Thursday 14 February 2013

கட்டிப்போட்ட பரிசலாக !



கட்டழகி சிட்டழகி
பட்டாம்பூச்சி பேரழகி
மாமனோட மனசுக்குள்ள
தூரல்தூவிப் போவதென்ன!

சின்னத்தாயி செல்லத்தாயி
சேதியென்ன சொல்லுதாயி!
நாவுதிரிச்ச வார்த்தையிலே
நரம்பெல்லாம் நோகுதடி
ஊர்வாய் கட்டிப்போட
கயிறொன்று கொண்டுதாடி!

வாழநார் எடுத்துவந்து
பூதொடுக்க வச்சிருக்கேன்
மாலையாய் கோர்ப்பதற்கு
வானம்விட்டு வாராயோ!

காக்கா கடி கடிப்பதற்கு
மாவுருண்டை கொண்டுவாடி
கூடிவாழும் எறும்புக்கும்
கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!

குற்றுயிர் குலைஉயிரா
நண்டொன்று கண்டேனடி
தன்மகவே அதையுண்ணும்
கொடுமையும் பாத்தேனடி!

காலமது நம்மை விழுங்குமுன்னே
காத்திருக்கேன் வரவையெண்ணி
கட்டிப்போட்ட பரிசலாக .

15 comments:

  1. ethaarththamaaka -
    kiraama kavithai!

    arumai..!

    ReplyDelete
  2. அருமையான சொல்லாடல் சகோதரி. உங்களின் தளத்திற்கு வந்தாலே இந்த கிராமத்து வாசனையை நுகர முடிகிறது

    ReplyDelete
  3. காக்கா கடி கடிப்பதற்கு
    மாவுருண்டை கொண்டுவாடி
    கூடிவாழும் எறும்புக்கும்
    கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!//

    எறும்புக்கும் கொடுத்து மகிழவது அருமை.
    கவிதை அருமையாக இருக்கிறது.
    காலம் போகும் முன் காதல் கை கோர்த்தல் வேண்டும்.
    நல்ல கவிதை.

    ReplyDelete
  4. அருமையான கிராமத்துத் தென்றல் தழுவியது என்னை...

    நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கூடிவாழும் எறும்புக்கும்
    கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள///
    பகிந்துண்டு வாழ்தல் என்பது இதுதானோ? அருமை

    ReplyDelete
  6. அவுத்து விட்டாச் சுத்திச் சுத்திப் போக ஆரம்பித்திவிடுமே!
    நன்று

    ReplyDelete
  7. கிராமத்து மெட்டுக்கு ஏற்ற பாடலாய் வரிகள்

    குற்றுயிர் குலைஉயிரா
    நண்டொன்று கண்டேனடி
    தன்மகவே அதையுண்ணும்
    கொடுமையும் பாத்தேனடி!

    காலமது நம்மை விழுங்குமுன்னே
    காத்திருக்கேன் வரவையெண்ணி



    இது நல்லாருக்கு

    ReplyDelete
  8. கவிதை அருமையாக இருக்கிறது சசிகலா.

    “கட்டிப் போட்ட பரிசல்“ என்ன ஓர் அழகான தலைப்பு.
    வாழ்த்துக்கள்.

    த.ம. 4

    ReplyDelete
  9. அருமையான கவிதை!//காக்கா கடி கடிப்பதற்கு
    மாவுருண்டை கொண்டுவாடி
    கூடிவாழும் எறும்புக்கும்
    கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!// கவர்ந்த வரிகள்! நன்றி!

    ReplyDelete
  10. அருமையான கவிதை.

    படித்ததும் பரிசலில் செல்லும் ஆசை வந்துவிட்டது. ஒருதடவை கொக்கனேகல்லில் போயிருக்கின்றேன்.

    ReplyDelete
  11. காலமது நம்மை விழுங்குமுன்னே
    காத்திருக்கேன் வரவையெண்ணி
    கட்டிப்போட்ட பரிசலாக .தென்றல் வீசுகிறது ..

    ReplyDelete
  12. மழைத் தூரலில் மண்ணின் வாசம் உங்கள் சொல்லாடலில் கிராமிய வாசம், கவிதை அருமை சகோதரியே

    ReplyDelete
  13. ''..காக்கா கடி கடிப்பதற்கு
    மாவுருண்டை கொண்டுவாடி
    கூடிவாழும் எறும்புக்கும்
    கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!..''
    கிராம நினைவு ..ஓடுகிறது....
    இனிய வாழ்த்து.

    சசி ரெம்ப பிசி லேடியோ!...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. மனதில் தோன்றிய மெட்டோடு தாளம் போட்டுப் பாட வைக்கும் வரிகள்.

    ReplyDelete