Wednesday 4 July 2012

நீயென்ன பிறை நிலவோ?

விடையில்லா கேள்விகளே
விடைசொல்ல மாட்டாயோ?
இக்கரையில் தென்றலில்லை
அக்கரையில் புயல் மழையோ
காலத்தின் கைதிதானோ [விடை]

காலமெனும் கண்ணாடி
காட்டுகின்ற நிழலுருவில்
நீயென்ன பிறை நிலவோ
நீந்துவதுகண் நீரில்தானோ
பாலைதான் உந்தன்வீடோ![விடை]

ஆராட்டுப் பாடிய கைகள்
ஆசைவழிப் போனதாலே
சீராட்டிய இதயம் இங்கே
சிறகுவிரித்துப் போனதெங்கே
நெஞ்சத்தின் நிம்மதியெல்லாம்
கனவுகளின் சங்கமம் தானோ![விடை]

பாதைதேடிப் போகும் நெஞ்சில்
பாசங்கள் பனித்துளிப் போல
மாய்ந்தோடிப் போய்விடுமோ
மனமே மரணந்தான் உன்வழியோ
கனவே கலைந்தோடும் மேகமோ நீ![விடை]

ஆரம்பம் அழகாயில்லை
ஆசைகள் அலைகடலாக
ஆனந்த நாள் மலருமோ
காலம் கவிதைபாடுமோ
காட்சி மாலை சூடுமோ![விடை]

கலைந்தோடும் மேகம்போல
கடல் கலக்கும் நதியாய் நானும்
கரைந்தோடிப் போகின்றேன்
கரையெங்கே தேடுகிறேன்
கற்பூரமாய் எரிகின்றேன்[விடை]

42 comments:

  1. Replies
    1. முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  2. ஆஹா... அருமை தென்றல். சினிமாவுக்கு பாட்டெழுதக் கூட முயற்சித்தால் பிரகாசமாக எழுத முடியும் உங்களால். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  3. Replies
    1. வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  4. கரையெங்கே தேடுகிறேன்
    கற்பூரமாய் எரிகின்றேன் அருமையான வரிகள் சுமக்கும் சுமையான சுகமான பாடல்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

      Delete
  5. arumai akka
    Nenjathin nimmathi ellam kanavugalin sangamam thane

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தம்பி.

      Delete
  6. கலைந்தோடும் மேகம்போல
    கடல் கலக்கும் நதியாய் நானும்
    கரைந்தோடிப் போகின்றேன்
    கரையெங்கே தேடுகிறேன்
    கற்பூரமாய் எரிகின்றேன்//

    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    கற்பனை வளமும் கவித்திறனும்
    பிரமிப்பூட்டுகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உற்சாகமூட்டிய தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனம◌ார்ந்த நன்றி ஐயா.

      Delete
  7. அருமையான கவிதை வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளித்தது.

      Delete
  8. அழகிய வரிகள் ஆழ்மன தூறல்களாய்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வரிகளும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. சகோ
    அன்பின் விருது ஓன்று பகிர்ந்துள்ளேன் ஏற்றுக்கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. அன்பின் பகிர்வை அக மிகழ பெற்றுக் கொண்டேன். நன்றி சகோ.

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  11. ஆராட்டுப் பாடிய கைகள்
    ஆசைவழிப் போனதாலே
    சீராட்டிய இதயம் இங்கே
    சிறகுவிரித்துப் போனதெங்கே
    நெஞ்சத்தின் நிம்மதியெல்லாம்
    கனவுகளின் சங்கமம் தானோ!

    மனம் தொட்ட வரிகள்...
    அருமைங்க சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  12. ஆஹா... சூப்பரான கவிதை சசிக்கா...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..நிரூ மா என்ன வலைப்பக்கம் பார்க்கவே முடியல.

      Delete
  13. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  14. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  15. Replies
    1. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனம◌ார்ந்த நன்றி ஐயா.

      Delete
  16. நீயென்ன பிறை நிலவோ?//

    அருமை தென்றல்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  17. பூவுக்கு பூமாலைகள்
    பூவையின் பாமாலை
    பூச்சூடி கோபுரத்தில்!
    வாடாமல் மணம்வீச,
    வாழ்த்துக்கள்.பணி
    பயனுரதொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. கவியால் வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  18. அருமையான கவிதை! வாழ்த்துக்கள் சசிகலா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  19. அருமையான கவிதை! வாழ்த்துக்கள் சசிகலா!

    ReplyDelete
  20. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  21. //கரையெங்கே தேடுகிறேன்
    கற்பூரமாய் எரிகின்றேன்[//

    கணேஷ் சாரை நான் வழி மொழிகிறேன். திரைப் பாடல் போலவே உள்ளது. தொடருங்கள்


    படித்துப் பாருங்கள்

    சென்னையின் சாலை வலிகள்

    seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  22. ''...விடையில்லா கேள்விகளே
    விடைசொல்ல மாட்டாயோ?
    இக்கரையில் தென்றலில்லை
    அக்கரையில் புயல் மழையோ...''
    வேறு கவி வரிகளை நினைவு கூரும் வரிகள் அருமை. நல்வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete