Friday 8 February 2013

அற்பமாய் ஓர்வாழ்வு !


அற்பமாய் ஓர்வாழ்வு அடுப்பிலுரங்கும் பூனையாய்
அத்தனையும் நீர்கோடு நீரெழுதிய கவிதையாய்
அடங்காத தாகங்கள் அழுக்கான மோகங்கள்
அவசரகதி வேடமேந்தி அணியாய் பொய்முகங்கள்!

அச்சத்தில் கொஞ்சம் மிச்சம் அடுத்த தலைமுறைக்காய்
அறிவென்ற அழிவு மாலை கோர்ப்புகளாய் வளமென
அக்கினிப் பிரவேசங்கள் வரவோ துவேஷங்களாய்!
அத்தனையும் கதிகேடு அற்ப வாழ்வின் உடன்பாடு.

அரைநிர்வாணமாய் அலைகின்ற கலாச்சார சீர்கேடு!
அரக்க குணமணிந்தே அகலமதில் நம்வாழ்வோட்டம்
அனாதையாய் வாழுதிங்கே அன்பென்ற பூந்தோட்டம்!
அடிமாடு தேடுகின்ற அவலமாய்த் திரு மணங்கள்.

அடக்கமெனும் பெயர்சூடி அடிமையாய் பெண்ணினங்கள்!
அறமதன் சிரம்தாழின் நாட்டில் அவலங்கள் அரங்கமேறும்
அழகே வாழ்வாயின் வீட்டில் வறுமைதானாய் குடியேறும்!
அடிமையாருமில்லை ஒருவர்கொருவர் அன்புத்துணையே.

அதுமலரும் நாள்வரின் அன்னாள் வாழ்வில் பொன்னாளே!
அறிவில்லா குருவிகூட தனக்கென்றோர் பொற்கூடுகட்ட
அறிவில் சிறந்த மனிதனோ ஆசையினால் தானுயர
அன்பின்றி பண்பின்றி கட்டிவைக்கும் மாளிகைகள்.

அவனுடையதோ எண்ணின் அதுபாழ் மண்டபமாய்!
 அன்பை பண்பை அணிந்து  வளர்த்தல் வேண்டும் 
அழியாவரம் வேறேதுமில்லை கிடைப்பதைப் பகிர்தலும்
அன்றாடம் வாழ்ந்திட உழைத்து கொடுத்து உண்பதுமே.

12 comments:

  1. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதை

    அருமை ! தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அருமை.

    //அகிமதில்//

    ல விட்டுப் போச்சோ?

    ReplyDelete
  3. அனாதையாய் வாழுதிங்கே அன்பென்ற பூந்தோட்டம்!
    அடிமாடு தேடுகின்ற அவலமாய்த் திரு மணங்கள்..

    நிகழ்காலம் கண்ணில் நிழலாடும் வார்த்தைகள் எல்லாமே அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சமூக அவலங்களைக் கண்டு கொதிக்க மட்டுமே முடிகிறது...

    வீரீயக்கவிதை...

    ReplyDelete
  5. அவரவர் உணர வேண்டிய கருத்துக்கள்...

    ReplyDelete
  6. அழகே வாழ்வாயின் வீட்டில் வறுமைதானாய் குடியேறும்!
    அடிமையாருமில்லை ஒருவர்கொருவர் அன்புத்துணையே.
    அருமை இதுதான் வாழ்க்கை தத்துவம்

    ReplyDelete
  7. அடுப்பிலுரங்கும் பூனை – அழகான உவமை. அது அந்த இடத்தையே சொர்க்கமாய் நினைக்கும்.

    ReplyDelete
  8. வயிற்றுக் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்பது பாரதியின் வாக்கு.

    ReplyDelete
  9. அற்புத மோனை அகரத்தை ஆக்கிவைத்து
    நற்கவிதை செய்துவிட்டீர்! நன்று!

    ReplyDelete


  10. அகர வரிசையில் அழகுக் கவிதை!

    ReplyDelete
  11. அன்பை பண்பை அணிந்து வளர்த்தல் வேண்டும்
    அழியாவரம் வேறேதுமில்லை கிடைப்பதைப் பகிர்தலும்
    அன்றாடம் வாழ்ந்திட உழைத்து கொடுத்து உண்பதுமே.//

    அழகாய் கருத்தைச் சொல்லும் கவிதை.
    வாழ்த்துக்கள்.

    உங்கள் கவிதை வெளியீடு காணொளி கண்டேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete