Sunday 22 July 2012

கனவின் நிழலில்!



வித்தென மனதில் வீழ்ந்து-கவி
முத்தென நீயும் முளைத்தாய்!

சொத்தென நானுமெண்ணி-நித்தம்
சொந்தமாய் ஏற்பேன் வாழ்ந்து.

சட்டென நினைவைப் பற்றி
பித்தென அலைய வைத்தாய்!

செடியில் மொட்டது காதலென்றால்
மலருமென்றே காத்திருப்பேன்!

கனவில் கட்டிய கோட்டையதை
நிஜத்தில் எங்கே தேட.

கனவது நிஜமானால் -நிகழ்
காலமது இனித்திடுமே!

46 comments:

  1. // காதலென்றால்
    மலருமென்றே காத்திருப்பேன்! // காத்திருத்தல் அழகு தான் அதிலும் காதலுக்காய் காத்திருத்தல் மிக மிக அழகு...

    "கனவின் நிழலில்" தலைப்புக் கேட்ற வரிகள் ... உங்கள் சிந்தனை ஓட்டம் வெகு சிறப்பு
    கனவு நிஜமாகும் நாள் வரும் வரை காத்திருப்போம் தோழி ... தம ஒன்று

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. எப்படித்தான் வந்து விழுகிறதோ சசிக்கு மட்டும்...
    வழுக்காமல் வார்த்தைகள் அனைத்தும் தித்திப்பாய்...
    இனிப்பு அதிகமுள்ளவர்கள் கூட சுவைக்கலாம் இதனை.
    திகட்டாத சுவையாய் என்றுமே நம் மனதில் தங்கும்..
    என்றுமே இதுபோல வார்த்தைகள் தங்குதடையில்லாம
    சரளமா வர ஆண்டவனை வேண்டி வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வேண்டுதல் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எனது மனமார்ந்த நன்றி நட்பே.

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.

      Delete
  4. //கனவது நிஜமானால் -நிகழ்
    காலமது இனித்திடுமே.//

    உண்மைதான்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை மிகவும் மகிழ்வளித்தது நன்றி நட்பே.

      Delete
  5. சட்டென நினைவைப் பற்றி
    பித்தென அலைய வைத்தாய்!

    ReplyDelete
  6. வார்த்தைகளை அழகாய் கோர்த்து கவி மாலையை அழகா பின்னியிருக்கீங்க சசி தொடரட்டும் உங்கள் கவி பணி..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.

      Delete
  7. Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.

      Delete
  8. கனவு மெய்ப்பட வேண்டும் சசி. அழகான வரிகள் படிக்க இனிமை. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.

      Delete
  9. கனவுகள் நிஜயானால்தான் வாழ்கை இனிக்கும் உண்மைதான் நிஜமாக்க நாம் முயர்ச்சிக்க வேண்டும் அக்கா....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி கனவு நிஜமாக முயற்சி வேண்டும் நன்றி மா.

      Delete
  10. படித்ததும் பிடித்துக் கொண்ட பிரமாத கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. எதுகை, மோனையோடு அழகான கவிதை வரிகள் சசி.

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வாழ்த்துரை மகிழ்வளித்தது நன்றி சகோ.

      Delete
  12. காலமிங்கே கனியும்
    ஞாலமிங்கே விரியும்
    நினைவுகள் நனவாகும்.....

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் அண்ணா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா.

      Delete
  13. வழக்கம் போல் அருமையான கவிதை சகோ! (TM 7)

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் சகோவின் வருகை மகிழ்வளித்தது நன்றி சகோ.

      Delete
  14. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. //கனவில் கட்டிய கோட்டையதை
    நிஜத்தில் எங்கே தேட.//
    அருமையான கவிதை....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. வழக்கம் போல உங்களின் சிந்தனையில் வந்துதித்த மற்றுமொரு நல்ல கவிதை

    //கனவது நிஜமானால் -நிகழ்
    காலமது இனித்திடுமே.//

    நக்கீரருக்கு வந்த சந்தேகம் போல எனக்கு இந்த வரியில் ஒரு சந்தேகம். அதற்கான விளக்கத்தை தந்துவிட்டு அதற்கான பரிசான தங்க செயினை சகோ.கணேஷ் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும்.(ஹீ..ஹீ.)

    நிகழ்காலம் மட்டும்தான் இனித்திடுமா? எதிர்காலம் இனிக்காதா???????????

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் அன்பிருந்தால் எக்காலமும் இனித்திடும் நட்பே.

      Delete
  17. கனவின் நிழலிலே... தலைப்பே யோசிக்க வைக்கிறது சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  18. //கனவது நிஜமானால் -நிகழ்
    காலமது இனித்திடுமே!/
    எல்லாக்கனவுகளும் நனவாகாததுதான் சோகமே!
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  19. Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  20. முதல் மூன்று அடிகளையும் விளம் மா தேமா
    என அமைத்தது போல பின்னால் வரும்
    அடிகளையும் அமைத்திருந்தால் கவிதை
    இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனக்
    கருதுகிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா சரி இனி வரும் வரிகளில் அவ்வாறே எழுத முயற்சிகிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  21. ஆடியிலும் வரட்சியின்றி
    கவிதை மழை-அழகு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  22. கனவது நிஜமானால் -நிகழ்
    காலமது இனித்திடுமே!..

    நல்ல கவிதை....

    த.ம. 10

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  23. தற்போது சந்தக் கவிதைகள் அதிக மாயிடுச்சே! அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete