Monday 28 January 2013

உலகம் ஒரு வாடகை வீடு !


அப்பாவின் அறிவுரைகள்
அடிக்கரும்பு உணருமுன்.

ஆட்டத்தின் நுனுக்கத்தை
ஆலாய் நின்று உணர்ந்தபோது
ஆறறிவும் ஏற்கவில்லை
ஆசை வென்று வீழ்த்தியது.

இதயத்தில் சுத்தம் வேண்டும்
இருப்பதில் வாழ வேண்டும்
இல்லாததைத் தேடிப்போனால்
இன்பங்கள் விடை கேட்கும்.

ஈடில்லா வாழ்வமைய
ஈகைகள் செய்ய வேண்டும்
ஈரேழு உலகம் இணைந்து
ஈனம் சொன்னாலும் ஏற்காதே.

உண்மையாய் நன்மை செய்
உயர்வான எண்ணம் சூடி
உனதென்று ஏதுமில்லை
உலகம் ஒரு வாடகை வீடு.

ஊமையாய் உண்டு உறங்கும்
ஊற்றுக்கண் திறந்து வை
ஊசலாடும் ஆசைப்பாதை
ஊனமெனத் தள்ளிவிடு.

எச்சல் சோறு வேண்டி
என்னாளும் கலங்காதே
எரிகின்ற வீட்டிலிருந்து
எதையும் ஏய்த்து எடுக்காதே.

ஏமாற்றும் விழிகளுக்குமுன்
ஏமாந்து மாயாதே..

ஒன்றில் ஒன்று வாழ்ந்தால்
ஒற்றுமை அதை அழிக்காதே
ஓய்வின்றி பணம் சேர்க்க
ஓடியோடி பதறாதே..

ஔஷதமாய் அன்பை அணி
அஃகினியாய் தீமை எதிர்.

13 comments:

  1. சிந்திக்கவைக்கும் பயன் தரக்கூடிய கருத்துகள்

    அருமை தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க

    ReplyDelete
  3. //உனதென்று ஏதுமில்லை
    உலகம் ஒரு வாடகை வீடு//

    உலகம் என்ன ? நம் உடலே ஒரு வாடகை வீடு தானே !!

    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு ...

    வள்ளுவன் சொல்லியதை நினைவில்லையா மனமே ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. சிந்தனையை தூண்டும் வரிகள் சிறப்பான வார்த்தை கோர்ப்பில் அமைந்திருக்கிறது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஊசலாடும் ஆசைப்பாதை
    ஊனமெனத் தள்ளிவிடு.
    >>
    மனசுல ஊசலாட்டம் மட்டும் இருந்துச்சுன்னா ஒரு கப் காஃபி கூட குடிக்க முடியாதுப்பா

    ReplyDelete
  6. ////////ஒன்றில் ஒன்று வாழ்ந்தால்
    ஒற்றுமை அதை அழிக்காதே
    ஓய்வின்றி பணம் சேர்க்க
    ஓடியோடி பதறாதே..

    ஔஷதமாய் அன்பை அணி
    அஃகினியாய் தீமை எதிர்.////////
    ஆஹா அஹா அருமை

    ReplyDelete
  7. அருமையாக கருத்துக்கள் உள்ள கவிதை.
    வாழ்த்துக்கள் ச்சிகலா.

    ReplyDelete
  8. அகர வரிசை கவிதை அருமை.
    த.ம.5

    ReplyDelete
  9. அட... இன்னொரு சசிச்சூடி! இப்பவும் அருமையான கருத்துக்கள் அனாயசாமா வந்து விழுந்திருக்கு. மீண்டும் ஒருமுறை படிச்சு ரசிச்சேன். சூப்பர் தென்றல்!

    ReplyDelete
  10. உயிரெழுத்துக்களை மோனையாய்க் கொண்டு
    உன்னத வாழ்விற்க்கான கருத்தை உயிராகக் கொண்ட
    கவிதை அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete


  11. இதயத்தில் சுத்தம் வேண்டும்
    இருப்பதில் வாழ வேண்டும்
    இல்லாததைத் தேடிப்போனால்
    இன்பங்கள் விடை கேட்கும்.

    அருமையான கருத்துக்கு எடுத்துக் காட்டு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete