Sunday 20 January 2013

கானல் நீராய் நம்பிக்கை !



-- ஏர்முனையில் சிக்கிமாயும்
மண்புழுவின் தியாகங்கள்
அறிகின்ற அறிவிருந்தால்
விவசாயத்தின் கதைகளில்
வாழ்ந்திருக்கும் சோகம்புரியும்.

உழைப்பவன் அழுதிருக்க
உண்பவன் சிரிக்கின்றான்
உடைந்த மண்பாண்டமாய்
உலகத்தில் விவசாயி.

காசிருந்தால் வாங்கிடலாம்
கானல் நீர் போல் நம்பிக்கை
பொருளின்றி எதை வாங்குவது
விதைத்தால் தானே அறுத்தெடுக்க..

விளை நிலத்தில் விழுகின்ற
தானியம் மட்டும் விதையில்லை
இதயத்தில் விதைக்கப்படும்
நன்மை தீமையும் விதைகளே.

வாழ்வும் விளை நிலம்தான்
நாம்தான் சீர் செய்யவேண்டும்
நன்றாய் அதை உழுதெடுத்து
நன்மை வளர்த்தால் செழித்தோங்கும்.

25 comments:

  1. ஏர்முனையில் சிக்கிமாயும்
    மண்புழுவின் தியாகங்கள்
    அறிகின்ற அறிவிருந்தால்
    விவசாயத்தின் கதைகளில்
    வாழ்ந்திருக்கும் சோகம்

    அறிய வேண்டும் அனைவரும்

    வாழ்வும் விளை நிலம்தான்
    நாம்தான் சீர் செய்யவேண்டும்
    நன்றாய் அதை உழுதெடுத்து
    நன்மை வளர்த்தால் செழித்தோங்கும்.

    செழித்தோங்க வேண்டும்

    நம்பிக்கை தானே வாழ்க்கை

    ReplyDelete
  2. விவசாயின் மேன்மையை விளக்குவதோடு நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கின்றன.

    கவிதை அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அருமை அருமை .....நன்றி

    ReplyDelete
  4. //உழைப்பவன் அழுதிருக்க
    உண்பவன் சிரிக்கின்றான்//
    இதே நிலை நீடித்தால் உண்பவனும் அழவேண்டி வரும் சாப்பிட உணவில்லாமல். விவசாயிகளின் நிலையை அழகாக படம் பிடித்க்டுக் காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. அருமையான படைப்பு மேலும் எழுத வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. ஆம்! ஆம்! வாழ்க்கையும் விளைநிலம்தான்! நாம் விதைப்பதுதான் விளையும்! கருத்துள்ள கவிதைக்கு நன்றி!

    ReplyDelete
  7. நானும் இன்று இதை பற்றித்தான் கிறுக்கினேன் .. நீங்களும் அழகாக சொன்னிர்கள்

    ReplyDelete
  8. //விளை நிலத்தில் விழுகின்ற
    தானியம் மட்டும் விதையில்லை
    இதயத்தில் விதைக்கப்படும்
    நன்மை தீமையும் விதைகளே.//

    சிறப்பான சிந்தனை....

    த.ம. 3

    ReplyDelete
  9. அருமையான கவிதை.
    வாழ்த்தக்கள் சசிகலா.
    த.ம. 4

    ReplyDelete
  10. //வாழ்வும் விளை நிலம்தான்
    நாம்தான் சீர் செய்யவேண்டும்
    நன்றாய் அதை உழுதெடுத்து
    நன்மை வளர்த்தால் செழித்தோங்கும்//
    அருமை!.

    ReplyDelete
  11. பசுமை விழிப்புணர்வை தூண்டும் கவிதை. மிக அருமை..

    ReplyDelete
  12. உழைப்பவன் அழுதிருக்க
    உண்பவன் சிரிக்கின்றான்//....உண்மை.
    போட்டுட்டேன் ? ? ?

    ReplyDelete

  13. வணக்கம்!

    நம்பிக்கைப் பாடல் நறுங்கவி என்னுள்ளே
    தும்பிக்கை செய்யும் துணை!

    ReplyDelete
  14. உங்கள் அழகான சூழல் உங்கள் கவிதைகளில்.அருமை சசி !

    ReplyDelete

  15. பொருள் மிகு வரிகள் பொதிந்த நல் கவிதை!

    ReplyDelete
  16. கலக்கல் கவிதை

    ReplyDelete
  17. 'காசிருந்தால் வாங்கிடலாம்' வரிகள் படித்தவுடன் 'எங்களுக்கும் வாழ்விருக்கும் நாளை என்ற நாளிருக்கும் வாழ்ந்தே தீர்வோம்' பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. விதைக் குறிப்புகள் ரசித்த வரிகள்.

    ReplyDelete
  18. கவிதை அருமை...வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. நல்ல சிந்தனை! நன்றி!

    ReplyDelete
  20. http://rssairam.blogspot.in/2012/08/blog-post_1825.html- தங்களின் பின்னூட்டத்திற்குப் பின் ஒரு தகவல் உள்ளது.மீண்டும் அந்தப் புத்தகம் கிடைக்குமா ?

    ReplyDelete
  21. விவசாயத்தின் கதைகளில்
    வாழ்ந்திருக்கும் சோகம்புரியும்.

    வாழ்ந்து அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும் .மிக மிக அருமை சகோ.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. ஆமாங்க அம்மணி சரிதான்..

    ReplyDelete
  23. உழைப்பவன் அழுதிருக்க
    உண்பவன் சிரிக்கின்றான்
    உடைந்த மண்பாண்டமாய்
    உலகத்தில் விவசாயி.// அழகாக இன்றைய வேளாண் பெருமக்களின் சூழலை பதிவு செய்து இருக்கிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  24. வாழ்வும் விளைநிலம்தான் அருமையான கருத்தை எடுத்துச் சொல்கின்றது கவிதை.

    ReplyDelete