Sunday 29 July 2012

வாழ்வு தேடும் பயணமதில்...!


சில்லென பூங்காற்று மேனிதீண்ட
சுள்ளென சூரியனும் விரைந்து வர
கல்லென அம்மாவும் சொல்லெறிய
கதவிடுக்கில் உருண்டோடி ஒளிந்திடவே!

சலசலவெனும்  நீரோடையருகே
கலகலவெனும் பேச்சுக்குரல்
விருட்டென எழுந்து விளையாட தினம் ஓடி
இருட்டென ஆனதே கல்விகற்ற வாலிபம்!

எறும்பைப் போல் சுறுசுறுப்பாய்
ஏர்பிடிக்கும் கிழவனைப்பார்
துரும்பைப் போல் நீயிருந்தால்
துவண்டிடுமே உன் வாழ்வும்!

என்றியம்பிய எம்தாயும்
என்துணையைத் தேடித்தந்தே
எங்கு ஓடி மறைந்தனளோ?
ஏமாளியாய் நானுமிங்கு ...
வாழ்வு தேடும் பயணமதில்!

36 comments:

  1. எல்லோருக்கும் தாம் நினைத்த வாழ்வு கிடைப்பதில்லை என்பதை விட... சாதாரணமான இயல்பான ஆரவாரமில்லா ஒரு வாழ்க்கையாவது கிடைத்தாலே போதும் என்று ஏங்கும் சராசரி பெண்களின் உள்ளங்கள் இங்கே..

    அப்பேற்பட்ட வாழ்வுகூட கிடைக்காத எத்தனையோ பெண்களின் வாழ்க்கையே இன்று வரை விடை காணாத கேள்வியாகவே தனிமரமாகவே நிற்கின்றன... இதனை தெளிவாக சொன்னவிதம் பாராட்டத்தக்கது சசி... என்ன செய்வது... இதைதான் விதி என்பதா... இல்லை சதி என்பதா... விடை தெரியா கேள்விகளில் இதுவும் ஒன்றுதான்....

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையும் முத்தான கருத்துரையும் மகிழ்வளித்தது நன்றிங்க.

      Delete
  2. நிதர்சனத்தை மனதில் பதிய வைத்த அருமையான கவிதை. சூப்பர் தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. மின்னல் வரிகள் மின்னிச் சென்றன நன்றி.

      Delete
  3. எறும்பைப் போல் சுறுசுறுப்பாய்
    ஏர்பிடிக்கும் கிழவனைப்பார்
    துரும்பைப் போல் நீயிருந்தால்
    துவண்டிடுமே உன் வாழ்வும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நட்பே.

      Delete
  4. ..என்றியம்பிய எம்தாயும்
    என்துணையைத் தேடித்தந்தே
    எங்கு ஓடி மறைந்தனளோ?
    ஏமாளியாய் நானுமிங்கு ...
    வாழ்வு தேடும் பயணமதில்!..

    அருமையான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  5. வாழ்வு தேடும் பயணத்தில் ஏமாளியாயின்று
    எதையும் சமாளிக்கும் வல்லமை பெற நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் கருத்துரை மகிழ்வளித்தது நன்றி சகோ.

      Delete
  6. நம் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நடை பிணமாய்தான் நடமாறுகிறார்கள்..கவிதையின் இறுதி வரிகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ உறங்குவதாய் நடிப்பவர்களை என்ன செய்ய முடியும்.

      Delete
  7. /// எறும்பைப் போல் சுறுசுறுப்பாய்
    ஏர்பிடிக்கும் கிழவனைப்பார்
    துரும்பைப் போல் நீயிருந்தால்
    துவண்டிடுமே உன் வாழ்வும்! ///

    பிடித்த வரிகள்... அருமை வரிகள்...
    வாழ்த்துக்கள்...

    நன்றி.
    (த.ம. 3)

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
    Replies
    1. கரும்பு இனிக்கும் எனக்கூற முகவரியுமா? வருகிறேன்.

      Delete
  8. நல்ல கருத்து கவிதை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  9. அடுத்த அத்தியாயம் ஆரம்பம் சகோதரி...
    ஏற்றுக்கொண்ட பாடமதை
    அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லும்
    நிலையில் இன்று...
    தேடும் பயணம் என்றும் நிற்காது..

    ReplyDelete
    Replies
    1. அண்ணாவின் வருகையும் தெளிவுபடுத்தும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி அண்ணா.

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  11. நல்லாயிருக்குங்க உங்க கவிதை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  12. // என்றியம்பிய எம்தாயும்
    என்துணையைத் தேடித்தந்தே
    எங்கு ஓடி மறைந்தனளோ?
    ஏமாளியாய் நானுமிங்கு ...
    வாழ்வு தேடும் பயணமதில்! //

    என்ற உங்கள் வரிகளைப் படித்ததும் நாலடியார் பாடலும் அதன் கருத்தும் நினைவில் வந்தன. “ எனது தாய் அவள் தாயைத் தேடி சென்று விட்டாள். அவள் தாயோ அவளது தாயைத் தேடிச் சென்று விட்டாள் “ என்ற கருத்துரை கொண்ட பாடல் இதோ....

    எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
    தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
    ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு
    ஏகும் அளித்திவ் வுலகு. - நாலடியார்

    ReplyDelete
    Replies
    1. நாலடியார் பாடல் தந்து விளக்கிய விதம் அருமை தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
  13. கவிதை அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  14. பெற்றவர்கள் தேடித்தர வாழ்கின்றோம் அவர்களுகாய்.நல்லதொரு கவிதையும் வரிகளும் சசி !

    ReplyDelete
  15. அருமை..அருமை..

    ReplyDelete
  16. உங்கள் எண்ணங்கள் இங்கு கவிதைகளாக மிக சிறப்பாக பிரகாசிக்கின்றன கவிஞரே!

    ReplyDelete
  17. அருமையான படைப்பாக்கம் ... மிகவும் ரசித்தேன் ..
    இக்கவிதையின் அர்த்தம் கொஞ்சம் ஆழமாக உணர்ந்தேன் ... என் நன்றிகள்

    ReplyDelete
  18. சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  19. திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
    “ BLOGGER SUNSHINE AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. மன்னிக்கவும்! விருதின் பெயர் “SUNSHINE BLOGGER AWARD “ முன்பு மாற்றி சொல்லி விட்டேன்.

    ReplyDelete