Thursday 16 August 2012

வஞ்சமில்லா மனிதனவன் !


வழிப்போக்கன் அவன் வாழ்வில்
வண்ணங்கள் நிழற்படமாய்!
காற்று அவன்சொந்தம்
கடலலை ஜூவிதப் பாட்டாக!
பச்சைக்கிளி அவனுறவு
பட்டமரமே வாழும் மணிமண்டபம்!

காலைப் பனியில் குளித்திடுவான்!
உச்சிவெயிலில் பாட்டிசைப்பான்!
கட்டாந்தரையவன் பஞ்சணையாக
இரவின் உறவை ரசித்திருப்பான்!

வண்ணநிலா மனதில் நாட்டியமாடும்!
எண்ணவெள்ளிகள் சேர்ந்துபாடும்!
மண்ணின் மணமவன் தாலாட்டு!
மாடப்புறா நெஞ்சின் களைக்கூத்து!

குழலோசையாய் மலை ஈத்தல் உரசல்!
குயில்பாட்டாய் அருவியின் இரைச்சல்!
முரசொலியாய் யானைப் பிளிறல்!
சூரியனாய் மின் மினி ஒளிகள்!

தமிழோடு கைகோர்ப்பான் போகும்
பாதையெல்லாம் அதைவிதைப்பான்!
காடெல்லாம் மனமலைந்தோடினாலும்
நினைவு விஷமில்லா தேனமுதாய்!

பகலுமில்லை இரவுமில்லை
 பட்டினிப் பிரிவால் காயமுமில்லை!
சாஸ்திரம் அவனறியான் சட்டத்தின்
ஓட்டைகளை உணர்ந்தறியான்!
சம்பிரதாயச் சடங்குகளின் மறுபக்கம்
ஒளியா  இருளாப் பொருட்டில்லை!

கரைபடா இதயத்தின் உரிமையை
கேட்கப் புவியில் யாருமில்லை!
இடிதாங்கி அவனில்லை அவனை
மடிதாங்கவும் நாதியில்லை!

அவன்வழிப் பைத்தியமேயானாலும்
வஞ்சமில்லா மனிதனவன்!
அகமொன்றும் புறமொன்றுமெனவாழும்
நமைப்போல் மிருகமல்ல!!

33 comments:


  1. அவன்வழிப் பைத்தியமேயானாலும்
    வஞ்சமில்லா மனிதனவன்!
    அகமொன்றும் புறமொன்றுமெனவாழும்
    நமைப்போல் மிருகமல்ல!!//

    தலைபிற்கேற்ற அருமையான கவிதை
    மன்ம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. suttu vittathu!
    kadaisi .......


    arumai!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. கரைபடா இதயத்தின் உரிமையை
    கேட்கப் புவியில் யாருமில்லை!
    இடிதாங்கி அவனில்லை அவனை
    மடிதாங்கவும் நாதியில்லை!அழகு வரிகளில் அருமையான கவிதை ..

    வஞ்சமில்லா நெஞ்சம் கொண்டவன் -பித்தன் ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. வஞ்சமில்லா மனிதன் ! உண்மையான மனித பிறவி! நன்று

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  6. ம்ம்ம்... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களைக் கண்டபோது இப்படியான மனிதர்கள் அவர்களை விட உயர்ந்தவர்களென்று பல சமயங்களில் தோன்றியதுண்டு எனக்குள். கவிதை அருமை தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் கருத்துரை நன்றிங்க.

      Delete
  7. இயலாமையில் வாடும் இயற்கையின் ரசிகனைப் பற்றிய வர்ணனையென எண்ணியிருந்த என்னை இறுதி வரிகளில் தெறித்த உண்மை திடுக்கிடவைத்தது. அவன்தான் மனிதன் என்று எண்ணத்தோன்றியது. அருமையான படைப்பு. பாராட்டுகள் சசிகலா.

    இரச்சல்- இரைச்சல், பிளிரல்- பிளிறல் போன்ற ஒன்றிரண்டு எழுத்துப்பிழைகளைக் களைந்தால் இன்னும் சிறக்கும். தவறாக நினைக்கமாட்டீர்கள்தானே...

    ReplyDelete
    Replies
    1. அம்மா இவன் தப்பு தப்பா எழுதுறான் என்று சொல்வது தான் சகோதர உறவு. இதற்கு ஏன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

      Delete
  8. அருமையான கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்..
    த.ம 5

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

      Delete
  9. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

      Delete
  10. //பகலுமில்லை இரவுமில்லை
    பட்டினிப் பிரிவால் காயமுமில்லை!
    சாஸ்திரம் அவனறியான் சட்டத்தின்
    ஓட்டைகளை உணர்ந்தறியான்!
    சம்பிரதாயச் சடங்குகளின் மறுபக்கம்
    ஒளியா இருளாப் பொருட்டில்லை!//

    அருமையான வரிகள்....

    (TM 7)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

      Delete
  11. கருத்தொன்று பதிவிட்டேன். ரமணியின் அழுக்கு மூட்டையும் உங்கள் வஞ்சம் இல்லா மனிதனும் கருவில் ஒன்றாய் தெரிகிறதே என்று, அடுத்தடுத்து இப்பதிவுகளைப் படித்ததின் தாக்கமோ என்றும் குறிப்பிட்டிருந்தேன். அது ஏனோ வரவில்லை. உங்கள் கவிதை வரிகள் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் பதிவிட்டு பிறகே ஐயாவின் பதிவைப் பார்த்தேன். சிந்தனை ஒருமித்து இருப்பதில் தவறில்லையே ஐயா.

      Delete
  12. தரமான படைப்பாக்கம் ...
    எப்படி அக்கா ..
    இப்படில்லாம் நெடுநேரம் ரசித்தேன் ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி சகோ.

      Delete
  13. நல்லதொரு பதிவு மீண்டும் படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

      Delete
  14. வழிப்போக்கன் பற்றிய கவிதை அருமை! அருமையான வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

      Delete
  15. அவனும் மனிதன்தான்.காற்றைப்போலச் சுதந்திரமானவன்.அவன்தான் அதிஷ்டசாலி !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ அதிஷ்டசாலியே.

      Delete
  16. அவர்களும் மனிதர்களே/நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. //இடிதாங்கி அவனில்லை அவனை
    மடிதாங்கவும் நாதியில்லை!// வஞ்சமில்லா மனிதனவன்

    அழகிய வரிகளில் அற்புத கவிதை....

    ReplyDelete