Sunday 8 July 2012

கண்ணால் கவி பேசி !



இமையில் மை வைத்து
உனை இம்சிக்கும் 
எண்ணமில்லை.

வேல் விழியால்
உனை அழைத்து
என்னுள் வீழ்த்திடும் 
விந்தையுமறியேன்.

வில்லெனும் புருவத்தால்
க ணை தொடுத்தே..
கவர்ந்திடும் காந்தமுமில்லை.

தமிழில் கொஞ்சம்
வரியெடுத்து...-கிள்ளை
மொழி பேசி -பிள்ளையென
நானும் வந்தேன்.

கண்ணாளா நியும்
கண்ணால் கவி பேசி
கொங்கு தமிழாய் 
எனை நேசிப்பாயோ?

53 comments:

  1. எந்தப் பாசாங்குமற்று இயல்பாய் இருக்கும் பெண் அழகோ அழகு சசிக்காவின் கவிதைகளைப் போல. கொங்கு தமிழ் பேசி நாயகன் நிச்சயம் நேசிப்பான்க்கா. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. உந்தன் வரிகளை விட கவி என்ன அழகு என் கண்ணே.

      Delete
    2. Thank you verymuch for your lovable words Dear Sasikka.

      Delete
  2. அதுதான் அழகே!
    அருமை சசிகலா

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் அருமையென அழகாய் வாழ்த்தியது கண்டும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  3. நல்லா இருக்குங்கோ சசி

    ReplyDelete
  4. //தமிழில் கொஞ்சம்
    வரியெடுத்து...-கிள்ளை//

    படிபதற்கு சுகமாய் இருந்தது... த.ம.3

    படித்துப் பாருங்கள்

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

      Delete
  5. அருமை அருமை
    ஆற்றின் ஓட்டத்தோடு நீந்தும் சுகம்
    உங்கள் கவிதைப் பொருளோடு
    இணைந்துச் செல்லக் கிடைக்கும்
    நல்ல இலக்கிய அனுபவ நயம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்கள் கவித்துவமான வரிகளால் வாழ்த்தியது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  6. ஆஹா.. அருமையான கவிதை. ரமணி ஐயா மேலே கூறியிருக்கும் வரிகளை நானும் அப்படியே டிட்டோ. பிரமாதம் தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

      Delete
  7. // தமிழில் கொஞ்சம் வரியெடுத்து...-கிள்ளை
    மொழி பேசி –பிள்ளையென நானும் வந்தேன்.//

    கொஞ்சு தமிழில் பிள்ளைக் கவியாய் பாடிய தமிழ் நெஞ்சத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தமிழாய் வருகை தந்து தித்திக்க வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  9. VERY NICE SASI.. YOUR EFFORTS NEVER LOSS...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

      Delete
  11. கொஞ்சு தமிழாய் என்றிருந்தால் தவறா.? கொங்கு தமிழ் எனும்போது YOU APPEAR BIASED.கவிதை அழகு. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு எல்லா ஊரும் மக்களும் ஒண்ணு தாங்கய்யா. தாங்கள் கூறிய பிறகே அந்த வார்த்தை இன்னும் அழகாகத் தெரிகிறது ஐயா. தங்களுக்கு எனது மனம◌ார்ந்த நன்றி ஐயா.

      Delete
  12. Hi... Its really lovely lines..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  13. கண்ணால் கவி பேசி மயக்குபவர்கள் பலர் ஆனால் நீங்கள் எழுத்தால் எல்லோரையும் மயக்கும் கலையை அறிந்த ஒரு அற்புத பெண் நீங்கள். வாழ்த்துக்கள் சசி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரிகள் எனக்கு உற்சாகமாக இருக்கிறது. இதயம் கனிந்த நன்றிங்க.

      Delete
  14. தமிழ் நேசம், கவிதையில் தெரிகிறது..அருமை..

    ReplyDelete
    Replies
    1. தென்றலின் மீது தங்கள் நேசம் வரிகளில் தெரிகிறது. நன்றி சகோ.

      Delete
  15. ம்ம்ம் ... அருமை அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

      Delete
  16. கண்ணாளா நியும்
    கண்ணால் கவி பேசி
    கொங்கு தமிழாய்
    எனை நேசிப்பாயோ?

    இயல்பு ....
    வாழ்த்துக்கள் மென்மேலும் எழுத....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  17. அழகான தமிழ் கோர்வை...
    வாழ்த்துகிறேன் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  18. vaarthai jaalam!

    mmmm arumai!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  19. கண்ணால் /கவி பேசி மயக்கிவிட்டீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  20. கொங்கு தமிழ் என்றாலும் கொஞ்சு தமிழ் என்றாலும் ஒன்றுதான். எனவே கொங்கு தமிழ் என்பதும் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  21. அருமையான கவிதை சகோ. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்வை அளித்தது. நன்றிங்க.

      Delete
  22. நல்ல கவி வரிகள் .நல்வாழ்த்து சசி.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  23. முக வசீகரம் என்றேனும் முக வரிகளால் முகவரியற்றுப் போகலாம். அழகுத் தமிழால் அகம் வசீகரிக்க, அன்பு என்றென்றும் அளவில்லாமல் பெருகிப்பாயலாம். மனம் கொள்ளை கொண்ட கவிதை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரிகளை திரும்ப திரும்ப படிக்கலாம் அத்தனை வசீகரம் இருக்கிறது. மிக்க நன்றி.

      Delete
  24. நேசிக்க சொல்வதில் எத்தனை நயம் சசி....அழகான வார்த்தைகளை தேடிபிடித்து போட்டுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் சசி...நேசிக்க எத்தனை நயமான வார்த்தைகளை தேடி பிடித்து கோர்ர்த்துள்ளீர்கள்..அத்தனையும் முத்து மாலையாய் ஜொலிக்கின்றன...

    ReplyDelete
  26. அருமை.....
    கொங்குதமிழ்
    குடிபுகுந்து-உன்
    குழலினிய கவிதேடி
    உற்றவனை அழைத்திங்கே
    உன்னோடு சேர்க்கட்டும்.....!

    ReplyDelete
  27. மேலும் பல அருமையான படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete