Thursday 9 August 2012

ஆமைகள்...!

முயலாமையாலே  இல்லாமை சூடின்
வாழ்வே கனவாகும்!
கல்லாமையாலே அறியாமை வந்தால்
எதிர்காலம் பொய்யாகும்!

தேடாமையாலே தெரியாமை வாழின்
நினைவும் குருடாகும்!
எண்ணாமையாலே எழுதாமை நேரின்
கவிதையும் உயிரிழக்கும்!

தேற்றாமையாலே ஆற்றாமை விளையின்
கண்ணீரே கதைபாடும்!
பகிராமையாலே புரியாமை வருமின்
உறவே பிரிவாகும்!

தீண்டாமையாலே கூடாமையிருப்பின்
ஒற்றுமை பாலையாகும்!
பொறாமையாலே போற்றாமை உயிர்ப்பின்
பகையே உறவாகும்!

உண்ணாமையாலே உறங்காமை நேரின்
உலகே கசப்பாகும்!
கொடாமையாலே கொள்ளாமை வந்தால்
வாழ்வில் அர்த்தமில்லை!

இறவாமையென்ற பொன்னாமை தேடல்
என்னாளும் நலமாகும்!
வாய்மை நேர்மை உண்மை மேன்மை
இதுவே உயர்வாகும்!

29 comments:

  1. முயலாமையாலே
    கல்லாமை
    தேடாமை
    எண்ணாமை
    தேற்றாமை
    பகிராமை
    தீண்டாமை
    பொறாமை
    உண்ணாமை
    கொடாமை
    இறவாமை
    வாய்மை
    இத்தனை ஆமைகள் கொண்டு முயல் வேகத்தில் பயணப்பட்ட கவிவரிகள் ஆழமாய் நெஞ்சத்தில் பாய்ந்தது என்றே சொல்லவேண்டும் அருமையான கவி நடை தோழி...........

    ReplyDelete
    Replies
    1. சகோ எல்லா ஆமைகளையும் தனித்து குறிப்பிட்ட கருத்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. பொறாமை கொள்ளாமை கெர்ண்டு மனம் நிறைந்து வாழ்த்தினால் மனம்நிரம்பி மகிழ்ச்சியாகும. வாய்மை, நேர்மை. உண்மை கொண்டால் வாழ்வே அழகாகும். ஆமையை வைத்து வார்த்தையில் விளையாடி அழகிய கருத்தினை உரைத்து அசத்திட்டீங்க தென்றல். அருமை.

    ReplyDelete
    Replies
    1. அசத்தல் எனக் கூறி ஆர்வத்தோடு வந்து கருத்திட்ட வசந்தத்திற்கு நன்றி.

      Delete
  3. ..வாய்மை நேர்மை உண்மை மேன்மை
    இதுவே உயர்வாகும்!..

    உண்மையான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. உண் 'மை' சகோதரி...
    வாழ்த்துக்கள்... நன்றி… (TM 5)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. கவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. ஆமைகளை பொதுவாக எல்லோருமே வேண்டாமென்ற சொல்வார்கள்.. அதிலும் வேண்டும் என்று சொல்கின்ற ஆமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் தான் நமக்கு எதுவேண்டும் எதுவேண்டாமென்று பிரித்து பார்க்க தெரிந்துகொள்ளவேண்டும்... வேண்டும் என்ற ஆமைகளால் வாழ்க்கை கஷ்டமாக இருப்பது போல் தோன்றும்.. ஆனால் நிம்மதியான வாழ்வு இரவில் ஆழ்ந்த மருந்தில்லா உறக்கம் வரும்...

    வேண்டாமென்ற ஆமையினால் நமக்கு வசதியான ஒரு வாழ்வு கிடைக்குமே தவிர அதனால் என்றுமே நமக்கு நிம்மதி என்ற ஒன்று எப்போதுமே இருக்காது... எந்த ஒரு வாழ்க்கை நமக்கு தேவை என்பதை அவரவர் தான் முடிவு செய்துகொள்ளவேண்டும்...
    அருமையாக சொன்னீர்கள் சசிகலா..ஆமைகளிடம் உள்ள வித்தியாசத்தையும் ஆமைகளினால் ஏற்படும் நல்லது கெட்டதுகளையும்...
    எல்லாமே மனிதர்களாகிய நம் கையில் தான் இருக்கிறது... பாராட்டுக்கள் சசி தங்களுக்கு...

    ReplyDelete
  7. இந்த உடல் வீட்டில் இந்த வேண்டாத ஆமைகள் புகுந்தால் உருப்படுமா?
    அருமை சசிகலா

    ReplyDelete
  8. இறவாமையென்ற பொன்னாமை தேடல்
    என்னாளும் நலமாகும்!
    வாய்மை நேர்மை உண்மை மேன்மை
    இதுவே உயர்வாகும்!

    பொல்லாமை, பொறாமை, நீக்கினால்
    எல்லாம் நலமாகும்

    வாழ்த்துகள் தங்கையே,நல்ல அருமையான வரிகள்

    ReplyDelete
  9. ஆமைகளும் அமீனாக்களும் வேண்டாமே ....
    இறுதி ' மைகளை ' கொண்டு நமது வாழ்வை 'வளமை'
    ஆக்குவோம். அருமை சசி !

    ReplyDelete
  10. பொல்லாமை சூழ்ந்திடினும்
    நில்லாமை வேண்டுகிறேன் உம் அழகுக் கவிக்கு...

    ReplyDelete
  11. ஆமைகள்..அருமை..அருமை

    ReplyDelete
  12. இக்கவிதையை போற்றாமையால்
    ஆற்றாமையே என்னுள் எழும்! வாழ்த்துக்கள் சகோதரி! சிறப்பான படைப்பு!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  13. உண்மை... உண்மை...

    அருமைங்க சசிகலா.

    ReplyDelete
  14. அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  15. அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ஆமைகளை இப்படி அடுக்கிக் கொண்டே போறீங்களே..இவ்வளவு ஆமை இருக்கென்றதே எழுத்துக்களால் வடிவமைக்கும் போதுதான் இலகுவாக புரிகிறது.....

    அசத்தல் கவிதை சகோ

    ReplyDelete
  17. அருமையான ஆழ்ந்த கவிதை சகோதரி! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. தேய்க்க தேய்க்க விளக்கு மிகவும் பள பளப்பாக இருபதை போல நீங்கள் எழுத எழுத கவிதைகள் மின்னிக் கொண்டு அருமையாக வருகின்றன

    ReplyDelete
  19. இறவாமையென்ற பொன்னாமை தேடல்
    என்னாளும் நலமாகும்!
    வாய்மை நேர்மை உண்மை மேன்மை
    இதுவே உயர்வாகும்!//

    கவிதை மிக அருமை.
    இந்த வரிகள் மிக மிக அருமை.
    இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தால் வாழ்வில் நலம் பெறலாம்.
    நன்றி,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. பொன்னாமை என்பதற்கு இறவாமை என்று பொருளா, விளக்கம் வேண்டும் தங்கள் இந்தக் கவிதைrssairam.blogspot.com -ல் தங்கள் வலைத்தள முகவரி,அனைவர் படங்களுடன் மீள்பதிவாகியுள்ளது. அனைத்துக் கவிதைகளையும் இனிமேல்தான் படித்திட வேண்டும். வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies

    1. காலத்தை வெல்லும் வாழ்வு - நீதி நேர்மை உண்மை அணிந்து
      சமூகத்துக்காக தன்னை அர்பணித்து வாழ்கின்ற பெரியார்கள்
      அழியார் பொன்னாமைத் தோடு போன்று எந்நாளும் வாழ்கிறார்கள்.
      அந்த தோடைத்தான் உவமையாக குறிப்பிட்டேன்.
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.

      Delete