Friday 10 August 2012

காலத்தின் கண்மணிகள்...!


கோடில்லா நீலவானில்
கோலமிடும் மின்னல்!

நிலவுகரைந்த நாளும்
மின்னும் விடிவெள்ளி!

தனித்திருக்கும் போதும்
நினைத்திருக்கும் மனம்!

தான்பசித்தே இருந்தாலும்
பிள்ளையை ரசிக்கும் தாய்!

உயிரழிந்தே போனாலும்
வாழ்ந்திருக்கும் தியாகம்!

இலையாய் உதிர்ந்தாலும்
உரமாகும் உயிரினங்கள்!

ஏழையாய்ப் பிறந்தாலும்
ஏற்றமிகு மனம்கொண்டோர்!

காலத்தின் கண்மணிகளிவர்
இவர்வாழ வாழும்வாழ்வே
வையகத்தில் பெருவாழ்வு!

30 comments:

  1. குறிப்பிட்டுள்ள எல்லோருமே பிறர் உயர தாங்கள் தியாகம் செய்பவர்கள்தாமே... அருமையான கருத்தைத் தாங்கிய கவி. நன்று-

    ReplyDelete
    Replies
    1. வசந்தத்தின் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. எப்பொழுதும் போல கலக்கல்.

    ReplyDelete
  3. அருமையான கண்மணிகள்...
    வாழ்த்துக்கள்... நன்றி...(TM 3)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க.

      Delete
  4. அழகான வரிகள்...... சசி.. 100000 லைக்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. அப்பப்பா நன்றி நன்றி.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. Replies
    1. நீண்ட இடைவெளிக்கு பின் தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. தான் அழிந்தாலும் பிறரை வாழவைக்கும் அந்த தாயுள்ளம் இயற்கைக்கும் இருக்கத்தான் செய்கிறது... தியாகம் என்றே தெரியாமல் தன்னுடைய செயலை செய்துகொண்டே இருக்கும் இயற்கையை மிஞ்சும் உள்ளம் மனிதர்களுக்கு வேண்டும். ஏனெனில் இங்குள்ள பாராட்டும் பத்திரங்களும் உதவித்தொகையும் அங்கு கிடையாது... இதற்காக மட்டும் செய்வது தியாகம் அல்ல. தியாகம் எதுவென்று முடிவு செய்து நமது மறைவுக்கு பின் தருவதே இங்குள்ள நம்மவர்களின் நிலையாக இருந்தாலும் அதுவல்ல நமக்கு சிறப்பு... தியாகி என்ற ஒரு வார்த்தையில் உள்ள கௌரவம் ஒன்றையே நமது சந்ததியினருக்கு போதுமான ஒன்றாகும்...

    எது எப்படியோ எல்லோரும் செய்வதில்லையே இந்த தியாகமெனும் அருப்பெருஞ்செயலை.. இருந்து வாழவைக்கும் உள்ளங்களும் உண்டு... தன்னையே இழந்து வாழவைக்கும் உயிர்களும் உண்டு... அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சசி கலா... எத்தனை எத்தனை பிறருக்காக வாழும் உள்ளங்கள்... அத்தனையையுமே நாம் கையெடுத்து வணங்குவோம்.. பாராட்டுக்கள் அழகிய மெ(மே)ன்மையான சிந்தனைக்கு...சசி.

    ReplyDelete
    Replies
    1. அழகான வரிகளால் பதிவை தெளிவுபடுத்தியுள்ளீர்கள் நன்றிங்க.

      Delete
  8. /இலையாய் உதிர்ந்தாலும்
    உரமாகும் உயிரினங்கள்!/
    இந்த வரிகள் கவிக்கு எரு தென்றல்.

    ReplyDelete
  9. கவிதை அருமை சகோ..

    ReplyDelete
  10. ஒவவோரு வரியுமே
    கண்மணிகள் தான் சசிகலா.

    அருமை... அதிலும் முதல்வரி சூப்பர்.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  11. காலத்தின் கண்மணிகளிவர்
    இவர்வாழ வாழும்வாழ்வே
    வையகத்தில் பெருவாழ்வு!//

    ஆழமான சிந்தனை
    அருமையான வரிகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஒவ்வொரு வரிகளிலும் ஒவ்வொரு அற்புதம்.....
    அழகாக இருக்கிறது

    ReplyDelete
  13. அருமையான வரிகளால் தியாகத்தின் சிகரங்களை சிறப்பித்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  14. தமது சுகம் நோக்காது வாழும் கண்மணிகள். அருமையான கவி.

    ReplyDelete
  15. அருமை அருமை // தான்பசித்தே இருந்தாலும்
    பிள்ளையை ரசிக்கும் தாய்! // மிக அருமை

    ReplyDelete
  16. உயிரழிந்தே போனாலும்
    வாழ்ந்திருக்கும் தியாகம்!

    ReplyDelete
  17. தங்கள் தியாகத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்பாத மனங்கள் அவர்கள். தேடிப்பிடித்து கவிதையாக்கிய விதம்கண்டு மகிழ்ச்சி. அழகான மனம் தொடும் வரிகள். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  18. காலத்தின் கண்மணிகளிவர்
    இவர்வாழ வாழும்வாழ்வே
    வையகத்தில் பெருவாழ்வு!//

    தியாகத்தின் கண்மணிகள் வெளியே தெரிவது இல்லை.
    அவர்கள் வேர் போன்றவர்கள். வேர்கள் இலையென்றால் மரம் ஏது!வேரான அவர்கள் இருந்ததால் நாம் வாழ்ந்தோம்.
    கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. கவிதை நல்லாயிருக்கு..

    ReplyDelete
  20. ''...ஏழையாய்ப் பிறந்தாலும்
    ஏற்றமிகு மனம்கொண்டோர்!...''


    இவ்வாறாகப் பல கண்மணிகள்.
    காலத்தின் கண்மணிகள்
    ஞாலத்தின் பெரும் சொத்துகள்!
    நல்வாழ்த்து சசி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  21. காலத்தின் கண்மணிகள் மட்டும் அல்ல, காலத்தின் விண்மீன்களும் கூட...
    அருமை சசி...

    ReplyDelete