Monday 13 August 2012

நிழலுக்கு நீரூற்றி...!


நிழலுக்கு நீரூற்றி வளர்க்கும் மானிடர்கள்
நிஜத்தை ரணமாக்கி வாழ்ந்து பயனில்லை!
நிம்மதி என்றெண்ணி பொய்யோடு உறவாடில்
நிறைகுடமாகாது வாழ்வு பொய்யெழுதும்!

நேற்றொன்று இன்றொன்று நாளை வேறென்று
நேசத்தின் பார்வை ஆசைவழி போகுமெனில்
நேர்கோட்டு பயணம் வளைந்தோடிப்போகும்
நேர்மை என்பது கனவாகி கதையெழுதிமாயும்!

ஒன்றுக்குள் ஒன்றாய் இணைகின்ற பந்தம்
ஒருநாளும் ஒழியா அறமாக வேண்டும்
ஒருவரையொருவர் புரிதல் இருந்தால்
ஒற்றுமையென்பது நிரந்தர வரமே!

அன்பைப்பாடி அன்போடுபாடி தீபமேற்றின்
அனைத்தும் அழகே அதுதான் பொன்வாழ்வே!
அள்ளிக்கொடுக்க காசுபணம் வேண்டாம்
அன்பே தெய்வம் பகிர்ந்தால் அதுவே நிம்மதி!

அழகான மலரெல்லாம் அழகல்லப் பார்த்தேன்
அறிவென்ற பாதையில் அவலமும் கண்டேன்!
அகம் வாழும் அழிவில்லா இதய அன்பதனை
அறிந்து சூடின்  பெருவாழ்வுஅதுவே அறிதல் நன்று!

கதவைத் திறந்து காத்திருக்கும் இதயத்தின்
கனவுகள் மெய்ப்படின் காதல் வாழும்!
கண்ணில் மலரும் காட்சிகள் யாவுமினி
கவிதையாய் உருமாறி என்னாளும் வாழும்!

20 comments:

  1. நேர்மை என்பது கனவாகி கதையெழுதிமாயும்!//////////

    அப்போ பல கவிஞர்கள் நேர்மையானவர்களோ...
    அழகான கவிதை அக்கா

    ReplyDelete
    Replies
    1. நேர்மையான எண்ணங்களே வரிகளாய் வெளிப்படும் என்பது என் கருத்து சகோ.

      Delete
  2. அருமையான கவிதை....

    மிகவும் பிடித்த வரிகள் :

    /// அன்பைப்பாடி அன்போடுபாடி தீபமேற்றின்
    அனைத்தும் அழகே அதுதான் பொன்வாழ்வே!
    அள்ளிக்கொடுக்க காசுபணம் வேண்டாம்
    அன்பே தெய்வம் பகிர்ந்தால் அதுவே நிம்மதி! ///

    வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete

  3. கதவைத் திறந்து காத்திருக்கும் இதயத்தின்
    கனவுகள் மெய்ப்படின் காதல் வாழும்!
    கண்ணில் மலரும் காட்சிகள் யாவுமினி
    கவிதையாய் உருமாறி என்னாளும் வாழும்!//

    காதலும் வாழட்டும்
    அதைத் தொடர்ந்து இதுபோன்ற
    அற்புதக் கவிதைகளும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன் ஐயா.

      Delete
  4. அன்பே சிவமும் சக்தியும் உண்மை வாழ்வும் சசி .
    நன்று. இன்று தேவையான ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  5. tha.ma.5
    //கதவைத் திறந்து காத்திருக்கும் இதயத்தின்
    கனவுகள் மெய்ப்படின் காதல் வாழும்!//
    உண்மை;அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  6. //கதவைத் திறந்து காத்திருக்கும் இதயத்தின்
    கனவுகள் மெய்ப்படின் காதல் வாழும்!
    கண்ணில் மலரும் காட்சிகள் யாவுமினி
    கவிதையாய் உருமாறி என்னாளும் வாழும்!//

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  7. /அன்பைப்பாடி அன்போடுபாடி தீபமேற்றின்
    அனைத்தும் அழகே அதுதான் பொன்வாழ்வே!
    அள்ளிக்கொடுக்க காசுபணம் வேண்டாம்
    அன்பே தெய்வம் பகிர்ந்தால் அதுவே நிம்மதி!/

    பிடித்த வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமையான கவிதை.... அனைத்து வரிகளும் மிக அருமை

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் :

    ஒன்றுக்குள் ஒன்றாய் இணைகின்ற பந்தம்
    ஒருநாளும் ஒழியா அறமாக வேண்டும்
    ஒருவரையொருவர் புரிதல் இருந்தால்
    ஒற்றுமையென்பது நிரந்தர வரமே!

    ReplyDelete
  9. ஒன்றுக்குள் ஒன்றாய் இணைகின்ற பந்தம்
    ஒருநாளும் ஒழியா அறமாக வேண்டும்
    ஒருவரையொருவர் புரிதல் இருந்தால்
    ஒற்றுமையென்பது நிரந்தர வரமே!

    அன்பைப்பாடி அன்போடுபாடி தீபமேற்றின்
    அனைத்தும் அழகே அதுதான் பொன்வாழ்வே!
    அள்ளிக்கொடுக்க காசுபணம் வேண்டாம்
    அன்பே தெய்வம் பகிர்ந்தால் அதுவே நிம்மதி!

    சிறப்பான வரிகள்! அருமையான படைப்பு வாழ்த்துக்கள்



    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  10. அன்பெனும் ஒளி அனைவர் மனங்களிலும் பரவட்டும்.
    அருமையான கவிதை.

    ReplyDelete

  11. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  12. //அழகான மலரெல்லாம் அழகல்லப் பார்த்தேன்
    அறிவென்ற பாதையில் அவலமும் கண்டேன்!

    தீடீரென்று சித்தர் பாணியில் போன கவிதையை

    //கதவைத் திறந்து காத்திருக்கும் இதயத்தின்
    கனவுகள் மெய்ப்படின் காதல் வாழும்!

    என்று திருப்பிக் கொண்டு வந்தீர்கள். நன்று.
    (சித்தர் தத்துவமும் பிடித்தது.)

    ReplyDelete
  13. அன்பின் சசிகலா - கவிதை அருமை - நன்று - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete