Monday 19 December 2011

உறக்கம் கலைக்கும் வரிசையில் .

உறங்க மறுத்த இமைகளை
இழுத்து அணைத்து
உறங்கச்  செல்கிறேன் ....
சுரீர்ரென்று  முகத்தில் அடிப்பது போல
ஓட்டின் மீது விழும்
மழைத்தூறல் ..
அடித்து பிடித்து எழுந்து அமர்கிறேன் ,
மடியில் வந்து அமர்ந்து கொள்கிறது ..
உன் நினைவு ..
சமாதன படுத்தி உறங்க செல்வதற்குள் ..
இடையே வந்து பயமுறுத்துகிறது ..
இடியும் மின்னலும் ...
அதையும் சமாளித்து ..
பட படவென அடிக்கும் நெஞ்சை ..
எச்சில் விழுங்கி தட்டிகொடுப்பதர்க்குள் ..
மின் வெட்டும் சேர்ந்து கொள்ள
மிரள விழித்து ..
போர்வைக்குள் தஞ்சம்
புகுந்த எனை ..
காதுக்குல் இசை பாடி ..
வெளி வரச்சொல்லும் கொசு ..
இன்னும் எத்தனை பேர் ..
இருக்கிறார்கள் ....
என் உறக்கம் கலைக்கும் வரிசையில் .

10 comments:

  1. உணர்வுகளின் நினைவுகளில் தான் எத்தனை இடைஞ்சல்கள்.
    உறக்கத்திற்கு இத்தனை எதிரிகளா????

    சந்தடி சாக்கில் மின்வெட்டையும் உள்ளே நுழைத்துள்ளீர்கள்.
    அருமை.

    150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ...தொடரட்டும் உங்கள் வாழ்த்துரை ..

    ReplyDelete
  3. ஹா...ஹா...ஹா.. நன்று அலங்கு பண்ணிய அழும்புதான்
    முத்தாய்ப்பாய் நிற்கிறது.. நகைச்சுவை மிளிரும் கவிதை..

    ReplyDelete
  4. நன்றி தமிழ்

    ReplyDelete
  5. இவை மட்டுமா வார்த்தைக் கட்டுக்குள் அடங்காது
    திமிறித் திண்டாடவைக்கும் படைப்புக்கான கருவையும் சொல்லலாம்
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு

    ReplyDelete
  6. படைப்புக்கான கருவையும் ,முற்றிலும் உண்மையே நன்றி .

    ReplyDelete
  7. படங்களும் பாடல்களும் மிக்க அருமை தோழி ...

    ReplyDelete
  8. தங்கள் வருகைக்கும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

    ReplyDelete
  9. சொல்ல வந்ததை துல்லியமாய் சொல்லிய விதம் சிறப்பு.. வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  10. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete