Tuesday 1 January 2013

பூ வாசம் !



பூ பறித்து போகும் செல்லையா-எனை
ஆர்பரித்து போவதேன் சொல்லையா

குண்டு மல்லி பறிச்செடுக்க
கூடையுந்தான் நிறைஞ்சிருக்க-நானும்
அரை குடமா தளும்புறேனே
அல்லாடி நிக்குறேனே

ஆத்தோரம் போறவரே - நெஞ்ச
அணை கட்டி போவிரோ
தோப்போரம் நான் வரவா -பூவும்
தொடுத்தெடுத்து நான் தரவா

காதோரம் சேதி சொல்லி
காத்தாட்டம் போறவரே
காதல் சூதாட்டம் ஆடுறியே-என்
கண்ண கட்டி ஓடுறியே.

கோத்தெடுத்த மாலையுந்தான்
கோவமாத்தான் பாத்திடுதே..
சாளரத்த சேர்த்தணைச்சா
சாந்தி பெருமா எம்மனசும்.

18 comments:

  1. காதல் கவிதையை நாட்டுப்புறம் கலந்து அழகாய் பாடி இருகிறீர்கள் சகோ

    ReplyDelete
  2. ஆத்தோரம் போறவரே - நெஞ்ச
    அணை கட்டி போவிரோ................மண்வாசனை அழகு

    ReplyDelete
  3. நல்லதொரு செல்லமான
    சினுங்கலான காதலிது...

    வாழட்டும் இதுபோன்ற
    உண்மையான காதல்கள்...

    ஒருதலை காதலால்
    வென்றிடமுடியாது என்றுமே..

    மாறாக வன்முறையில்
    அல்லவா முடிந்து விடுகிறது...

    இப்போது வரும் செய்தி
    எல்லாம் இப்படித்தானே இருக்குது...

    இருவரும் ஏற்று செல்லும்
    அன்பே இறுதிவரை நிலைக்கும்...

    அழகிய காதலை சொன்ன
    சசி கலா தங்களுக்கும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  4. பாட்டாவே பாடலாம்

    ReplyDelete
  5. காதல் கவிதை அருமை.

    ReplyDelete
  6. ''...சாளரத்த சேர்த்தணைச்சா

    சாந்தி பெருமா எம்மனசும்....
    சாளரத்த சேர்த்தணைச்சா

    சாந்தி பெருமா எம்மனசும்...''

    HA1..HA1.....Kaathal!...
    Happy new year.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்கை சசி...

    மணக்கிறது பூ வாசம்

    ReplyDelete
  8. கிராமத்து வாசம்! மிகச்சிறப்பான கவிதை!

    ReplyDelete
  9. பூ! வாசம் வீசுது சசிக்கா!! என்னை வயல் வரப்புல நடக்க விட்டுடீங்க..
    கடைசியா கொஞ்சம் சோகமாக்கிடீன்களே ...

    ReplyDelete
  10. கிராமத்துக் காதல்...
    இளையராஜாவுக்கு ஒரு போன் போட்டிடுறேன்...:)

    ReplyDelete
  11. மெட்டுப் போடத்தான்

    ReplyDelete
  12. அழகான நாட்டுப் பூ வாசம்.

    ReplyDelete
  13. கோத்தெடுத்த மாலையுந்தான்
    கோவமாத்தான் பாத்திடுதே..

    பூ மாலை கொவமானதால் பாமாலை வந்ததோ?

    ReplyDelete
  14. பூ பறித்து போகும் செல்லையா-
    >>
    பேரே பட்டிக்காட்டா இருக்கு, நாட்ட்டாமை பேரை மாத்துங்கப்பா

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சசிகலா.
    பாடல் அருமை.
    த.ம.6

    ReplyDelete
  16. சினிமாவில் கிராமியப் பாடல் எழுதப் போகலாம் நிச்சயம் வெற்றி உங்களுக்கே... உங்களை பாட அனுப்பலாமா என்று நம் சகோ ராஜியிடம்தான் கேட்க வேணும்

    ReplyDelete
  17. கிராமத்திய வாசம் நுகர்ந்தேன்..

    ReplyDelete