Friday, 11 January 2013

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !தை முதல் நாள்
வெள்ளி முளைச்சிருக்கு
விடியலுந்தான் காத்திருக்கு
மாட்டுச்சாணம் தெளித்துவிட்டு
மனம் போல கோலமிட்டு
மன்னவனாம் சூரியனுக்கு 
வணக்கம் சொல்லி...
நீர் குடித்த கரும்பெடுத்து
நிலத்தினிலே ஊன்றி வச்சி
புதுப்பானை கழுத்தினிலே
புது மஞ்சள் சிரித்திருக்க..
புத்தாடை தனையுடுத்தி
நிலமகளை உழுதவர் தம் பாதம் பணிந்து
தை மகளை...
பொங்கலிட்டு வரவேற்று...

அடுத்த நாள்..

ஆடு மாடு குளிக்கவச்சி
அடுப்பங்கரை மொழுகிவச்சி
ஆட்டுக்கல்லில் அரைச்செடுத்த
அரசிமாவு இட்லியாக...
கொழவிக்கல்லும் குளித்தெழவே -நானும்
கொத்தமல்லி அரைச்செழவே.

பட்டு வேட்டி தரை தழுவ
பளபளனு மனம் நழுவ
தலை வாழை இலை போட்டு
தாளிக்க கடுகுமிட்டு...
மாமரத்து நிழலிருக்க - அருகே
மச்சானோட மனசிருக்க
பரிமாற பக்கம் போக-அவன்
பார்வை பட்டே அல்லி பூத்ததென்ன.

அரை நாளு போச்சிதடி சீக்கிரம்
அரைச்சி வாடி அம்மியில் மசாலாப்பொடி
மச்சானே மணக்குதிங்கே மீன் குழம்பு
மதிய விருந்துக்கு நடுவே ஏன் வம்பு
பறந்தோடும் கோழியப்பிடி
பக்குவமா உதவும் நானெப்படி
ஜாதி மல்லி கோத்து வரேன்
ஜல்லிக்கட்டு பார்க்கப் போவோம்.
கண்டு வந்த காட்சியெலாம் 
கதை கதையா பேசி மகிழ்ந்து
உறவெலாம் ஒன்று கூடி
ஒருவர்க்கொருவர் அளாவி மகிழ்ந்து
அவரவர் இல்லம் சேர்வோம்.
 உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். 


33 comments:

 1. மாமியார் வீட்டில் மனமகிழ்வுடன் பொங்கல் கொண்டாடி வர உங்களுக்கும் உங்கள குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழத்துகள் தென்றல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 2. அடுக்கடுக்கான அழகான சொற்களின்
  அணிவகுப்பு சிந்தை மகிழ வைக்கிறது !
  சந்தோஷமா கொண்டாடிட்டு வாங்க சசி !
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 3. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 4. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார்க்கும், உளங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 5. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 6. சிறப்புப் பதிவு அருமை
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் நன் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 7. தோழிக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 8. சொந்த ஊருலே
  பந்தங்களோட
  பொங்கல் வைச்சு
  சந்தோசமா கொண்டாடிட
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 9. பாடல் அருமை.
  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 10. கருணாநிதி இருந்தால் தை 1 தமிழ் புத்தாண்டு , அம்மா இருந்தா சித்திரை 1 தான் ..


  எனவே இனிய பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ...தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்.

   Delete
 11. அப்படியே கையில ஒரு கைக்குட்டை வைச்சிகிட்டு
  காற்றோடு அலையவிட்டு
  ஆலோலம் பாடனும் போல இருக்கு பா.......

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் அண்ணி குழந்தைகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள் அண்ணா.

   Delete
 12. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. பொங்கலோ பொங்கல்!
  கரும்பான பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete
 14. அன்பதைப் பொங்கலிடின் அகிலம் செழித்துவிடும்!
  ஆசையதைத் தீயிலிடின் ஆனந்தம் தேடிவரும்!
  இன்பமதைப் பங்கிடின் இதயங்கள் மகிழ்ந்தாடும்!
  ஈகையதை விதைத்திட்டால் கருணைப் பூமலரும்!
  உண்மையதைப் பற்றிவாழின் நன்மை பிறந்துவிடும்!
  ஊக்கமதை நெஞ்சணியின் ஆக்கம் வாழ்த்து பாடும்!
  எண்ணமதை தூய்மையாக்கின் எல்லாம் நமதாகும்!
  ஏரதைப் பூட்டி ஓடின் விளைச்சல் விண்முட்டும்!
  ஒழுக்கத்தைப் பற்றிநிற்பின் இடுக்கண் விலகியோடும்!
  ஓசையதை இசையாக்கும் புல்லாங்குழல் நாமாவோம்!
  ஔடதமாம் அன்பதை தமிழேந்தி வளர்த்திடுவோம்!
  இஃகணத்தைத் தொலைத்து எக்கணம் வாழ்வோம்நாம்!
  போனதை நினைத்தே இருப்பதை இழத்தல் நன்றோ!
  வருவதை எதிர்கொள்ளும் மனமதை கொள்ளவேண்டும்!
  நிழலதைப் புறம்தள்ளி நிஜமதைப் பின்தொடர்வோம்!
  அத்தை சரியில்லையெனில் இத்தை நலம் தரட்டும்!
  வளத்தைக் கொண்டுதரும் தைமகள் அவள் வரட்டும்!
  வாழ்த்தை சிந்தையேந்தி பகிர்ந்தேன் அன்புடனே!
  பொங்குதை புனிதத்தை அள்ளிக் கொடுக்கட்டும்!
  தைமகளே வருக அத்தைமகளாய் ஆனந்தம் தரவே!!

  ReplyDelete
 15. அன்பான இனிய பொங்கல் வாழ்த்துகள் தோழி !

  ReplyDelete
 16. இனிய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. பட்டணம் போய்ச் சேர்ந்தாலும் மறக்க முடியாத பட்டிக்காட்டுத் தமிழில் இட்டுக்கட்டிய அழகான பொங்கல் கவிதை! சகோதரிக்கு, எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வாழ்த்துகள் நண்பர்களே !

  ReplyDelete
 19. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. காட்சி கண்களில் விரிந்தாலும் கண் கலங்கிப்போகிறது சசி.என் வாழ்க்கையில் திரும்பவும் பொங்குமா !

  ReplyDelete