்ன தான் அழகு படுத்திக்கொண்டாலும்
    இன்னமும் அழகாக பேசதெரியவில்லை இது என் கருத்து .

    ReplyDelete
  3. கொஞ்சம் வார்த்தைகளை தெளிவா பயன்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ...
    நாகரிக மாற்றத்தில் கரைவது நமது மரபும் , பண்பாடும் தான் தோழி ...

    ReplyDelete
  4. அழகு
    மிகச் சரியானதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்
    அடுத்த வரியில் உதட்டுச் சாயமும் பூசியாகிவிட்டது என்பதுபோன்ற
    வாய் சம்பத்தப்பட்ட உவமை இருந்தால்
    புரிந்து கொள்ள ஏதுவாய் இருந்திருக்குமோ ?
    அரை குறை அலங்காரம் என ஒருபொதுவான விஷயத்திற்குப்
    போய்விட்டதால் மிகச் சரியாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை
    தவறு உங்களுடையதில்லை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete