Friday 18 January 2013

கேளு சாமியோ கேளு !



ஊர் ஊரா சுத்தி வந்தே
ஓரு கதையும் சொல்ல வந்தேன்
                                            (கேளு சாமியோ கேளு)
டப்பா அடிச்சி பாடி நானும்
டப்பாங்குத்து ஆட வந்தேன்.
                                          (கேளு சாமியோ கேளு)
ஊசி மணி பாசி மணி
உணவளிக்கும் உழைப்பு மணி.
                                               (கேளு சாமியோ கேளு)
பொழப்பேதும் தெரியவில்ல
நாடோடி பொழப்பிதுவே...
                                            (கேளு சாமியோ கேளு)

தனித்தனியா சுத்திடுவோம்
இரவில் கூட்டத்தோடே சேர்ந்திடுவோம்
குழிபறிக்கும் எண்ணமில்ல
குடிகெடுக்கும் ஐ◌ாதியில்ல    (கேளு சாமியோ கேளு)

ஊர் கூடி விழாயெடுக்கும்-எங்கள
ஓர் ஓரம் ஒதுக்கிவைக்கும்..
ரேட்டு பேச ஆளுமுண்டு
ரேசன் காடு கொடுக்க யாருமில்ல
                                                (கேளு சாமியோ கேளு)
கூத்தாடி பொழப்பிதுவே
குலம் தழைக்க வழியுமில்லையே !

19 comments:

  1. பாட்டு நல்லாருக்குது சாமியோவ்வ்வ் :-))

    ReplyDelete
  2. ஒரு சமூகத்தின் ஏக்கம் கவிதையாக

    அருமை ! அசத்தல் !!

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அவர்களின் நிலையை அப்படியே சொல்லும் கவிதை.....

    நல்ல கவிதை சகோ...

    த.ம. 3

    ReplyDelete
  4. கேட்டேன் ! ரசித்தேன் !

    ReplyDelete
  5. நரிக் குறவர்களின் வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றமில்லை.

    ReplyDelete
  6. கவிதை அழகு . தொடருங்கள்

    ReplyDelete
  7. நாங்க கேட்டுகிட்டோம்.கேக்கிறவங்க கேப்பாங்களா சசி !

    ReplyDelete
  8. எளிய நடையில் ஒரு பிரிவினரின் பாடுகள் கவிதையாகப் படிக்கையில் மனம் சற்றே கனக்கிறது. அருமை தென்றல்.

    ReplyDelete
  9. வந்தவாசி குறவஞ்சி நல்லாஇருக்கு..(படிக்கவும் தாளம் போட்டு பாடவும்) அரசாங்கம் இவங்களுக்கு சீக்கிரம் விடியலை கொண்டு வரணும். நடக்குமா..?

    ReplyDelete
  10. கூத்தாடி பொழப்பிதுவே
    குலம் தழைக்க வழியுமில்லையே !

    குலம் தலைக்கும் வழியை சாமி (கடவுள்)நீ சொல்லு

    ReplyDelete
  11. உங்கள் கவிதையை எனது மனக்கண்ணில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஒளிவிளக்கு படத்தில் ஆடும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு ரீமிக்ஸ் செய்து பார்த்துக் கொண்டேன்.





    ReplyDelete
  12. குறத்திப்பாட்டு சிறப்பு! வாழ்த்துக்கள்! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete
  13. http://www.tirupurbookfair.com

    ReplyDelete
  14. டம்கடிப்பான் டயாேலா...... ஏங் சிங்கா....... ஏங் சிங்கி




    நல்லா இருக்கு பாட்டும் கருத்தும்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

  15. வணக்கம்!

    வேலு சாமி! முனிசாமி!
    வேறு சாமி பலருள்ளார்!
    மாலு சாமி காலடியில்
    மகிந்து வாழும் தொண்டருள்ளார்!
    ஆளு சாமி என்றுரைக்கும்
    ஆண்ட புளுகு காரருள்ளார்!
    கேளு சாமி! கேளு!பாடல்
    துாளு சாமி! துாளு!வாழ்க!

    ReplyDelete
  16. அருமை! நன்றி1

    ReplyDelete