Tuesday 10 July 2012

பூப் பூவாய் பூத்திருக்கு...!



வண்ணப்பூ
வாசப்பூ-வட்டமிடும்
கண்களிரண்டும் குவளைப்பூ !

எண்ணம் பூ-கவி
எழுத்தும் பூ-உன்
கன்னமிரண்டும் தாமரைப் பூ!

கனவும் பூ
கருத்தும் பூ-உன்
இதழ் உதிர்க்கும்
சொல்லோ ரோஜாப்பூ !

உணவில் பூ
உறவில் பூ-உன்
பார்வை காந்த(ல்)ப்பூ.

மனதும் பூ
மருந்தும் பூ-உன்
மவுனமோ மல்லிகைப்பூ!

33 comments:

  1. எத்தனை பூ...அத்தனையும் மணக்கும் பூ. உள்ளத்தை மயக்கும் பூ. நம்முள் இருக்கிறதா இத்தனை பூ. நினைத்தாலே ஆச்சரியமாக இருக்குதப்பூ. எல்லாமே காகித பூவும் அல்ல...அத்தனையும் நிஜப்பூக்கள்...
    என்றுமே நிறம் மாறாத பூக்கள்...இத்தனை பூக்களையும் ஒருசேர கோர்த்த சசிக்கு என்னுடைய
    அன்பெனும் வார்த்தைகளால் மாலையை கோர்த்து கையில் சமர்பிப்பதில் பெருமிதம் கொள்கின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. பூப் பூவாய் உதிர்ந்த வார்த்தைகள் அருமை நண்பரே. நன்றி.

      Delete
  2. வணக்கம் சசிகலா,
    உங்கள் வலைபூ வில் கவிதை வாசித்தேன். இயற்கை,காதல் இதைசுற்றியே அனோகமான கவிதைகள் உள்ளன. ஏன் சமூகம் குறித்து, பெண்களின் பிரச்சனைகள் குறித்து இல்லை.ஓருபடைப்புக்கு வாசிக்கின்ற சுகம் மட்டும் போதுமா, நல்ல கருத்துகளை, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாமா

    ReplyDelete
    Replies
    1. தென்றலின் முந்தைய பதிவுகளையும் பாருங்க நண்பரே. தங்கள் கருத்துக்கு நன்றி நல்ல கருத்துக்களை சொல்ல முயற்சிக்கிறேன்.

      Delete
  3. பூக்களாலான பா நன்று. இன்றைய வானம் அவர்கள்- நீங்கள் சமூகம் குறித்தும் பெண்கள் குறித்தும் எழுதிய கவிதைகளைப் படிக்காமல் இயற்கை அழகான பூக்களை எழுதிய இந்தக் கவிதையை மட்டுமே படித்திருக்கிறார் என்று தெரிகிறது. வாழ்க்கைக்கு வர்ணம் சேர்க்க இயற்கையழகும். பூக்களும் தேவைதான் சசி. தொடர்ந்து எழுதுங்கள். நன்று.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் வசந்தத்தின் வரிகள் மிகுந்த மகிழ்வளித்தது. நன்றிங்க.

      Delete
  4. பூ பூவாய் பூத்த அன்பூ....
    ரொம்ப அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. அழகு வார்த்தைகளால் கவியை அலங்கரித்த தங்களுக்கு நன்றி.

      Delete
  5. என் கிடட இருக்கறது குறும்(பூ)பு, சிரிப்பூ, உங்களுக்குத் தர்றதுக்கு அன்பூ. இப்ப உங்க கவிதையில இத்தனை பூவைப் பாக்கறப்ப சிலிர்ப்பூ. பிரமாதம்க்கா.

    ReplyDelete
    Replies
    1. எனக்கே எனக்கா உங்க அன்பூ நன்றி நிரூ மா.

      Delete
  6. பூக்களாய் மலர்ந்த கவிதைப்பூ மணம் பரப்பி நிற்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. மணம் வீசி அழைக்கும் தங்கள் வருகைப்பூ நன்றிங்க.

      Delete
  7. மலர்களில் தொடுத்த கவிமாலை அழகு சசி.

    ReplyDelete
    Replies
    1. மலர்கொத்து வந்து வாழ்த்தக் கண்டேன். நன்றிங்க.

      Delete
  8. மலர்களும்
    கவிதையும்
    அழகு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  9. பூக்களோடு பூக்களாய் ஒரு கவி..!

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்திற்கு நடுவே இந்த பூவையும் பார்க்க வருகை தந்தது குறித்து மகிழ்ச்சி. நன்றிங்க.

      Delete
  10. எல்லாப் பூக்களும், பூவாய் மணம் பரப்பிடும் அனைத்துக் கவிதைகளும் அழகோ அழகு.

    தாமரை, ரோஜா ம்ற்றும் மல்லிகைக்கான கவிதைகள் மிகச்சிறப்பாக உள்ளன.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அழகென்ற சொல்லாளே அழகாய் வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
  11. வணக்கம் அக்கா... சூர்யா மாதிரி லிஸ்ட்டே கொடுத்துட்டீங்க... நல்லாருக்கு...:)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் நல்லா இருக்கு. நன்றிங்க.

      Delete
  12. பூ பூவாய் பூத்த கவிதை அழகு...

    ReplyDelete
  13. மலர்களுடைய படங்களுடன் நீங்கள் எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது. நீங்கள் குறிப்பிடாத சில மலர்களின் படங்களுடன் அவற்றின் பெயர் குறித்துக் கேட்டிருந்தேன். நீங்களும் பதிவைப் பார்ப்பதாகக் கூறி இருந்தீர்கள்....!( வாசமில்லா மலரிது. )

    ReplyDelete
  14. சிறந்த பூ
    உங்கள் சொல் அம்பு...

    ReplyDelete
  15. பூ பூவாய் நாமும் பூத்திருப்போம் நமும் அக்கா..

    அருமையான கவிதை....

    ReplyDelete
  16. கண்ணுபடப் போகுது
    கிராமத்துப் பாணியில்
    சுத்திப்போடுங்க!
    நாளொரு கவிதை
    பொழுதொரு மேனி
    வளமான வளர்ச்சி!
    எழுதுங்கள் கைகள்
    எழுதும்வரை
    பாடுங்கள்
    எண்ணம்
    சுரக்கும்வரை!

    ReplyDelete
  17. பூப்பூவாப் பூத்திருக்கு!

    நல்ல கவிதைப் பூ.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. பூக்களும் அதற்கான விளக்கமாக
    அமைந்த கவிதைகளும் அருமை
    மணம் நிறைந்த மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. புன்னகை பூ வாசமே நேசமானது!..........
    அருமை தோழி! பூக்களின் மனமும் உங்களின் குணமும்

    ReplyDelete
  20. உங்கள் மனத்தோட்டத்தில் மலர்ந்த இந்த பூக்கள் உங்கள் மனதைப் போலவே மலர்ந்து உங்கள் வலைத்தளம் மூலம் உலகெங்கும் சிரிக்கின்றன, எழுத்திலும் சரி வடிவமைப்பிலும் சரி உங்கள் வலைத்தளம் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கின்றன. சசி உங்கள் தென்றல் தோட்டத்தில் கவிதை பூ மட்டுமல்ல அங்கு அன்பு மலர்கிறது நட்பும் அங்கு வளர்கிறது..!! வாழ்த்துக்கள்

    ReplyDelete