Friday 4 January 2013

சோக ராகம் !



அல்லிக் குளத்தோரம்
பாட்டு கேட்கும் தேவாரம்
சொல்லெடுத்து நான் தரவா
சோகத்தையும் தான் சொல்லவா

வெட்டருவா தேஞ்சிருக்கு
வேலி மட்டும் மீந்திருக்கு
கொட்டு மழை ஓய்ந்திருக்கு
கோடை எப்பவும் நிறைந்திருக்கு

கூத்து மேடை காணலியே
கொண்டைச் சேவல் கூவலியே
மஞ்சத் தாவணி பறக்கலையே
மார்கழி கோலமும் நிறக்கலையே

ஆத்தங்கரை அம்மணமா
அடுக்குமாடி சம்மணமா
தோத்ததிங்கே இயற்கையம்மா
தோல்வியுந்தான் நமக்கம்மா

20 comments:

  1. தண்ணீர் இல்லாத ஆத்தங்கரை ஓரம் கண்ணீராய் ஒரு கையறுநிலை பாடல்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. கவிதை சொல்ல வேண்டியதை அழகாக சொல்லியுள்ளது! நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. தோத்ததிங்கே இயற்கையம்மா
    தோல்வியுந்தான் நமக்கம்மா//

    அருமை குருவே !

    ReplyDelete
    Replies
    1. குருவா யாருங்க அவங்க ?

      Delete

  4. வணக்கம்!

    நாட்டுப் புறத்தினிலே
    நடந்துவரும் காற்றாகப்
    பாட்டு நீ படிச்ச!
    பாவலன் மயங்குகிறேன்!

    ஆத்தங் கரையிரண்டும்
    அம்மணமாய்க் கிடக்கிறதோ?
    போத்தும் போர்வையெனப்
    பூந்தமிழைப் போட்டாயோ?

    ஒத்த ஓசையிலே
    முற்றும் கவிபடைச்சே!
    சுத்தும் இவ்வுலகம்
    தட்டும் கைகளையே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

      Delete

  5. மீண்டும் வணக்கம்

    பாட்டு இலக்கணத்தைக் கற்க விரும்புவதாக
    அருணாசெல்வம் தெரிவித்தார்!

    என் வலையில்
    வருகின்ற தை மாதத்திலிருந்து

    பாட்டு பாட வா ....

    என்ற தலைப்பில் மரபுக் கவிதையின் இலக்கணத்தை
    எழுதவுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.

    நல்ல இலக்கணத்தை நன்குணா்ந்தால்! நன்மழையாய்
    வல்ல கவிதை வரும்

    நட்புடன்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தமிழ் ஆர்வலர்களுக்கு பயன்படும் பகிர்வு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  6. அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.

      Delete
  7. கூத்து மேடை காணலியே
    கொண்டைச் சேவல் கூவலியே
    மஞ்சத் தாவணி பறக்கலையே
    மார்கழி கோலமும் நிறக்கலையே..

    முகாரியில் இசைத்த சோகராகம் ....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.

      Delete
  8. ஸ்ரீரங்கத்தில் வறண்டிருக்கும் காவிரியையும், கொள்ளிடத்தையும் பார்க்கும் போது வரும் சோகத்தை உங்கள் கவிதை வரிகளில் கண்டேன்.
    இயற்கை பொய்த்தால் என்ன செய்ய முடியும்? அதற்கு மனிதனும் காரணம் என்பது மேலும் சோகத்தைக் கொடுக்கிறது.

    ReplyDelete
  9. ஆத்தங்கரை அம்மணமா
    அடுக்குமாடி சம்மணமா....வார்த்தை விளையாட்டுத்தான் சசி !

    ReplyDelete

  10. பதிவில் உள்ள படத்தை முதலில் பார்த்ததும் ஏதோ கிராமத்திற்கு செல்லும் ரோடு என நினைத்தேன் அதன் பின் உங்கள் கவிதையை படித்த பின் தான் தெரிந்தது அது வறண்டு போன ஆறு என்று///ஹூம்ம்ம்

    ReplyDelete
  11. இரசித்தேன்!நன்றி!

    ReplyDelete
  12. கவிதையின் அழகு, கவிதை உணர்த்தும் சோகத்தை மறக்கடித்தது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete