Tuesday 24 July 2012

நடப்பது நலமாக...!

காடாறு மாசமாச்சி நாடாறு மாசம் போச்சி
நாமபோடும் நாடகந்தான் அண்ணாச்சி-பாரில்
எல்லாமே வேஷமாச்சி அண்ணாச்சி!

கூடும் கட்டியாச்சி கூழும் குடிச்சாச்சி இதய
ஆசைமட்டும் வேகலையே அண்ணாச்சி.
மனப் பாசங்களே பொய்யாச்சி அண்ணாச்சி!
காடும் விளைஞ்சாச்சி கதிரறுக்க காலமாச்சி
களமெல்லாம் பெருக்கினேனே அண்ணாச்சி.
மனம் மட்டும் பெருக்கலையே அண்ணாச்சி!

வயசுக்கு வந்தாச்சி வாலிபம் பூத்தாச்சி
வண்டெல்லாம் மொய்க்கிறது அண்ணாச்சி.
நெஞ்சம் வாழ்வுநாடி போகிறது அண்ணாச்சி!
மண்ணுக்குள் ஒளித்திருந்த மஞ்சள் பறிச்சாச்சி
மனசுக்குள் மறைந்திருந்த கதவும் திறந்தாச்சி
காணாமல் போனேனே அண்ணாச்சி.
கடலலையாத் தவிக்கிறேனே அண்ணாச்சி!

ஜாதியென்றும் மதமென்றும் மாய்ந்து நிக்கிறாங்க
மனிதரில் எத்தனைதான் பேதமுண்டு அண்ணாச்சி
மரணத்தை வென்றவரைக் காணவில்லை அண்ணாச்சி!
நெல்லுக்கும் சாதியுண்டு கல்லிலும் பிரிவுண்டு
சொல்லியே பாடறாங்க அண்ணாச்சி இவர்
கண்திறப்பதெப்போதோ அண்ணாச்சி!

ஆச்சிகத முடிஞ்சி இப்போ சேச்சிகத வந்தாச்சி
மதங்கூட மாறறாங்க அண்ணாச்சி-முடிவில்
மானமிழந்து தவிக்கிறாங்க அண்ணாச்சி!
நன்மை தீமைஎன எல்லாம்இரண்டிரண்டா வாழுது
நட்பென்றும் பகையெனவும் அண்ணாச்சி
இவையொழியப் பாடப்போறேன் அண்ணாச்சி!

நடந்தது கனவாக்கி நடப்பது நலமாக நாம்கூடி
எழுந்து எழுதுவோமா அண்ணாச்சி .
தமிழ்பாட்டு தமிழனுயரப் பாடுவோம் அண்ணாச்சி!

24 comments:

  1. //தமிழ்பாட்டு தமிழனுயரப் பாடுவோம் அண்ணாச்சி!//

    பாடுவோம் பாடுபடுவோம் அண்ணாச்சி

    சகோ கவிதை மிக அருமை... எல்லாவற்றிலும் ஜாதி உண்டு என்று கூறிய எளிய வரிகளில் புரிகிறது எத்தனை எத்தனை ஜாதிகள் நம்மில் என்று

    ReplyDelete
  2. பொய்மையான வாழ்க்கைதனை வாழுகின்றோம்...
    நிஜங்களை இங்கே தொலைத்தவர்கள் நாம்தானே...
    எத்தனை பொய்கள் எத்தனை எண்ணற்ற வேஷங்கள்.
    அத்தனைக்கும் நாம் ஒருவரே இயக்குனர்கள்...
    வெளியிடப்படாத படத்தை தயாரிப்பதும் நாமல்லவோ. பூத்து குலுங்கவேண்டிய பெண் பூக்களும் பூத்தும் பயனில்லாமல் கருகியும் போனதே காசில்லாமல்... பிறந்த போதிருந்த மதத்தை மாற்ற நமக்கு இல்லை அருகதை என்பேன்... எது எது எப்படி எங்கே இருக்கவேண்டுமோ அது அது அப்படி தான் இருக்கவேண்டும் என்பதே முறையான ஒன்றும் கூட... மாற்றி யோசிப்பதால் தீமை மட்டுமே வந்து சேரும்...
    நாட்டின் நடப்பு பற்றி அழகாக எடுத்து சொல்லி இருக்கும் விதம் பிரமாதம் சசி... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. நல்ல கருத்துள்ள கவிதை....
    அண்ணாச்சி, அண்ணாச்சி என்று அழகாக எழுதி உள்ளீர்கள் சகோ... நன்றி... (த.ம. 1)

    ReplyDelete
  4. பிரமாதமா இருக்கு கவிதை...மனசுல தாளத்தோட கவிதையை படித்தேன் சசி.

    ReplyDelete
  5. வழக்கம் போல் அருமை சகோ (TM 3)

    ReplyDelete
  6. வாழ்க்கை நிகழ்வுகளை அருமையாக கவிதையாக்கியுள்ளீர்கள்!

    ReplyDelete
  7. சங்கே முழங்கு
    என்று பாவேந்தர் முழங்கியதுதான்
    நினைவுக்கு வருகிறது சகோதரி...

    ReplyDelete
  8. ஏக்கங்களின் எதார்த்தம்...
    அழகிய வடிவில்...

    ReplyDelete
  9. அருமை அருமை
    நாளொரு பதிவு கொடுத்தாலும்
    அனைத்தும் புதிய சிந்தனைகளாகவும்
    மனம் கவ்ரும்படியாகவும் இருப்பது
    ஆச்சரியப்படுத்துகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்ல கவிதை... அண்ணாச்சி என்று ரசிக்க வைத்துள்ளீர் கவிதையை...

    ReplyDelete
  11. கவி நல்லா இருக்கு அக்கா

    மொத்தத்தில சூப்பரா இருக்கு அக்காச்சி...

    ReplyDelete
  12. //காடாறு மாசமாச்சி நாடாறு மாசம் போச்சி
    நாமபோடும் நாடகந்தான் அண்ணாச்சி-பாரில்
    எல்லாமே வேஷமாச்சி அண்ணாச்சி!//அருமையான வரிகளுடன் அழகான கிராமத்து நயத்துடன் அற்புதமான கருத்துக்களை எடுத்து கூறி விதம் மிகவும் அருமை அக்கா....

    ReplyDelete
  13. மூச்சு வாங்குது சசி.கிராமத்து அழகி நீங்க !

    ReplyDelete
  14. சிறப்பான கிராமத்து கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. தரமான உயரிய படைப்பு... மண்வாசம் வீசும் வரிகள் ..
    அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. Wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

    ReplyDelete
  17. கிராமியப் பாணியில் நீங்கள் எழுதிவருவது மிக நன்றாக உள்ளது

    ReplyDelete
  18. தமிழ் சமுதாயம் உருப்படாமல் போனதற்கான காரணங்களை பட்டியலிட்டு ஒரு கவிதை. தமிழ்பாட்டு தமிழனுயரப் பாடும் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.

    ReplyDelete
  19. ஜாதியென்றும் மதமென்றும் மாய்ந்து நிக்கிறாங்க
    மனிதரில் எத்தனைதான் பேதமுண்டு அண்ணாச்சி
    மரணத்தை வென்றவரைக் காணவில்லை அண்ணாச்சி!
    நெல்லுக்கும் சாதியுண்டு கல்லிலும் பிரிவுண்டு
    சொல்லியே பாடறாங்க அண்ணாச்சி இவர்
    கண்திறப்பதெப்போதோ அண்ணாச்சி!//

    நல்ல கவிதை. ஜாதி, மதம் என்ற இருள் கண் மூடி, அறிவு கண் திறந்தால் நல்லது.

    ReplyDelete
  20. T.R பாட்டுன்னா(80களில் வெளிவந்த) எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பாணியிலே கிராமிய பாடல். வெகுவாக ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  21. அருமையான பகிர்வு... பாராட்டுகள் சகோ.

    ReplyDelete