Tuesday 31 July 2012

என்னவனைக் காணாமல்...!


வாசலெங்கும் தோரணமிட்டு
வாத்தியங்கள் முழங்கக்கேட்டு
வாசல் வந்தே நானும் நிக்க
வண்டாட்டம் கண்ணிரன்டு_பூச்
செண்டோட வந்து நிக்க
வாயடைத்து நானும் நின்னேன் 
வந்தவற காணலியே

மூச்சிழுத்து முனகி முனகி
முன்னும் பின்னும் ஓடிப்பிடித்து
ஓர் அணி ஜெய்க்கும் 
கபடியாட்டம் அங்கும் காணலியே.

கிட்டிப்புள் தட்டிவிட
புள் போகும் திசைநோக்கி
புயலென ஓடும் கூட்டம் (அங்கும் காணலியே)

வழுக்கு மர உச்சிதனில்
பரிசொன்னு காத்திருக்க
உசுருக்குள் புகுந்தவனை
உச்சி மரத்தில் தேடிப்பார்த்தேன் (அங்கும் காணலியே)

இரு பிரிவாய் சேர்திழுக்க
ஒரு புறமாய் வந்துசேரும்
பலம் சொல்லும் கயிறாட்டம் (அங்கும் காணலியே)

கண்கட்டி சுத்திவிட்டே
காலாட்டம் போடக்கண்டு
கதைத்திருந்த ஒரு கூட்டம்
சிரித்தடங்கும் வேளையிலே
சிறந்திடுமே உறியாட்டம் (அங்கும் காணலியே)

பருவ பெண்கள்
பல்லாங்குழி ஆட்டமாட
தூண்டிலென விழி வீச
துரத்திடுதே ஒரு கூட்டம்  (அங்கும் காணலியே)

கண்களிரண்டை கட்டிவிட்டு
தொட்டிடவே தொடர்ந்து வந்து
தூரத்தே விலகி ஓடும் கண்ணாமூச்சி . (அங்கும் காணலியே)

ஆலமர விழுதில் தொங்கி
ஆட்டமாடும் ஊஞ்சலாட்டம்  (அங்கும் காணலியே)

தத்தித் தத்தி நடந்து வந்து
தாவி குதித்தே முன்னே வரும்
சாக்கு பையாட்டம்  (அங்கும் காணலியே)

நிலா வெளிச்சம் நீண்டிருக்க
பச்சைக் குதிரை தாண்டிஆட
பார்த்திருக்கும் கூட்டமிங்கே . (அங்கும் காணலியே)

வட்டமான கூட்டத்திலே
தந்திரமாய் நுழைந்திடவே
தாளத்தோடு பாட்டிசைக்கும்
ஆடு புலி ஆட்டம் பாரு  (அங்கும் காணலியே)

வெட்டவெளி மைதானத்தில்
பட்டமிட்டு பார்த்து மகிழும்
கூட்டமுண்டு  (அங்கும் காணலியே)

எங்கு தேடியும் காணமல்
ஏங்கிப் போய் நானும் வந்தேன்
என் வீட்டுத்திண்ணையிலே
மடிக்கணினி பார்த்து நிக்கான்
மன்னவன என்ன சொல்ல?

42 comments:

  1. எல்லாம் இழந்து மடிக் கணினியுடன் மாய்ந்து போகப் போகும் இன்றைய சமுதாயத்தை உங்கள் பார்வையில் நானும் சேர்ந்து பார்ப்பது போலவே உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இப்போ கிராமத்தில் கூட மடிக்கணினி வந்துவிட்டதால் இப்படி ஒரு சிந்தை.

      Delete
  2. //ஏங்கிப் போய் நானும் வந்தேன்
    என் வீட்டுத்திண்ணையிலே
    மடிக்கணினி பார்த்து நிக்கான்
    மன்னவன என்ன சொல்ல?//

    உண்மையான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. ஏங்கிப் போய் நானும் வந்தேன்
    என் வீட்டுத்திண்ணையிலே
    மடிக்கணினி பார்த்து நிக்கான்
    மன்னவன என்ன சொல்ல?
    வருத்தமாய் தான் உள்ளது. இருப்பினும் மனம் அத்தனை விளையாட்டிலும் லயித்ததை மறுக்கமுடியவில்லை. அருமையான பதிவு. என் இரண்டாவது ஓட்டு.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க நம்மைப்போல் வரும் குழந்தைகள் இந்த விளையாட்டுகளை மறந்து விடுவார்கள்.

      Delete
  4. ஒரு தாலாட்டை சுவாசித்ததை போல் இருக்கு கவிதை சசிகலா..

    ReplyDelete
    Replies
    1. கண்ணம்மாவின் வருகையே எனக்கு தாலாட்டாய் நன்றி சகோ.

      Delete
  5. அழகான வரிகள் சின்ன வயதுக்கு சொந்தமான வரிகள்..........
    அட நம்ம பக்கமும் காணல்லியே

    ReplyDelete
    Replies
    1. அடடா அங்கும் வரவில்லையா..?

      Delete
  6. மெல்லிய தென்றலின் வீச்சாய் இதமான கவிதை. அருமை.

    ReplyDelete
    Replies
    1. மின்னலுக்கு ஏன் வார்த்தைகள் மெலிந்து விட்டன வசந்தமே.

      Delete
  7. தென்றலை போல இதம் தரும் கவிதை வரிகள் .. என் நன்றிகள

    ReplyDelete
    Replies
    1. அரசரின் வீதி உலாவிற்கு நன்றி ஏன்?

      Delete
  8. அருமையான கற்பனை தோழியே

    எங்கு தேடியும் காணமல்
    ஏங்கிப் போய் நானும் வந்தேன்
    என் வீட்டுத்திண்ணையிலே
    மடிக்கணினி பார்த்து நிக்கான்
    மன்னவன என்ன சொல்ல?

    என்னை வெகுவாக கவர்ந்தன இந்த வரிகள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோ.

      Delete
  9. காதல் என்றால் இப்பட்டித்தன் இருவர் கண்ணா மூச்சி விளையாட ஒருவர் கான்மூடி ஒன்றும் அறியதத்துபோல யாருப்பர் ஆனால் கண்களில் காதல் கொப்பளித்து இருக்கும் உங்களின் ஆக்கம் காதலனை தேடுகிறது ' என்னைப்பர்த்தான் நான் மண்ணைப் பார்த்தேன் நிமிர்ந்து பார்த்தேன் என் மன்னவனைக் காணலையே ' என்பாள் ஒரு காரிகை காதலில் எரமும் இரக்கமும் இயல்புதானே ?

    ReplyDelete
    Replies
    1. அழகான வரிகளுடன் வருகை தந்த சகோவிற்கு நன்றி.

      Delete
  10. //வழுக்கு மர உச்சிதனில்
    பரிசொன்னு காத்திருக்க
    உசுருக்குள் புகுந்தவனை
    உச்சி மரத்தில் தேடிப்பார்த்தேன் (அங்கும் காணலியே)//
    அழகிய கவிதை அன்புத்தங்கையே ,,
    மிக அழகு வரிகள் .. கிராமத்து வாசனையோடு ..

    ReplyDelete
  11. வீட்டை தவிர ஊரெங்கும் ஒரு வலம் வந்த அந்த அம்மணிக்கு..நம்பிக்கை அதிகமுண்டு போல..இவன் எங்கே வீட்ல இருக்க போகிறான் எப்படியும் எங்காவது சுத்திக்கொண்டு தான் இருப்பான் என்று...அதுவும் சரிதான் அம்மணி... நீங்க தேடி போன ஒவ்வொரு எடத்துல இருந்தும் அப்பத்தான் சென்று போயிருக்கிறான் ஒங்க ஆசை மன்னன் எனும் மச்சான்...

    அது தெரியாம எங்கயுமே போகாம வீட்டுலயே அடைஞ்சு கிடக்குறான் என்று நீ நெனச்சா... ஒன்னோட அப்பாவித்தனத்த நான் என்னன்னு சொல்லு... இப்படித்தானே நீ மட்டுமல்ல காலம் காலமாய் நமது பெண்கள் எல்லோருமே நம்பி நம்பி...வெம்பி வெம்பி...ஓட்டுகிறார்கள் காலத்தை.. அப்படியே படம்பிடித்து காட்டிய சசி உங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்... காண கிடைக்காத ஒரு அருங்காட்சி தான் இது... அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சசிக்கு...

    ReplyDelete
    Replies
    1. விரிவான தங்கள் வரிகளும் ரசிக்கும் படி தந்த விதமும் அருமை நன்றிங்க.

      Delete
    2. நன்றிக்கு நன்றி சொல்கின்றேன்...

      Delete
  12. இன்றியமையாத கவிதை

    ReplyDelete
  13. அழகான தேடல் கவிதை! அருமை! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. ம்ம்ம் ..ம் (:
    இதமான கவிதை தேடல்
    அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் சகோ.

      Delete
  15. வழக்கம் போல் அருமையான கவிதை!

    ReplyDelete
  16. பாடல் தொனியில்.. அருமை..

    ReplyDelete
  17. அருமையான கவிதை..பல விளையாட்டுகளையும் குறிப்பிட்டு பின்னர் இன்றைய நிலையை சொல்லியிருக்கும் விதம் எல்லோரும் உணரக்கூடியது!

    ReplyDelete
  18. எல்லா ஆட்டமும் நீங்கள் மட்டும் ஆடி விட்டு
    இறுதியில் மடிக் கணினி என்று முடித்தது முத்தாய்ப்பாக இருந்தது.
    ஆதங்கம் அருமை sasi.
    [ இன்று என் வலைப் பக்கத்தில் ....
    எந்திர உயிர்ப்பு !

    http://sravanitamilkavithaigal.blogspot.in/ ]

    ReplyDelete
  19. உலகமே மடிக்கணினியில் மூழ்கியிருக்கும்போது உங்களவனை நீங்க ஏன் எங்கெங்கோ போய் தேடுறீங்க? தப்பு ”அவர்” மேல இல்லை. உங்க மேலதான் தப்பு.

    ReplyDelete
  20. அருமை என்று சொல்வதை தவிர வேறு ஏதும் சொல்லத்தோனவில்லை உங்கள் எண்ணங்களும் எழுத்துக்களும் நிரோடை போல அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. நதிக்கரை ஒரத்தில் அதிகாலையில் அம்ர்ந்து அதை தனியாக பார்த்து ரசிக்கும் ஒருவனைப் போல உங்கள் கவிதைகளை ரசித்து கொண்டிருக்கிறேன். இந்த காலத்தில் கவிதை படிப்பவர்களை விட எழுதுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அப்படி இருக்கும் நிலையிலும் உங்கள் கவிதை மனதை தொட்டு வானில் உள்ள நட்சத்திரமாய் பிரகாசமாய் ஜொலிக்கின்றன....வாழ்த்துக்களும் பாராட்டுகளும் சசி

    ReplyDelete
  21. அழகிய வரிகள்... வாழ்த்துக்கள்...

    நன்றி...
    (த.ம. 6)

    ReplyDelete
  22. இளம் வயதின் ஆட்டங்கள்
    இன்றிருக்கும் கணினிக்குள்...
    எண்ணிலடங்கா ஏக்கத்தை
    எழுதிவிட்டாய் நீயும்..... கணினிக்குள்ளே...!!!

    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  23. நிதர்சன வரிகள்.இன்றைய காதலர்கள் கணணிக்குள்தான்.அழகான காதல் கவிதை சசி !

    ReplyDelete
  24. ada daa!
    kaniniyai therinthavan -
    kanniyai maranthatheno....

    ReplyDelete
  25. எல்லா ஆட்டங்களையும் இப்போ கணினியிலதான் ஆடறாங்க!
    இன்றைய நிலையை எடுத்து சொல்லும் கவிதை

    ReplyDelete
  26. ஒரு கவிதைக்குள் எத்தனை விஷயங்களை உள்ளடக்கியுள்ளீர்கள். உடலும் மனமும் ஒருங்கே வலுப்பெறும் கள விளையாட்டுகள், நட்புறவை வளர்க்கும் குழு விளையாட்டுகள், கலாச்சார, பாரம்பரியப் பெருமைகளைக் கொண்ட கிராமிய ஆட்டங்கள் என ஒவ்வொன்றாய் விளக்கி இறுதியில் மடிகணினியில் மையங்கொண்ட மனதையும், திண்ணையில் ஓய்ந்து கிடக்கும் உடலையும் சுட்டி இன்றைய இளந்தலைமுறையினரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete