Thursday 19 July 2012

ஆடி வெள்ளி

ஆடிவெள்ளிக் கிழமை
அம்மனுக்கு விளக்கேத்தி
ஆரத்தியும் எடுத்தாச்சி!

தினம் வீடுநோக்கி உண்டியலும்
துரத்திடுதே என்ன சொல்ல
விமர்சையான விழாவென்றே
வீதியெங்கும்  சப்த்தமிட!

விலைவாசி ஏறிப்போனதும்
விதி என்றே நொந்திருக்க
வருஷத்தில் ஒருமுறைதான்
வஞ்சமில்லாது கொடு என்றான்.

அச்சுவெல்லம் இனிக்கலையே
அம்மனுக்கு மஞ்சளும் நிறுக்கலையே
சாமிகுத்தம் ஆகிபோச்சென!
சாமியாடி வந்துசொல்ல
ஆத்தா என் மீது குத்தமில்லை
என் பிழைப்புக்கிங்கே தக்க
உயர்வில்லே ஊதியமில்லே.

பச்சரிசி பொங்கலிட்டு நானும்
படையலிட்டேன் உன் வாசலிலே
பகட்டு வாழ்விற்கு வழியுமில்ல
பாத்து வாடியம்மா என் வீடுதேடி.
பாவங்களைக் காத்து வாழவையம்மா
பாவமவர் பாவைகூத்து வாழ்வில்
பாடிக்கொடம்மா தினசரியுணவு!

 இந்த விஷயத்தை தொடர்பதிவாகச் செய்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே இந்தக் கருத்தை ஒட்டியும் வெட்டியும் தங்கள் சிந்தனைகளைத் தொடரும்படி சகோதரி 
நிரஞ்சனா, சகோதரி மாலதி நண்பர் சீனு மற்றும் கவிப்ரியன் ஆகியர்களை கேட்டுக்கொள்கிறேன்.

26 comments:

  1. ஆடி மாத விழாவினை நம் கண் முன் கொண்டு வந்து உண்டியலை குலுக்கி, பூசாரி சாமி ஆடி வந்து நடக்கும் எந்த குத்தத்திற்கும் நான் பொறுப்பில்லை எல்லாத்துக்கும் நீயே தான் பொறுப்பு என சாமி மீதே வழக்கம் போல் நாம் கூறி...எல்லோரையும் யார் என்ன தவறு செய்தாலும் காத்திடும்மா என்று நீயே கதி என சொல்லி சாஸ்தாங்கமாக விழும் மக்கள்...

    அனைத்தும் நேரிலே நிகழ்வது போலவே இருந்தது படித்து முடிக்கும் வரை சசி... எளிய நடை..இயல்பாக இருந்ததால் தான் அத்தனையும் உணர முடிந்தது என்னால்... பாராட்டுக்கள்.. அம்மனின் திருவிழாவுக்கு என்னை அழைத்து சென்றதால்...கவியின் மூலம்....வாழ்த்துக்கள் மேலும்.. இதுபோன்று வேறு ஒரு திருவிழாவுக்கும் அழைத்து செல்ல கேட்டுக்கொள்கிறேன்...

    ReplyDelete
  2. Akka. today afternoon my post publish pannugirane. ennai thittuvarharkku thayara irungal. (sorry, mobile il padipathal no tamil). tks.

    ReplyDelete
  3. உங்கள் கவிதை பல வரிகள் எதாதார்தத்தை கூறுகிறது... மிகச் சிறப்பு, தொடர் பதிவை தொடர்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆடி மாச ஸபெஷல் தொடர் பதிவா..
    நடக்கட்டும்...

    ReplyDelete
  5. ஆத்தாவின் பெயரால் செய்யப்படும் அன்னதானத்தைவிட தொல்லைகள்தான் அதிகம் என்பது என் கருத்து. உங்களின் கவிதை நடையழகை மட்டும் ரசித்தேன் தென்றல்.

    ReplyDelete
  6. தொடர் பதிவு!.......
    ஆடி கவிதை நன்று.
    நல்வாழ்த்து...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. ஆடி மாதம் என்றாலே குதுகலம் தான்....

    ReplyDelete
  8. குறத்தி பாடும் பாட்டு மாதிரி பக்தி ரசனையுடன் அழகா இருக்கு கவிதை.

    ReplyDelete
  9. இப்ப என் பதிவை வெளியிட்டுட்டேன். வந்து பார்த்து என்ன தோணுதோ, அதை சொல்லுங்கக்கா. நிரூ ஆவலோட வெயிட்டிங்.

    ReplyDelete
  10. நீங்களும் தொடருங்கள் சசிகலா.

    ReplyDelete
  11. ஆடிமாத தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ஆடி வெள்ளி கவிதை வரிகள் அருமை அக்கா...

    ReplyDelete
  13. ஆடிவெள்ளி.... பக்திமணம்.

    ReplyDelete
  14. அப்பாவி ஏழை மக்களின் யதார்த்த வாழ்வினை அழகாக கவிதையாக்கித் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. ஆடி மாத சிறப்பு பதிவு....
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
    பகிர்வுக்கு நன்றி...(த.ம. 7)

    ReplyDelete
  16. Oooooooooooo
    ...இது பல சிறப்புக்கள் பொருந்திய மாதமாக்கும்....
    அதுதான் இங்க இருக்கிற கோயிலெல்லாம் சனக்கூட்டமா இருக்குபோல..

    ReplyDelete
  17. ஆடிமாத வாழ்வினை அழகாக கவிதையாக்கித் தந்துள்ள உங்களுக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. //விமர்சையான விழாவென்றே
    வீதியெங்கும் சப்த்தமிட!///

    சசி உங்களையும் உங்கள் சகோதர் கணேஷ் அவர்களையும் கொஞ்ச நாள் அமெரிக்காவில் வாழசி செய்யவேண்டும். அப்போதுதான் உங்கள் இருவருக்கும் சப்தத்தின் அருமை தெரியும்

    ReplyDelete
  19. ஆடி வெள்ளி தேடி வந்தோம் பதிவு காண .நன்று.
    த.ம.8

    ReplyDelete
  20. வித்தியாசமான பதிவு ....

    ReplyDelete
  21. ஆடி வெள்ளி பகிர்வு நன்று.

    ReplyDelete
  22. ஆடி வெள்ளியின் சிறப்பு எனக்கு தெரியாது அக்கா பட்

    நல்ல கவி.....

    ReplyDelete