Wednesday 2 January 2013

சட்டத்தால் பயனில்லை !



 முன்னுரை மொட்டாக மகவாக
முகவுரை குமரியாக மலராக
பதிவுரை தாரமாக தாயாக
முடிவுரை உதிர் இலையாய்.

பெண்ணென்றால் கண்ணென்று
பேசுகின்ற சமுதாயம்
கள்ளிப்பாலுக்கு தப்பிய இனம்
காமப் பார்வையில் தப்ப இயலாது
கொல்கின்ற அவலங்கள்.

குலமகள் என்றுரைப்பார்
லட்சுமி என்றழைப்பார்
வார்த்தையில் வாழும் நேசம்
வாழ்க்கையில் பொய்யுரையாய் .

மான் மயில் போலென்பார்
குடும்பத்தலைவி என்பார்
குலவிளக்காய் பாடிடுவார்
கிடைக்கும் வரை தேடிடுவார்
கிடைத்தால் அடிமைகளாய்.

தூண்டில் மீன்வாழ்வெதற்கு ?
துவண்டு போகும் நினைவோடு
துடித்து வாழும் நிலையெதற்கு ?
வேலை செய்யும் அடிமைகளாய்
வேஷங்கள் போட்டெதற்கு ?

தன்னையும் கொடுத்திங்கே
தண்டனையும் அடைந்தாலும்
தரணியில் பெண் என்றும்
சுக போகப் பொருளாக.
பிள்ளை பெரும் இயந்திரமாய்
இணையாய் நினைப்பாரில்லை.

ஆற்றுவார் யாருமில்லை
அணைத்து தேற்றுவார் காணவில்லை
போற்றுவார் தேடியோடு முன்
சாற்றுவார் தெரு நாய்ப்பட்டம்
மனித குலம் மாறாதா ?
மன எண்ணம் மாறாமல்
சட்டத்தால் பயனில்லை.

15 comments:

  1. //சட்டத்தால் பயனில்லை.//

    என்ன செய்யமுடியும் என்று தெரியவில்லை?

    ReplyDelete
  2. சடங்கென்ற பொன் விலங்கிட்டு
    அடிமையாய் பெண்ணினம்!
    சகலமும் அவள் என்றுரைத்தே
    ஏய்கின்ற வர்கங்கள்!
    கொடியது மரம்சாய்தே வாழும்
    உவமையாய் பொய்மொழி!
    கல்லானாலும் பொறு கணவன்
    கடவுள் அடிமைத்தனம்!
    வார்த்தை விளையாட்டாய் வாழ்வு
    சீதையாய் அலங்காரப் பாட்டு!
    போதைப் பொருளாய்ப் பெண்மை
    தீராத சாபம் இவர்க்கு!
    தன்காலில் நிற்கின்ற வரையிலிவர்
    விமோசனம் கேள்விக் குறியே!!

    ReplyDelete

  3. //மன எண்ணம் மாறாமல்
    சட்டத்தால் பயனில்லை.//
    உண்மைதான். நம்மவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டை வழியே தப்பிப்பவர்கள்

    ReplyDelete
  4. அருமையான கவிதை!
    கள்ளிப்பாலுக்கு தப்பிய இனம்
    காமப் பார்வையில் தப்ப இயலாது
    கொல்கின்ற அவலங்கள்.
    மனித குலம் மாறாதா ?
    மன எண்ணம் மாறாமல்
    சட்டத்தால் பயனில்லை.//

    தனிமனித ஒழுக்கம் சிறந்தால் மாற வழியுண்டு!
    நன்றி!

    ReplyDelete
  5. கள்ளிப்பாலுக்கு தப்பிய இனம்
    காமப் பார்வையில் தப்ப இயலாது
    கொல்கின்ற அவலங்கள்.

    இன்றைய நிலையை எடுத்துரைக்கும் சாட்டை வரிகள்

    மனித குலம் மாறாதா ?
    மாற வேண்டும்

    ReplyDelete
  6. மன மாற்றம் நிகழ வேண்டும்! உண்மைதான்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. பெண்ணின் நிலைகளைப் பற்றி கவிதையில் வடித்த விதம் அருமை !

    // தனிமனித ஒழுக்கம் சிறந்தால் மாற வழியுண்டு!//

    சரியாகச் சொன்னார் அன்புச்சகோதரர் சேஷாத்ரி அவர்கள்

    ReplyDelete
  8. மனித குலம் மாறாதா ?
    மன எண்ணம் மாறாமல்
    சட்டத்தால் பயனில்லை.

    அருமையான முடிவு!

    ReplyDelete
  9. \\மனித குலம் மாறாதா ?// நல்ல கேள்வி

    ReplyDelete
  10. மன எண்ணம் மாறாமல்
    சட்டத்தால் பயனில்லைதான்

    ReplyDelete
  11. //மன எண்ணம் மாறாமல்
    சட்டத்தால் பயனில்லை.//

    அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்

    ReplyDelete
  12. குலவிளக்காய் பாடிடுவார்
    கிடைக்கும் வரை தேடிடுவார்//
    உங்களின் வருத்தம் உண்மைதான்

    ReplyDelete
  13. சட்டம் இங்கே தேவையற்றது சசி.மனிதம் மனிதமாய் வாழ்ந்தாலே போதும் !

    ReplyDelete
  14. //வார்த்தையில் வாழும் நேசம்
    வாழ்க்கையில் பொய்யுரையாய் .
    //

    இதொன்றே போதும்... இதான் இன்றைய நிலை :(

    ReplyDelete