Saturday 1 September 2012

ஓடி ஒளிய இடம் தேடி !


மனம் ஏனோ மயங்குதடா
மல்லிகையாய் மலருதடா
மண் வாசம் கூட என்னோட
மல்லுக்கு நிக்குதடா...!

சொல்லுக்கு மயங்கி தினம்
சொப்பனத்தில் மிதக்குதடா
கள்ளத்தனம் ஏனடா !
பார்த்த விழி பூத்திருக்க
பாட்டெல்லாம் கேட்டிருக்க
பரவசமாய் உன் முகமே
பாடாய் படுத்துதடா !

பாடலில் உன் அழகே
பல்லவியாய் ஆனதடா..
தேடலிலும்  உன் முகமே
முன் வந்து நிற்குதடா...
ஓடி ஒளிய இடம் தேடி
உன் இதயம் கண்டேனடா..
என்னிலே அது இருக்க
நான் எங்கு போவேனோ ?

41 comments:

  1. Replies
    1. இந்த ம் க்கான அர்த்தத்தை சொல்லிடுங்களேன்.

      Delete
  2. சகோ
    தலைவன் இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்

    கவிதை ம்ம்ம் ...காதல்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ அப்படியே ....

      Delete
  3. என்னிலே அது இருக்க... நான் எங்கு போவேன்? அருமையான வரிகள். கவிதைக்கேற்றபடி நீங்கள் போட்டிருக்கும் படமும் அழகு தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. வரிகளோடு படத்தையும் ரசித்த வசந்தத்திற்கு நன்றி.

      Delete
  4. நல்ல காதல் கவிதை! என்னிலே நான் இருக்க நான் எங்கு போவேன்! அருமையான வரிகள்! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. அதானே! உங்களுக்குள்ளயே வெச்சிக்கிட்டு வேறெங்கோ தேடினா எப்படி?

    ReplyDelete
  6. நல்லது...

    இதயத்தை இடம் மாற்றி அழகிய வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் விளக்கம் அழகு.

      Delete
  7. ஓடி ஒளிய இடம் தேடி
    உன் இதயம் கண்டேனடா..
    என்னிலே அது இருக்க
    நான் எங்கு போவேனோ ?

    good

    kudanthaiyur.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. காதலுக்கு வயதில்லை,இன்னமும் காதல் செய்யலாம் தப்பில்லை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. ஓடி ஒளிய சிறப்பான இடம் இதயம் மட்டுமே... நல்லா இருக்கு சகோ!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி சகோ.

      Delete
  10. அழகான கவிதை
    நிச்சயமாக சொல்கிறேன் அவன் நானில்லை... :)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக யாரும் இல்லை.

      Delete
  11. ஓடி ஒளிய இடம் தேடி
    உன் இதயம் கண்டேனடா..
    என்னிலே அது இருக்க
    நான் எங்கு போவேனோ ?

    தென்றலாய வருடும் வரிகள் .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. அழகான கவிதை அருமையான வரிகள். இது காதலிக்கும் போது நாம் நினைப்பது கல்யாணத்திற்கு அப்புறம் என்று ஒரு கவிதை எழுதலாமே

    ReplyDelete
    Replies
    1. க. மு க. பி எப்போதுமே அன்பு ஒன்று தானே.

      Delete
  13. அருமையான வரிகளுடன் கூடிய அழகான கவிதை, பாராட்டுக்கள்.

    //ஓடி ஒளிய இடம் தேடி
    உன் இதயம் கண்டேனடா..
    என்னிலே அது இருக்க
    நான் எங்கு போவேனோ ? // ;))))))) தென்றலாய் வருடும் வரிகளே !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. அருமையான கவிதை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. அருமையான வரிகள். தொடருங்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. நல்ல வரிகள் சகோதரி... நன்றி...

    இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்... (Edit html Remove Indli Vote button script & and Remove Indli Follow Widget)
    (Caution : Restore/Backup your HTML) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சரிங்க.

      Delete
  17. அருமையான குட்டிக் கவிதை வரிகள், சகோதரி. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகை மகிழ்வளித்தது நன்றிங்க.

      Delete
  18. கவிதையும் கவிதைக்கான படமும் அருமை சகோ. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்ட மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete


  19. // ஓடி ஒளிய இடம் தேடி
    உன் இதயம் கண்டேனடா..
    என்னிலே அது இருக்க
    நான் எங்கு போவேனோ ?//

    உன்னத வரிகள் உயர்ந்தமுடிபு!

    ReplyDelete
  20. இரசித்தேன்!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete