Friday 23 December 2011

தொடரும் ....

தொடரும் ....
எனும் வார்த்தைக்கு பின்பு தான் ..
எத்தனை எத்தனை ..
உச்சு கொட்டல்கள் ..
எத்தனை எதிர்பார்ப்புகள் ..
ஏன் தான் ஆரம்பித்தோமோ ..
என்ற தவிப்பு ..
இது போலவே காத்திருக்கிறேன்  நானும் ...
பேசிகொண்டிருக்கும் போதே ..
ஒரு நிமிடம் என்று ...
உரையாடலை துண்டித்து போகும் உனக்காக .
சசிகலா .

24 comments:

  1. இதுவும் தொடருமா ? saran

    ReplyDelete
  2. நன்றி சரண் அவர்களே .

    ReplyDelete
  3. சௌந்தர் & மேவி
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி ..

    ReplyDelete
  4. கதவைத்தாண்டி தெரியும் அழகிய முகம் போலவே
    வார்த்தைகளை மீறி உணர்வுகள் வெளிப்பட்டு பிரமிப்பூட்டுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  5. அருமையான உவமையுடன் கூடிய கவிதை! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  6. மிகவும் அருமை! த.ம. 3
    பகிர்விற்கு நன்றி சகோதரி! பதிவுலகில் புதியவன்.
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"


    த.ம.

    ReplyDelete
  7. தவிப்பு தெரிகிறது..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..

    வாக்கு (TM-04)
    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    ReplyDelete
  8. சௌந்தர் ,மேவி,Ramani,கவிப்ரியன்,திண்டுக்கல் தனபாலன்,”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி,மதுமதி....
    தங்களின் அனைவரது ஆசிவாதமாமும் கிடைக்க பெற்றமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  9. மிக அருமை

    சின்ன சின்ன விடயங்களில் ஏற்ப்படும் உணர்வுகளை பதிவு செய்வது மிக அருமை

    கவிதை மிக அழகு

    ReplyDelete
  10. மிக்க நன்றி .
    நிவாஸ்

    ReplyDelete
  11. தவிப்புடன் துடிக்கும் இதயமாய் கவி வரிகளும் ...
    அழகிய சொல்லாடல் .. வாழ்த்துகள்

    ReplyDelete
  12. மிக்க நன்றி அரசன் அவர்களே .

    ReplyDelete
  13. ஒரு கணம் ஒரு யுகமாகும் நேரமிதில் தான் எத்தனை வலிகள்.... அருமை.

    ReplyDelete
  14. வலிகளுக்கு மருந்தாகிறது உங்கள் விமர்சனங்கள் .
    நன்றியோடு சசிகலா .

    ReplyDelete
  15. தவிப்பின் துடிப்பைத் துல்லியமாய்ச் சொல்லிச் செல்லும் வரிகள். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  16. மிக்க நன்றி தோழி கீதா அவர்களே .

    ReplyDelete
  17. இதயத்தை தொடுகின்ற அழகிய வரிகள். ஒவ்வொருவர் மனதிலும் ஒளிந்திருக்கும்
    வேதனையை வெளியே கொண்டு வந்த
    வரிகள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராமன் அவர்களே .

    ReplyDelete
  19. சசி ,
    சிறு உணர்வுகளையும் சித்திரமாய்த் தீட்டும் உங்கள்
    பாணியே தனி. அருமை. நீங்களும் 'ஒரு நொடி , இதோ
    வருகிறேன் ' என்று சொல்லித் தான் பாருங்களேன் தோழி.

    ReplyDelete
  20. நமக்கு பிடித்தவர்களை தவிக்க விடும் சக்தி என்னிடம் இல்லை ஸ்ரவாணி தோழி அவர்களே . தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete