Wednesday, 30 November 2011

லஞ்சம்

பலூன் விற்பவன் ....
பிறக்க போகும் தன் குழந்தைக்கு ...
வாங்கிய சட்டையேன் விலை இருபது ...
பிறந்த குழந்தை ...
ஆணா,பெண்னா  என...
தெரிந்துகொள்ள குடுத்த விலை ஐநூறு .
சசிகலா


 

சிரித்து கொண்டே இருப்பேன்

நீ வடிக்க போகும் ,
சிற்பம் நான் .
எத்தனை முறை ...
செதுக்கினாலும் ...
சிரித்து கொண்டே இருப்பேன் .
சசிகலா

விமர்சனங்கள்

உங்கள் விமர்சனங்கள் ...
இல்லாமல் ...
என் கவிதைன் ..
முகங்களெல்லாம் ....
வெளிரிகிடகின்றன .

தற்கொலை

உன் முகம் சோர்ந்து ..
இருக்கயில்
என்னில் சந்தோசம் எல்லாம் ..
தற்கொலை செய்துகொள்கின்றன .
சசிகலா

தெரிந்தும்

அழைக்க மாட்டாய் ..
என தெரிந்தும் ...
நொடிகொரு முறை எடுத்து பார்கிறேன் ..
அலைபேசியை .
சசிகலா

என் கோபம்

உன் மீதான ,
என் கோபம் ...
நெருப்பாகவே இருந்தாலும் ..
அது உன் காட்சிக்கு ...
ஏற்ப தீபமாகதான்  இருக்கும் .

தூணை பார்க்கவும்

பட்டாசுக்கு பயந்து ,
நீ பதுங்கிய தூணை பார்க்கவும் ..
பொறாமையா இருக்கிறது ..
அந்த தூனகவாவது நான் இருக்க கூ டாதா  என்று .

எனைதவிர .

எனைதவிர ..
வேறு எவரோடும் பகிர்ந்து கொள்ளாதே...
உன் அன்பை ..
வீணாய் உதய் படும் ..
என் வீட்டு பூனைக்குட்டி .

எந்திரத்தனமான உலகில்

எந்திர தனமாகி போன வாழ்க்கை,
எழுந்திருக்கும் போதே ..
இட்லிக்கு தொட்டுகொள்ள ..
என்ன செய்வது ...
என ஆரம்பித்து ..
மதிய உணவு ..
இரவு சிற்றுண்டி ,
என அணைத்து ஏற்பாடுகளையும் ..
முடித்தாக வேண்டும் ...
எட்டு மணிக்குள் ,
அதற்குள் ...
நாளைய பள்ளி சீருடைக்காய்..
நனைந்து கொண்டிருக்கிறேன் ..
கிணற்று அடியல் ..
அத்தனையும் முடித்து நிமிர்வதற்குல் ..
அவசர அவசரமாய் ..
வந்து போனது பள்ளி ஊர்தி .
அடித்து பிடித்து ...
அரைகுறை அலங்காரத்தோடு ..
வந்து சேர்கிறேன் அலுவலகம் .
அங்கும் இங்குமாய் ..
ஓடி கலைத்து ..
அடைத்து போன ..
டப்பா உணவிலயும் மீதம் வைத்து ...
உண்டு முடிபதர்க்குள் ...
பள்ளி வாகனம் வந்திருக்குமா ?
பால் எடுத்து வைத்தோமா?
என பல யோசனைகளோடு ..
கழிகிறது மீத நேரமும் ...
வயற்றை  கிள்ளும் பசியோடும் ,
வாடிய முகத்தோடும் ..
வாசலை நெருங்குகிறேன் ..
அம்மா வென ஓடி வந்து ..
கழுத்தை  கட்டி ...
கன்னம் நனைக்கும் ...
அவன் முத்தத்தோடு சேர்ந்து ...
ஒட்டிகொல்கிறது ...
என்னில் ஒளிந்திருந்த ...
சந்தோசமும்  ...
சுறுசுறுப்பும் .....!
 

நினைவாய்

அம்மியும் ஆட்டுக்கல்லும் ...
ஆயாவின் ஜாபகமாய்..
அம்மாவிடம் இருந்தது ...
என் அம்மாவின் ஜாபகமாய் ...
அவள் புகைப்படம் மட்டுமே

லீலை

எத்தனை பேர் ..
கூடிய சபைலும்...
என்ன ஒரு லாவகமாய் ..
இடையை கில்லி மறைகிறாய் ..
உன் அம்மாவிற்கு ..
மறுபெயர் யசோதையா ?

வள்ளல்

மிகப்பெரிய ...
வள்ளல் பிரபுதான் நீ ...
உன்னிடம் இருந்த காதலை ...
முழுக்க முழுக்க ..
என்னிடம் திணித்துவிட்டு ...
என்ன ஒரு இயல்போடு ....
பெருமூச்சு விடுகிறாய் .

வந்துவிடாதே

 கடற் கரை வரை சென்று ...
கால் நனைக்காமல் ...
வந்துவிடாதே ..இன்னும் ஒரு
சுனாமியை தாங்கும் ...
சக்தி இல்லை ..
எங்களுக்கு ..

பிடிக்க வில்லை எனக்கு

இருசக்கர வாகனத்தில் ...
இருபுறமும் கால் போட்டு ..
உன் பின்னால்  ....
அமர்ந்து போகும் ...
ஆடவரைக்கன்டாலும் ....பிடிக்க வில்லை எனக்கு .

காதல் திருடா

என் குழந்தை தனம் ..
குறும்புத் தனம் ...
எல்லாவற்றையும் ....
திருடிக்கொண்டு ..
திரும்பிகூட பார்க்காமல் ...
உன் சட்டை பிடித்த படியே ....
நடந்து கொண்டிருகிறது ...
என் காதல் .

உன் மவுனம்

உன் மவுனம் ...
எல்லாவற்றிற்கும் ...
ஒத்து போகிறது ...
என் காதலுக்குதான் ...
உன்னோடு சரியாய் ...
சண்டை கூட போடா தெரியவில்லை .

காவல்

இரவின் மடியல்...
நடை பழகும் ....
அலை  குழந்தைகளுக்கு ,
காவல் இருக்கும் நிலவு .

நட்பு

அரவணைத்து போகிறவள் ,
அம்மா........
அதட்டி வழி நடத்துவது ,
அப்பா..........
கற்பித்து வழிநடத்துவது ,
ஆசான்..........
அன்பு பகிர்வுக்கு ,
சகோதர உறவு......
அழா வைத்து ரசிப்பது ,
காதல் ......
அனைத்திலும் துணையாய்,
நிற்பது நட்பு  ....

பெண்மை

அஞ்சரை பெட்டிலும்,
அழுக்கு துணி மூட்டை இலும்,
கரைந்து போன .....
அம்மாவின் வாசகங்கள்  ....
கடிகார முட்களோடு ...
போட்டி போட்ட அவள் வேகம் ..
அரசு விடுமுறையாம்!
என் வீட்டு அடுகலைக்கும்,
அம்மாவுக்கும் கிடைக்காமலே போன .....
விடுமுறை நாட்கள் ........
இது தான் பெண்மையோ ?

பாடம்

உன்னை போல் பேச ...
உன்னை போல் எழுத ...
உன்னை போல் உட்கார ...
இப்படி ஒவ்வொன்றாய் ..
உன்னிடம் இருந்து கற்று வருகிறேன் .
நீ என்னை ...
உதாசினபடுத்தும்  அந்த ஒன்றை மட்டும்  ...
உன்னிடம் இருந்து  கற்று கொள்ளாமல் ..
இருக்க வேண்டும் .

புழுதி

அப்படி என்ன ..
தவறு செய்தோம் என்று ...
புழுதியை வாரி வாரி ..
இரைத்து போகிறார்கள் ...
இந்த மனிதர்கள் ..
புலம்பியபடி சாலையோர மரங்கள் .

பரவசம்

மனமுழுக்க பரவசம் ...
மல்லிகையோடும் பேசுகிறேன் ..
தனிமையல்  சிரிக்கிறேன் ...
பாம்பையே கண்டாலும் ...
பதறாமல் நிற்கிறேன் ...
நன்றாய்த்தான் இருக்கிறது ..
இந்த அனுபவம் .

காணவில்லை

யதார்த்தமாய் பேசினேன் ...
கவிதை என்றாய் .
கவிதை பிடிக்குமோ என்று ...
கவிதை எழுதுகிறேன் ...
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ...
தேடுகிறேன் எங்கும் காணவில்லை .

வலி

வலிய கிடைத்தால் ..
அன்பிற்கு கூட ...
அர்த்தம் இல்லாமல்
போகுமோ ?

சூரியன்

குளித்து விட்டு ..
ஈரத்தோடு இருக்கும் ..
தாவர குழந்தைகளுக்கு ....
தலை துவட்டுகிறது ..
காலை சூரியன் .

காதல்

அடம் பிடித்து வாங்கிய ...
இனிப்பு காதல் .

மருந்து

உன் கண்களுக்குள் ...
முட்டி மோதி...
காயம் பட்ட காதலுக்கு ..
மருந்திட்டு கொண்டிருகிறது கவிதை .

Tuesday, 29 November 2011

உன் நினைவுகள் இல்லாமல் ..

உளி இல்லாமல் ..
சிற்பம் இல்லை .
தூரிகை இல்லாமல் ..
ஓவியம் இல்லை .
உன் நினைவுகள் இல்லாமல் ..
நான்  இல்லை .

மரணதண்டனை

என்னை கடித்த ,
கொசுவிற்கு மரணதண்டனை ..
கொடுத்தாய் சரி ,
என் கன்னத்தை வேறு ...
ஏன் வீங்க வைத்திருகிறாய் ?

கள்ளத்தனம்

கனவு காண்பதெலாம் ..
மறந்து போகிறது ..
அவளிடம் சொல்லாதே என்று ..
என் கனவிற்கு கள்ளத்தனம் ..
சொல்லிக்கொடுத்தது நீயா ?

கடல் அலைகள்

நீ நான் என ..
போட்டி போட்டுகொண்டு ...
கொஞ்சளோடு வந்து ....
நம்மை விளையாட அழைக்கும் 
கடல் அலைகள் .

தேடல்

பாலை விட்ட தென்னைக்கு ...
புட்டு சுற்றிய .....
அம்மாவையும்  அப்பாவையும் ....
பூட்டிய வீடுகுள்ளும் ....
தேடிகொண்டிருக்கும் ...
தென்னை வேர்கள் .

மை கசிவு

உன் பெயர் எழுத ....
என் விரல் பிடித்த பேனா ....
தாள்களில் ஜொள் விட்டது போதாதென ...
என் விரல்களிலும் அதன் மை கசிவு .

அலைபேசி

உறங்கும் குழந்தை ..
அலறி எழுவதை போல ....
சத்த மிடும் அலைபேசியை ....
எடுக்க ...
சிட்டாய் பறந்து வருகிறேன் ...
அழைப்பு உன்னுடையது இல்லை  எனில் ...
அப்படி ஒரு கோபம் வருகிறது .

உன் நினைவு போதும் .

விரட்டும் வேலைகள் ..
அலை மோதும் குழப்பங்கள் ..
இதற்கு நடுவிலும்
எனக்கான எல்லா ..
தனிமைலும் ..
என்னோடு நீ வேண்டாம் ..
உன் நினைவு போதும் .

நேச மழை


எவர் தடுபினும் ...
நடு வழிலேயே ..
நின்று விட போவதில்லை ...
மழை .
உன் மீதான என் அன்பை போல .

காதல் வந்த பிறகு ..

காதல் வந்த பிறகு ..
கோலமிட சென்று ..
உன் பெயர் எழுதி வருகிறேன் ..
குளிக்க சென்று ..
குருவியோடு பேசி நிற்கிறேன் ...
சாப்பிட அமர்ந்து ...
சத்தமிலாமல் படுத்துகொள்கிறேன் ...
கண்ணாடி முன்பு நின்று .
ஓவியம் வரைகிறேன் ...
என்னுள் வந்த மாற்றம் எல்லாம் ...
உன்னுள்ளும் நிகழ்கிறதா ?

கோபம்

குடுமி பிடித்து ...
மண்ணில் உருண்டு பிரண்டு ...
சண்டை இடும் ...
மழலைகளை காணும் போதெலாம் ...
கொஞ்சம் கோபம்  வரத்தான் செய்கிறது ,
என்னோடு சண்டையே ...
போடாத அக்காவின் மேல் .

கிரஹபிரவேசம்

தினம் தினம் ...
புது வீடு கட்டி ...
கிரகபிரவேசதிருக்கு ..
நம்மை அழைக்கும் ..
சிலந்திகள் .

மறதி

பசி வயற்றை கிள்ளும் ...
போது கூட ...
ஜாபகம் வரவே இல்லை ..
வீட்டிலேயே மறந்து விட்டு வந்த ...
மதிய உணவு .

விருந்தோம்பல்

எந்த விருந்தினருக்காக...
என் வீட்டு வாழை மரத்தில் ...
இலை கழுவிகொண்டிருகிறது ...
மழை .

ஆனந்த அறிவிப்பு

என்ன அவசரமானாலும் ..
பிடித்த பாடலை ...
கேட்பதை போல ...
நின்று கேட்டுவிட்டு ...
பின்பு நகர்கிறேன் ...
'புறப்பட தயாராய் இருக்கும் ...
தடம் எண்'.....
எனும் எங்கள் ஊர் பேருந்து அறிவிப்பை .

ஒற்றை பார்வைக்காய்

குழைந்து கொண்டிருக்கும் ..
சாதம் ,
பொங்கி ஊற்றி அடுப்பை ..
நனைத்து கொண்டிருக்கும் பால் ..
எதையும் பொருட்படுத்தாமல் ...
பொறுமையோடு ...
காதுகொண்டிருகிறேன் வாசலில் ...
தெருகோடி வரை சென்று ...
திரும்பி பார்த்துபோகும் ..
உன் ஒற்றை பார்வைக்காய்.

கண்ணா மூச்சி

நீயே வந்து பேசுவாய் ...
என நானும் ...
அவளே வந்து பேசட்டும் ..
என நீஉம் ..
நம் கண்களை நாமே ..
கட்டிக்கொண்டு நிற்கிறோம் ..
நம் முன் கண்ணாமூச்சி ...
ஆடுகிறது காதல் .

Monday, 28 November 2011

ஏனிந்த கோபம் ?

சாலையோர மரங்களுக்கு ...
தலைக்கு ஊற்ற வந்த ....
மழைதாய்க்கு ...
சாலை இன்   மீது என்ன கோபம் ...
இப்படி சேத படுத்தி சென்று விட்டால் .
நீ கவிஞனாக வேண்டும் ...
என்பதற்காக ..
என் காதலை ஏன்...
உயிரோடு புதைக்கிறாய் ?