Sunday 10 February 2013

புரியாத புரிதல் !



உன் மனவானில்
அமாவாசை என்று தெரியாது
வாசலில் தரிசனத்திற்கு
காத்திருக்கும் நிலவு நான்...

நிதர்சனம் உணராமையால்
என்னற்ற நட்சத்திரங்கள்
ஏளனப் பார்வையுடன்.
புழுங்கிக்கொண்டிருக்கிறேன்
உன் விரலிடுக்கில் இருந்து
வெளி வரமுடியாதபடி...

இடிச்சிரிப்பில்
மின்னலாய் உமிழ்ந்து போகிறாய்
என் மீதான வெறுப்பை
எனினும்...
உன்னில் வளர்ந்தும்
தேய்ந்தும் என் நினைவுகள்.

23 comments:

  1. ஒப்பிட்ட விதம் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. வளர்ந்தும் தேய்ந்தும் - ரசனைமிக்க வரிகள் ...

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி சகோ.

      Delete
  3. காதலில் புரியாதபுரிதல் பற்றி கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. Aaha!. good line...உன் மனவானில்
    அமாவாசை என்று தெரியாது..
    Eniya vaalthu...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. பௌர்ணமிக்கும் சோகமுண்டோ
    அம்மாவாசைபோல் அமுகை!
    பாசந்தான் அழிந்திடுமோ பாரில்
    பாடையேறி நாம் போனாலும்!
    உறவுக்கு மரணமுண்டு உணர்வு
    மரித்திடுமோ உணர்வுள்ளவரை!
    உடல் போயினும் நினைவுவேகாது
    அனபு அன்பது அணையாதீபமது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. அப்பாடி ஒருவகையாய் உங்கள் வலைப்பூவைக் கண்டுபிடித்து தென்றலின் சுகம் காண வந்துவிட்டேன்...:)

    அடடா அத்தனை சுகமாக இருக்கிறதே வருடிச்செல்லும் தென்றலாய்ப் பதிவுகள்.
    ஒவ்வொரு வருடலையும் நிதானமாய் அனுபவிக்கவேண்டும். வருவேன் வந்து நுகர்வேன்.

    அமாவசை முடிந்து மெல்லப் பிறை தலைகாட்டும் நேரந்தான் நானும் வந்திருக்கிறேன்...:)

    புரிதல் புரிவதுதான் கடினம்
    புரிந்துவிட்டால் பின்னர் பிரிவேது....
    அருமையான கவி. சிறந்த சிந்தனை. உவமானங்கள் அற்புதம்.
    நல்ல பதிவு + பகிர்வு! மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. உன் மனவானில்
    அமாவாசை என்று தெரியாது
    வாசலில் தரிசனத்திற்கு
    காத்திருக்கும் நிலவு நான்...

    இந்த வரிகள் அருமையா இருக்கு

    ReplyDelete

  10. உன் மனவானில்
    அமாவாசை என்று தெரியாது
    வாசலில் தரிசனத்திற்கு
    காத்திருக்கும் நிலவு நான்...

    ஆஹா... தொடக்கமே அருமை சசிகலா.
    ஆனாலும் இது புரியாத புரிதல் தான்!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //என்னற்ற நட்சத்திரங்கள்// எண்ணற்ற ....?

    உன்னில் வளர்ந்தும்
    தேய்ந்தும் என் நினைவுகள்.

    அருமையான எதார்த்த வரிகள் :)

    ReplyDelete
  12. என்னற்ற சரிதான்... எண்ணம் என்று நினைத்துவிட்டேன்

    ReplyDelete
  13. அருமையான நடையில் அழகு கவிதை.

    ReplyDelete
  14. இயற்கையை இணைத்த இனிய கவிதை

    ReplyDelete
  15. "உன் மனவானில்
    அமாவாசை என்று தெரியாது.." அருமையான கவிதை.

    ReplyDelete