Monday 9 July 2012

சிறைக்கு வெளியே...!



வண்ணப்பூ தான் நோக்க
அதனை வட்டமிடும்
வண்டினம் கவர்ந்ததென்ன?

மதியோடை சலசலக்க
ஓடும் நதியோடையும்
அழைத்ததென்ன?

ஒற்றைக்கால் தவமிருந்து
ஓரக்கண்ணால் பார்த்து நிற்க
செதில்களால் தனை மூடி
செம்மீனும் நழுவக் கண்டேன்.

அல்லி மொட்டதுவும்
இதழ் விரித்திடவே
ஆங்கே அரவமும்
நெளியக் கண்டேன்.

எழில் மிகு காட்சியெலாம்
எண்ணத்தை கவர்ந்து நிற்க
அந்தி சாயும் கதிரவனின்
அடி பற்றிப் போகும் மாடாய்
என் பயணமும்...!

27 comments:

  1. ஒரு நீரோடை அதை சுற்றும் மதியோடை என்று நீங்கள் பாடிய கவி அழகு

    த ம 2

    படித்துப் பாருங்கள்

    தலைவன் இருக்கிறான்

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  2. அழகுக் கவிதை. ரசிக்க மனமிருந்தும். ரசிக்க விடாமல் அன்றாடக் கவலைகள் பற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. வாழ்க்கையின் ஒரு துணுக்கை துணுக்கென்று மனதில் தைக்கும் வண்ணம் சொல்லிய தென்றலுக்கு ஒரு ஜே!

    ReplyDelete
    Replies
    1. முத்தான வரிகளால் வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  3. வழக்கம்போலவே கவிதை நச் (TM4)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் நச் எனும் வார்த்தையும் மகிழச் செய்தது. நன்றி .

      Delete
  4. இயற்கையான நிகழ்வினை ஆகாயசமாக சொல்லி இருக்கும் விதம் பாராட்டுக்கு உரியது சசி... காட்சிதனை அத்தனையும் நம் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்திய தங்களுக்கு என் பாராட்டுக்கள் பல....வளர்க..மேலும்...தருக.. இன்னும் நிறைய செய்திகள் கவியோடு...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  5. கொக்கும் மீனும்
    கொண்ட கோலம்
    தவிப்பதும்,தப்புவதும்...!
    nice

    ReplyDelete
  6. சிறந்த படைப்பாக்கம் .. என் வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  7. என்னைக் கவர்ந்தது முத்தாய்ப்பாய் உள்ள கடைசி வரிகள்தான்.

    ReplyDelete
  8. ம்ம்ம் ... வேற என்ன சொல்ல

    ReplyDelete
  9. iyarkaiyai kan munnaal niruthideena!


    mikka nantri!

    ReplyDelete
  10. கவிதை அழகு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. அடிபற்றிப் போகும் மாடாய்....?
    -------

    ReplyDelete
  12. //அந்தி சாயும் கதிரவனின்
    அடி பற்றிப் போகும் மாடாய்
    என் பயணமும்...!//

    உண்மை சசி! இக்காட்சி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு
    இது தெளிவாக புரியும் அந்தி சாயும் போது மாடுகள் அழகா வீடு நோக்கி
    வர்ரும்!
    கவிதை அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. //எழில் மிகு காட்சியெலாம்
    எண்ணத்தை கவர்ந்து நிற்க
    அந்தி சாயும் கதிரவனின்
    அடி பற்றிப் போகும் மாடாய்
    என் பயணமும்...!//
    "what is this life, if full of care
    we have no time to stand and stare"
    அருமை சசிகலா.

    ReplyDelete
  14. அருமையான வரிகள்! படித்தது போல் இல்லை அனுபவித்தது போல் உள்ளது அக்கா!

    ReplyDelete
  15. அருமையான வரிகள். ரசித்தேன்.

    ReplyDelete
  16. சொற்றொடரால் வியாபித்த அழகை ரசிக்க
    முயல்கையில்
    இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம்
    என்று உச்சியில் ஊன்ற
    உரைத்திட்ட கவிதை ...
    நன்று சகோதரி.....

    ReplyDelete
  17. //அந்தி சாயும் கதிரவனின்
    அடி பற்றிப் போகும் மாடாய்
    என் பயணமும்...! //

    மேய்ச்சலுக்குப் பின் செல்லும் மாட்டின் அசை போடும் நினைவோடு மனிதனின் மனத்தையும் ஒப்பிட்ட் ஒற்றை வரி! உவமை அருமை.
    Robert Frost என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய மாலை நேரத்து கவிதையை( Snowy Evening) நேரம் இருப்பின் படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  18. ம்ம் க சூப்பர்ர்ர் அக்கா...

    ReplyDelete
  19. நல்ல கவிதை.வாழ்த்துக்கள். பயணங்கள் அந்தி சாய்கிற கதிரவனின் முன் போவதில் ஒரு தனி சுகம் இருக்கிறதுதான்.

    ReplyDelete
  20. நல்ல இயற்கைக் காட்சிகளை எழுதியுள்ளீர்கள் மிக நன்று. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete