Thursday 30 August 2012

வரப்போரத்துல கண்ணம்மா !



சிலுசிலுணு  காத்தடிக்குதே கண்ணம்மா
தளதளணு விளைஞ்சி நிக்கிர நெல்லம்மா
சலசலணு நெளிந்து வரும் நீரம்மா
கமகமணு மணம் வருதே பூவாசமா ?

தடதடணு அடிச்சிக்குதே கதவம்மா
சடசடணு வந்திடுதே மழையம்மா
மடமடணு எடுத்த வை விதநெல்லம்மா
கடகடணு ஓட்டமிடும் வண்டியம்மா !

குளுகுளுனு குளிரெடுக்குதே வள்ளியம்மா
கூவிக் கூவிக் மருகி நிக்கும் குயிலம்மா
தத்தித் தத்தி நடந்து வரும் மயிலம்மா
தாவியணைக்க பக்கம் வாடி செல்லம்மா !

33 comments:

  1. மனசுக்குள்ள லேடி டி.ஆர்ன்னு நினைப்பு. இரட்டைகிளவிலாம் போட்டு கவிதை எழுதுறா.

    ReplyDelete
    Replies
    1. அய் அக்கா எனக்கு புதுசா ஒரு பட்டம் கொடுத்துட்டாங்க பா நன்றி நன்றி நன்றி.

      Delete
    2. அடடா அக்கா உங்களோட பேச நான் டீயுசன் எடுக்கனும் இருங்க எங்க டீச்சர் எங்கனு தேடிட்டு வரேன்.

      Delete
    3. ராஜி ஏன் இந்தக் கொலைவெறி?

      Delete
  2. எனக்கு ஒத்தைக் கிளவியையும் தெரியாதுப்பா... அதென்ன ரெட்டைக் கிளவி? ங்ஙேஙேஙேஙே. விதவிதமா பாட்டெழுதி அசத்தறீங்க தென்றலம்மா.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் அம்மாவாகிட்டனோ...என்ன ஆச்சி எல்லோருக்கும்.

      Delete
    2. நீங்க கவிதையில நிறைய அம்மா போட்டதோட விளைவுதான் இதெல்லாம் நினைக்கறேன். சரிதானே சகோ. சசிகலா?

      Delete
  3. இளையராஜா பாட்டுப் படிச்சமாதிரி ஒரு பீலிங்க்..
    அழகான வரிகள்

    ReplyDelete
  4. நல்ல வரிகளம்மா... நன்றி...

    சகோதரி ராஜிக்கு பொறாமை வந்துருச்சி... ஹா.. ஹா...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அம்மானு சொல்லிட்டீங்களா. சரிதான்.

      Delete
  5. சென்னை பதிவர்

    சென்று வந்த சசியம்மா...

    உன் பதிவை யாரும்

    குறை சொல்ல முடியுமா..

    மட மடன்னு கவிதை எழுதும் சசியம்மா..

    உன் கவிதை வரி அத்தனையும் சந்தோஷமம்மா....

    ReplyDelete
    Replies
    1. அய் கவிதையா வாழ்த்திய சகோ ஆமா அது என்ன நீங்களும் அம்மாவா?

      Delete
  6. கிராமிய மணத்தில் ஒரு கவிதை
    நன்று

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. கிராமிய பாடலின் உணர்வு...நல்லா இருக்கு சகோ...

    ReplyDelete
  8. சூபரா இருக்குதே இந்தக் கவிதை ! இதை
    சுப்பு தாத்தா பாட அனுமதி உண்டா ?

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விருப்பம் ஐயா தங்களின் ஆசியுடன் தொடர்கிறேனே.

      Delete

  9. வரப்போரத்துல வர்ர கண்ணம்மாவத் தாவி அணைச்சா வெக்கம் வாராதாம்மா.

    ReplyDelete
  10. நல்லதொரு கிராமிய கவிதை! அருமை!

    இன்று என் தளத்தில்
    ருத்திராட்சம் சில தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

    ReplyDelete
  11. ரொம்ப நல்ல இருக்குது சசியம்மா

    ReplyDelete
  12. பாடல் நல்லாருக்குங்க...!

    ReplyDelete
  13. கவிதை இருந்தது ரொம்பவே சுகமா....

    அருமையான கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி சசிகலா.

    ReplyDelete
  14. இந்த பாட்டை இங்கேயும் கேட்கலாம்.

    SUBBU RATHINAM
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  15. இரட்டைக்கிளவியில் கவிதை அருமை !

    ReplyDelete
  16. பனிக்கால சூழல் குளிரும் உங்களது சிறந்த பாடலும்

    ReplyDelete
  17. நல்ல கவிதை சில்லிடுகிறது மனது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete