Thursday 10 January 2013

உனக்கான இடைவெளியில் !



உனக்கும் எனக்குமான
இடைவெளியை இட்டு நிரப்ப
நினைவுகளை உடனழைக்கிறேன்
இடம் வலம் என அதுவும்
தனக்கொரு இடத்தை தேடியபடி.

மழலையின் நடனமாய்
நானும் ரசித்து  நிற்க.
நீயோ எனைப்பார்த்து
காற்றில் அசைந்தாடும்
மலர்க்கொத்து என்கிறாய் - உன்
வர்ணனையில் வழுக்கி விழுந்த
நாணத்தை மறைக்கத்தெரியாது.

மௌன மடலவிழ்க்குமுன் -நீயோ
இதழ் மெத்தையில் உறங்கும்
வார்த்தைகளை எழுப்பிவிடாதே என்கிறாய்.
கவியரங்கத்தில் நுழைந்த ரசிகையாய்
நமக்கான ஒவ்வொரு தனிமையிலும்..
விமர்சிக்கவும் மறந்து வியந்து நிற்கிறேன்.

11 comments:

  1. தனிமை இனிமையே சசி !
    உங்கள் வற்றாத கவிதை ஊற்றிற்கு
    என் சல்யுட் !

    ReplyDelete
  2. காதலை அழகாகச் சொல்லும் கவிதை

    ReplyDelete

  3. வணக்கம்!

    அழகிய சொற்கள் அணிந்தன ஆடைகள்!
    பழமாய் இனிக்கும் படைப்பு

    ReplyDelete

  4. அருமை. தனிமைக்கு நினைவுகள் துணை. மன வெறுமையாகும் மௌன நிமிடங்களுக்கு வார்த்தைகள் மாற்றாகலாம்!

    //மௌன மடிலவிழ்க்குமுன்//

    [மௌன] மடலவிழ்க்குமுன்..?

    ReplyDelete
  5. //கவியரங்கத்தில் நுழைந்த ரசிகையாய்
    நமக்கான ஒவ்வொரு தனிமையிலும்..
    விமர்சிக்கவும் மறந்து வியந்து நிற்கிறேன்.//
    super super .........

    //நினைவுகளை உடனழைக்கிறேன்
    இடம் வலம் என அதுவும்
    தனக்கொரு இடத்தை தேடியபடி//
    fantastic ......
    sorry am typing in english i will come back and tell more ...

    ReplyDelete
  6. நினைவுகளை உடனழைக்கிறேன்
    இடம் வலம் என அதுவும்
    தனக்கொரு இடத்தை தேடியபடி.

    கவியரங்கத்தில் நுழைந்த ரசிகையாய்
    விமர்சிக்கவும் மறந்து வியந்து நிற்கிறேன்.

    அருமை

    ReplyDelete
  7. கடைசி 3 வரிகள் அற்புதம் சசி !

    ReplyDelete