Tuesday 8 January 2013

துளித் துளியாய் !



நினைவுகளைத் தின்றே
உயிர் வாழும்
காதல் பறவை நான்.

உறக்கம் மறந்து
உலவுகிறேன்...
உனக்கான வார்த்தை தேடலில்.

நேற்றைய தேடலிலும்
இன்றைய கோபத்திலும்
நாளைய புரிதலிலும்-உன்னில்
பிறழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும்
எனக்கான நேசம்.

தவிர்க்க முடியாத
சுவரொட்டி விளம்பரமாய்
நீ போகும் பாதையில்
என் புன்னகைப் பூக்கள்.

சாப்பிடக் கூடவிடாமல்
மடியில் சம்மணமிட்டு
அமர்ந்திருக்கிறது உன் நினைவு
நீ போகும் போதே அதையும்
அழைத்துக்கொண்டு போகமாட்டாயா ?

14 comments:

  1. எல்லா காதலர்களின் புலம்பல் ஒன்றாகத்தான் இருக்கிறது,

    நல்ல கவிதை

    ReplyDelete
  2. // நினைவுகளைத் தின்றே
    உயிர் வாழும்
    காதல் பறவை நான்.//

    தொடக்கமே அருமை! கவிதைக்கு ஏதோ ஒருவகையில் அடிப்படையே காதல்தானே

    ReplyDelete
  3. //நீ போகும் போதே அதையும்
    அழைத்துக்கொண்டு போகமாட்டாயா ?//

    நினைவை அழைத்துக்கொண்டு சென்றிருந்தால் இந்த அழகிய கவிதை கிடைத்திருக்குமா? கவிதையை இரசித்தேன்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நேற்றைய தேடலிலும்
    இன்றைய கோபத்திலும்
    நாளைய புரிதலிலும்-உன்னில்
    பிறழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும்
    எனக்கான நேசம்.

    சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

  5. சாப்பிடக் கூடவிடாமல்
    மடியில் சம்மணமிட்டு
    அமர்ந்திருக்கிறது உன் நினைவு
    நீ போகும் போதே அதையும்
    அழைத்துக்கொண்டு போகமாட்டாயா ?//

    நினைத்ததை நினைத்தபடி அழகாகச் சொல்கிறீர்கள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்


    ReplyDelete
  6. தவிர்க்க முடியாத
    சுவரொட்டி விளம்பரமாய்
    நீ போகும் பாதையில்
    என் புன்னகைப் பூக்கள்.

    நேற்றைய தேடலிலும்
    இன்றைய கோபத்திலும்
    நாளைய புரிதலிலும்-

    ரசிக்க வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நினைவுகளை தின்றே உயிர் வாழும் காதல் பறவை நான்! அருமையான வரிகள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. கடைசி வரியில் காதல் கொட்டிக் கிடக்கிறது.

    ReplyDelete
  9. நினைவுகளைத் தின்றே
    உயிர் வாழும்
    காதல் பறவை கருத்தக்கவர்ந்தது ..பாராட்டுக்கள்..

    ReplyDelete

  10. வணக்கம்!

    துளித்துளியாய் மழைதுாறும்! தேனும் சொட்டும்!
    துயா்அடைத்துக் கண்தலையில் கண்ணீா் கொட்டும்!
    பனிப்பனியாய்ப் பூவிதழில் ஒழுகும் காட்சி!
    பசும்புல்லில் நீா்முத்து! குளிரின் ஆட்சி!
    கொடிக்கொடியாய் மலா்ந்தாடும் காட்டைப் போன்றும்
    குலைக்குலையாய்க் கொழித்தாடும் தோப்பைப் போன்றும்
    கனிக்கனியாய்க் கமழ்ந்தாடும் சொற்கள் சோ்த்துக்
    கவிக்கவியாய்ச் சசிகலா வடித்தார் நன்றே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  11. காதல் காதல்....சாப்பிடவும் முடியாமல் போகுதோ சசி !

    ReplyDelete
  12. தேடல் இருக்கும்போது சாப்படுகூட மறந்துவிடும் உண்மைதான்

    ReplyDelete
  13. வரிகள் அனைத்தும் அருமை! நன்றி!

    ReplyDelete