Sunday 6 January 2013

உன் வரவே பூவாசம் !



அக்கரையப் பாத்திருந்தேன்
ஆத்தங்கர ஓரத்திலே-மாமா
இக்கரைக்கு வருவாயா-உன்
ஈரக்கால் பதிப்பாயா-கண்
உனையே  தேடிநிக்க-பெண்
ஊமைமனம் தாங்கி நிற்க
என்னையிங்கே  தவிக்கவிட்டு
ஏன்போன பொழப்பத் தேடி...
ஐயிரண்டு ஜாமம் போச்சியிங்க
ஒதுக்கிப்போட்ட நார்போல
ஓரமா நானிருந்து வேவது ஏனய்யா?
சூறாவெளிக் காற்றுபோல மனம்
ஏதேதோ நெனைக்குதய்யா
சூரியனும் வம்புக்கு தினம் இருள்
போர்வப் போத்திப் போகுதய்யா!
காட்டத்தி சிரிப்பாக பூத்துநிற்கையில
நான்மட்டும் நீரோடை நிலவுபோல
நிழலாடி மாய்கின்றேன்-கண்ணாளா
உன்வரவே பூவுக்கு வாசம் கண்ணா
எனையாளும் சீமானே எம்புட்டுநாள்
துயில்மறக்க தாலாட்டு சீர்வெறுக்க!

6 comments:

  1. உன்வரவே பூவுக்கு வாசம் கண்ணா

    பூவாய் வாசம் நிரப்பிய பகிர்வு...

    ReplyDelete
  2. வரவிற்குக் காத்திருக்கும் உறவுக் கவிதை
    அழகு !

    ReplyDelete
  3. நியாயமான ஏக்கம் வருவார் அன்பையும் தருவார்

    ReplyDelete
  4. //காட்டத்தி சிரிப்பாக பூத்துநிற்கையில
    நான்மட்டும் நீரோடை நிலவுபோல
    நிழலாடி மாய்கின்றேன்-கண்ணாளா
    உன்வரவே பூவுக்கு வாசம் கண்ணா
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  5. ஏக்கம் தீர்க்க அவர் வருவார்...பொறுமை மிக அவசியம்.


    இந்த கவிதையின் கதாநாயகி ஏங்குவது எதற்கு? பக்கத்து வீட்டுக்காரி தன் கணவனை மொத்து மொத்து என்று மொத்துகிறாறே நாமும் அதை மாதிரி மொத்த முடியவில்லை என்ற பொறாமையில்தானே சந்தர்ப்பத்தை பார்த்து ஏக்கமாக இருக்கிறார்?

    அது தெரிந்த கதாநாயகன் இக்கரைக்கு வராமல் இருக்கிறான்.
    .

    ReplyDelete