Thursday 31 January 2013

எல்லாமே இங்கு இருப்பது தான் !



இறக்கையின்றிப் பறக்கின்ற
பகலவனும் வான்முகிலும்
விழாமல் காக்கின்ற
அவன் யார் தேடுகிறேன்.

மண்ணில் வாழும் அத்தனையும்
மனிதனுக்கு பயன்படும்
விந்தையை கண்டுபிடித்த
விஞ்ஞானியைத் தேடுகிறேன்.

புறப்படுமிடம் அறியாமல்
உருவெதுவுமில்லாமல்
சுழன்றாடும் காற்றதனை
இயக்குவது யார் ? நினைக்கின்றேன்.

நீர் வேறு நிலம் வேறு எனப்
பிரித்து வைத்து கோடு போட்டு
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
காவலன் யார் ? பாடுகிறேன்

திரவத்தின் மேல் மண் அடுக்கை
நேர்த்தியாய் அடுக்கி வைத்து
நடையெல்லாம் அதன் மீது
வாழவைத்தது யார்? கேட்கின்றேன்.

கண்டுபிடிக்க ஒன்றுமில்லை
எல்லாமே இங்கு இருப்பது தான்
கண் கண்ட பொருளை நாம்
மற்றவர்க்கு இயம்பின் - கண்டுபிடிப்பு.

16 comments:

  1. சொன்னது அத்தனையும் உண்மைதான்...
    இயற்கையாக உள்ளதை யாரும் அறிவதற்கு முன் நாம் சொல்லி விட்டால் அது நம்முடைய கண்டுபிடிப்பு.. இப்படித்தான் பாதிக்கு மேல்
    நாம் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள்....

    உண்மையிலேயே புதிதாக கண்டுபிடித்த ஒரு விஞ்ஞான விஷயத்தை தான் நம்மாட்கள் பாதி பேர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள். உதாரணம் நம் எத்தனையோ விஞ்ஞானிகளை சொல்லலாம். அவர்கள் பட்ட பாட்டினையும் எல்லோரும் அறிந்த ஒன்றே.

    அது என்னவோ நம்மாலும் எந்த ஒரு விஷயத்தையும் கண்டுபிடிக்கவும் தெரியாது... அதற்கேற்ற முயற்சியும் எடுக்கமாட்டோம்...
    யாரவது ஒருவர் கஷ்டப்பட்டு தன்னுடைய மூளையை கசக்கி அரும்பாடு பட்டு வருடக்கணக்காக தன்னுடை கையில் உள்ள பணத்தை செலவு செய்து கண்டுபிடிக்கும் அற்புதத்தை ஏற்கும் நற்குணமும் கிடையாது. அதனால் தான் நாம் இன்னும் அப்படியே இருக்கிறோம். இதுதான் உண்மையும் கூட.

    தெளிவாக சொன்னீர்கள் சசி கலா...
    பாராட்டுக்கள் உங்களுக்கு இந்த விஷயத்தை
    கண்டுபிடித்து சொன்னதற்கு.... இதுவும் ஒருவகை
    அறிய கண்டுபிடிப்பு தான். ஆனால் நான் இந்த கண்டுபிடிப்பை மனமார ஏற்றுக்கொள்கிறேன்....

    ReplyDelete
  2. //கண் கண்ட பொருளை நாம்
    மற்றவர்க்கு இயம்பின் - கண்டுபிடிப்பு.//

    சரியான கணிப்பு!

    ReplyDelete
  3. புரிந்ததாக நினைப்பதற்குள் இருக்கும் புதிரையும்
    புதிராக இருப்பதற்குள் இருக்கும் எளிய விடையையும்
    கண்டு தெளிதலைக் கூட கண்டுபிடிப்பு எனச் சொல்லலாமோ ?
    நான் சொல்வது இன்வென்ஸன்
    நீங்கள் சொன்னது டிஸ்கவரி எனக் கூடக் கொள்ளலாமா ?
    அருமையாகச் சிந்திக்கிறீர்கள்
    அழகாகப் பதிவு செய்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. போட்டிகள் தொடரட்டும்... கண்டுபிடிப்புக்கள் பெருகட்டும்-மனித மனம் கெடாமல் இருக்க...

    ReplyDelete
  5. கண் கண்ட பொருளை நாம்
    மற்றவர்க்கு இயம்பின் - கண்டுபிடிப்பு.
    // உண்மை வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி

    ReplyDelete
  6. வாழ்வில் தேடுதல் அவசியம் !

    சிந்திக்க வைக்கும் கவி

    தொடர வாழ்த்துகள்....

    ReplyDelete
  7. அப்படி போடுங்க! அருமை.

    ReplyDelete
  8. கண்டுபிடிக்க ஒன்றுமில்லை
    எல்லாமே இங்கு இருப்பது தான்
    கண் கண்ட பொருளை நாம்
    மற்றவர்க்கு இயம்பின் - கண்டுபிடிப்பு.

    அருமையான வரிகள்!
    வாழ்த்துக்கள்.
    (என் மெயிலைப் படிக்க முடிந்ததா...?
    பதில் போடுங்கள்)

    ReplyDelete
  9. கண்டுபிடிக்க ஒன்றுமில்லை
    எல்லாமே இங்கு இருப்பது தான்
    கண் கண்ட பொருளை நாம்
    மற்றவர்க்கு இயம்பின் - கண்டுபிடிப்பு./

    கண்டுபிடித்த தேடலின் முயற்சி அற்புதம் ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. கடவுளை தேடுங்கள் தெரிந்த உடன் சொல்லுங்கள்

    ReplyDelete
  11. நல்லதோர் கவிதையாக எடுத்துத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  12. தேடினால்தான் சிக்குவான்!

    ReplyDelete
  13. அருமை...

    சரியான கண்டுபிடிப்பு !

    ReplyDelete
  14. //அவன் யார் தேடுகிறேன்……
    விஞ்ஞானியைத் தேடுகிறேன்……
    இயக்குவது யார் ? நினைக்கின்றேன்…..
    காவலன் யார் ? பாடுகிறேன்……
    வாழவைத்தது யார்? கேட்கின்றேன்….. //

    நன்றாக சிந்திதுள்ளீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரே விடைதான். கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு சக்தி எல்லாவற்றையும் இணைத்து வைத்துள்ளது என்பதுதான்.

    ReplyDelete
  15. இயற்கையோ, கடவுளோ இயக்குகிற சக்தி கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது. நல்ல கவிதை சகோதரி!

    ReplyDelete