Friday, 15 February 2013

நெருங்கிடாதே தொலைந்திடுவேன் !


இருளடைந்த இதயத்திலும்
நுழையும் காற்றாகிறாய்
தீப்பொறி பார்வையால்
தேகத்தை எரிக்கிறாய்
நீ என்ன செய்தாலும்
ரசிப்பதைத் தவிர
வேறெதும் செய்ய
முடிவதில்லை.



தினம் தினம்
பார்வையால் மெல்ல
தின்றவனே...
இதயத்தை ஏன் எரித்தாய்
ஆனாலும்
இனிக்கவே செய்கிறது
உன் நினைவு .


துரத்தும் பார்வையே போதும்
நெருங்கி விடாதே..
தொலைந்து விடுவேன் உன்னில்.


சுமையென ஏதுமில்லை
சுகமாக உன் நினைவிருக்கும் வரை...







13 comments:

  1. சுவைபட அழகிய காதல் பேசும் வரிகள்...

    அழகு

    ReplyDelete
  2. நல்ல கற்பனை காதல் மொழிகள்.ஆனாலும் பயமாய் இருக்கிறது

    ReplyDelete
  3. காதலர் தினம் அன்று வரவேண்டிய பதிவு. களை கட்டிய காதல் வரிகள்

    ReplyDelete
  4. மென்மையான உணர்வுள்ள கவிதை!

    ReplyDelete
  5. அனைத்திலும் மூன்றாவது கவிதை இன்னும் நல்லாருக்கு

    ReplyDelete
  6. அழகிய அருமையான மெல்லிய உணர்வாய்... அசத்தல் வரிகள்.
    பாரட்டுக்கள்!

    ReplyDelete
  7. அழகிய காதல் வரிகள்! படங்களும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. சுமையென ஏதுமில்லை
    சுகமாக உன் நினைவிருக்கும் வரை...//
    நினைவே சுகம் தான் .
    அழகான அருமையான காதல் கவிதை.

    ReplyDelete
  9. நினைவுகளே ஒரு சுகமான சுமைதானே!

    ReplyDelete
  10. காதலின் ஆழத்தை உணர்த்தும் அருமையான கவிதை வரிகள்..2 ஆவது கவிதையும் கடைசி கவிதையும் மிக மிக அருமை..

    ReplyDelete
  11. நீ என்ன செய்தாலும்
    ரசிப்பதைத் தவிர
    வேறெதும் செய்ய
    முடிவதில்லை.

    ReplyDelete
  12. கவிதை அழகாய் இருக்கிறது தோழி ..

    ReplyDelete