Sunday 15 July 2012

கடமை கண்ணியம் கட்டுப்பாடு.


கதிரவன் மறைவதும்
விண்மீன் உருகுவதும்
வான்நிலா தேய்வதும்
நதிகள் வற்றிப்போவதும்!

கடல் உள்வாங்குவதும்
காலம் கடந்துபோவதும்
மலைகள் மண்ணாவதும்
மனம் பாலையாவதும்!

மேகம் அலைந்தோடுவதும்
மரங்கள்பட்டுச் சாய்வதும்
மலர்கள் மணம் மறப்பதும்
பறவை இறகு உதிர்ப்பதும்!

உறவுகள் பிரிவெழுதுவதும்
நீர் மீனை உண்ணுவதும்
பனிக்கட்டி கரைவதும்
நிறங்கள் தானே மாறுவதும் !

புதிதாய் ஜனன வாழ்வும்
வந்தது செலவாய் போவதும்
புறப்பட்ட இடம் திரும்புவதும்
காலத்தின் கையில் மட்டும்!

கடமை இதுவென்றுணர்ந்து
கண்ணியம் வாழ்வில் காத்து
கட்டுப்பாடுடன் வாழ்தல் நன்று .

        வணக்கம் வலைப்பதிவு தோழர்களே..வரும் ஆகஸ்டு மாதம் 19 ம் தேதி சென்னை மாணவர் மன்றத்தில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு ஆகி வருவது உங்களுக்கு தெரியும்.

           இந்நிகழ்ச்சி குறித்த விபரங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்..

          நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக பதிவர்கள் கலந்து கொண்டு கவிதை பாட கவியரங்கம் ஏற்பாடு ஆகி வருகிறது.இக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதை பாடும் ஆர்வமுள்ள அன்பர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் கவிதை பாடுவதை உறுதி படுத்திக் கொள்ளுமாறு சொல்லியிருந்தோம். இதுவரையிலும் 15 தோழர்கள் கவிதை பாட வருவதாய் உறுதியளித்திருக்கிறார்கள்.. எனவே மேற்கொண்டு கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதை பாடும் தோழர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

           அதுமட்டுமல்லாது பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தோழர்கள் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தாங்கள் வருவதை உறுதி செய்து வருகிறார்கள்.இச் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழமைகள் தொடர்பு கொண்டு வருகையை உறுதிபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தோழர்களின் பட்டியல் முழுமையடைந்தால்தான் மேற்கொண்டு சில ஏற்பாடுகள் செய்ய வசதியாயிருக்கும்.எனவே காலம் தாழ்த்தாமல் தங்களின் வருகையை

உறுதி படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்..நன்றி..

          தங்களின் வருகையை உறுதி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:

      மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021

      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166

      சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)-94445 12938

      புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)- 90947 66822

      சசிகலா(தென்றல்)-99410 61575
   

31 comments:

  1. Try to come.. thanks for invitation

    ReplyDelete
  2. நிச்சயம் கடமை இது என்றுணர்ந்தாலே கண்ணியம் தானாய் காக்கப்படும்..நன்றி..

    ReplyDelete
  3. அன்றாடம் நடக்கும் கடமையை கண்ணியத்தோடு நாம் பார்த்து அதனை கட்டுப்பாடோடு பாத்துக்காக்க வேண்டும்... இயற்கையின் கடமையில் யார் தலையிட்டாலும் அதனுடைய விளைவுகள் என்ன என்பதை நாம் எல்லோரும் ஏன் உலகமே அனுபவித்து இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்... அருமையான ஒரு கருத்துப்பதிவு...சசிகலா... பாராட்டுக்கள்.. இயற்கையை மிஞ்சிய சக்தி இந்த உலகில் வேறேதுமில்லை...

    ReplyDelete
  4. கட்டுப்பாடுடன் கண்ணியம் காத்தால் கடமை தானாக உணரப்படும்.. நல்ல வரிகள் சகோ....!

    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 2)

    ReplyDelete
  5. கடமையை
    உணருபவர்கள் கண்டிப்பா
    கண்ணியத்தையும் காப்பார்கள் சகோ

    அருமை நல்ல சிந்தனை

    ReplyDelete
  6. கடமையை கண்ணியத்துடன் செய்தால் கட்டுப்பாடு தானாகவே காக்கப்பட்டு விடும். இயற்கையோடு இயைந்து வாழாவிட்டால் விளைவுகள் என்றுமே கடுமையானவை தான். அழகுற இயம்பிய அருமையான கவிதை நன்று தென்றலே.

    ReplyDelete
  7. கவிதை .. வழக்கம் போல் அருமை!

    பதிவர் சந்திப்பிற்காக தொடர்ந்து நீங்கள் எடுத்து வரும் முயற்ச்சிகள் பாராட்டுக்குரியவை.. சந்திப்பு வெற்றிகரமாக நிகழ வாழ்த்துக்கள் (TM 5)

    ReplyDelete
  8. கவிதையை இரசித்தேன். எப்படி தினம் ஒரு கவிதையை உங்களால் இயற்ற முடிக்கிறது என எண்ணி எண்ணி வியக்கின்றேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. Very good Kavidhai. Your Blog has improved a lot. Vazthukkal.I am following in Indli.

    ReplyDelete
  10. Also glad to note that you have got so many awards.Congratulations.:-)

    ReplyDelete
  11. கடமை இதுவென்றுணர்ந்து
    கண்ணியம் வாழ்வில் காத்து
    கட்டுப்பாடுடன் வாழ்தல் நன்று .//

    அருமையான சிந்தனைப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. உலகில் எல்லாமே ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இயங்குகின்றன. நீங்கள் எல்லாவற்றையும் ஒரு கவிதையாய் தந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  13. மிகவும் சிறப்பான ஆக்கம் கடமை இருந்தால் கட்டுப்பாடு உடன் துணை வரும் கண்ணியம் தானே வந்து சேர்ந்து கொள்ளப் போகிறது .சிறப்பான பதிவு தொடருங்கள்

    ReplyDelete
  14. கவிதை அருமைங்க சசிகலா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. கவிதை அருமை அக்கா!
    ///புதிதாய் ஜனன வாழ்வும்
    வந்தது செலவாய் போவதும்
    புறப்பட்ட இடம் திரும்புவதும்
    காலத்தின் கையில் மட்டும்!//// ரசிக்க வைத்த வரிகள் அக்கா!
    பகிர்வுக்கு நன்றி! பதிவர்கள் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. இந்த மூணும் ஒன்று சேர்ந்தால் நாடு எங்கயோ ...போயிடுமே.கவிதையில் அருமையான கருத்தை சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  17. நினைவைமட்டும் என்றும்காலம்
    இதயத்திலிருந்து அழிப்பதில்லை
    இனிமை இன்பங்களாய் பிரிவு
    சோக தண்டனைகளாய் கனவு
    நாளைய வாழ்வாய் ...அருமை!

    ReplyDelete
  18. கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை வாழ்க்கையில் கடைபிடிப்பதுமட்டுமல்லாமல் அதை கவிதையிலும் வடித்து பகிர்ந்த தலைவி சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்( தலைவி என்று இங்கு நான் சொன்னது குடும்பத்தலைவி பதிவியைத்தான் ஹீ.ஹீ)

    குடும்பத்தலைவி வரும் பதிவர் கவிதை அரங்க கூட்டத்தில் கவிதை அரசியாக வலம் வருப்போவதை அறிந்து மிக மகிழ்ச்சி....

    போற போக்கை பார்த்தால் ஜெயலலிதா, கனிமொழிக்கு அப்புறம் நீங்கள்தான் போலிருக்கிறது..

    ReplyDelete
  19. கடமை கண்ணியம் கட்டுப்பாடு.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. கடமை கண்ணியம் கட்டுபாடு அருமை .அருமை... வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அருமையான கவிதை....

    பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. அருமையான கவிதை.

    பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அருமை! அழைப்பிற்கு நன்றி!நானும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன்.

    ReplyDelete
  24. kavithai unarthiyathu!
    unmai!

    pathivarkalukku vaazhthukkal!

    ReplyDelete
  25. //கடமை இதுவென்றுணர்ந்து
    கண்ணியம் வாழ்வில் காத்து
    கட்டுப்பாடுடன் வாழ்தல் நன்று .//

    நன்று

    ReplyDelete
  26. வழக்கம் போல் நன்று...பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்...

    ReplyDelete
  27. கடமை கண்ணியம், கட்டுப்பாடு எல்லோரும் இதைப் பின்பற்றினால் எலகே உல்லாசப்பூங்கா தானே! நல்வாழ்த்து சசி நல்ல சிந்தனைக் கருத்துகளிற்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  28. சிந்தனைக்குரிய கவிதையும்,
    சிறப்புக்குரிய அழைப்பும்.

    ReplyDelete
  29. நல்ல கவிதையும்,சிந்தனையும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete