Thursday, 28 February 2013

அன்றும்...இன்றும் !


அன்பாய் தலைகோதி
ஆசையாய் வருடிவிட்டு
தாய் தந்தை உறவின் நடுவே
சேயதனை உணர்த்தும் விதமாக
கூந்தலை மூன்றாய் பிரித்து....
பின்னிப் பிணைத்து ...அம்மா
ஜடை போட்ட விதமெங்கே ?

இன்று

உதறிப் போகும் உறவுகளை
அள்ளி  முடியாக் கூந்தலும்
குறிப்பாய்  உணர்த்திப் போகுதோ ....?

33 comments:

 1. அன்று/இன்று நல்லதொரு ஒப்பிட்டல்

  அருமை !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 2. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 3. ஜடையா...? அப்படி என்றால்...?

  இப்படி தண்ணீர் எடுத்துட்டு போய் தான் குளிக்கவே வேண்டும்... (சில இடங்களில் உண்மை நிலைமை...)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 4. இதுதான் இன்றைய நாகரீகமாம் :) உறவுகளும் நீங்கள் சொல்வது போன்று இப்படித்தான் எங்குமே உள்ளது தோழி !

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. அருமை.... இன்றைய நவ நாகரீக நங்கையரின் நிலை இதுதான்.....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 6. ஜடைக்கு நிஜமாவே நல்ல விளக்கம் சொல்லியிருக்கிங்க. பின்னிட்டிங்க போங்க. நிறைய ஸ்கூல்ல இரட்டை சடை பின்னல், மடித்து கட்டுவதுதான் கட்டாயமாக இருக்கிறது. என் மகளுக்கு காலையில் அதற்கே கொஞ்ச நேரம் வேஸ்ட்டாகிவிடுகிறது.. அப்புறம் அரை குறையா சாப்பிடறதுக்குள்ளே ஸ்கூல் வாகனம் வந்துவிடும்.. ரெடியா வச்சிருக்கிற பாலை கூட குடிக்க முடியாம குழந்தைங்க ஓடறப்ப.. எதுக்குத்தான் இந்த பின்னல் சட்டம் எல்லாமோ..? பெண்கள் பாதி நேரம் தலை வாரிக்கொள்ளவே நேரம் போயிடுது என்று முணுமுணுப்பேன். இந்த அவசர யுகத்தில் மாற்றங்கள் சகஜம்தான்.

  ஆனால்.. இக்கால கட்டத்தை கவிதையில் அழகாய் சொல்லிவிட்டீர்கள்..! பாராட்டுக்கள் தோழி..!

  ReplyDelete
  Replies
  1. இரட்டை சடை பின்னல் அந்த பள்ளி பருவ காலம் மட்டும் தாங்க பார்க்க முடியுது என்ன ஒரு அழகு தெரியுமா ? அந்த நேரத்திலாவது பிள்ளைகள் நம்ம அருகாமையில் இருக்கட்டுமே ..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
  2. ஆண்கள் முகச்சவரம் செய்ய வேண்டியிருப்பதை எண்ணி அவ்வாறு புலம்பியதுண்டு :-) எனினும் உஷா அன்பரசு கருத்தில் யதார்த்தம் இருக்கிறது.  சிந்திக்க வைக்கிறது.
   குறைந்த அளவு முடி இருந்தாலும் எதுவும்  குறைந்து விடாது.  பெண்களுக்கு நீண்ட கூந்தல்.வேண்டும் என்பது சமூக எதிர்பார்ப்பு தானோ?

   Delete
 7. புதிய பார்வை. நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 8. இப்பலாம் இதுதாங்க ஸ்டைல், இருங்க இருங்க உங்களுக்கு எதிராக இளைஞர்களை கோசம் போடவைக்கிறேன். :-)))))))

  அந்தகால ஜடையழகும், இந்தகால லூஸ்ஹேர் அழகும் இரண்டுமே இரண்டுவிதமான ரசிக்கவைக்கும் அழகுங்க....அதுபோல் உங்களுடைய பதிவும்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஏன் இப்படி...
   தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 9. உதறிப் போகும் உறவுகளை
  அள்ளி முடியாக் கூந்தலும்
  குறிப்பாய் உணர்த்திப்

  இன்றைய சமூக நிலையை குறிப்பாய் உணர்த்தி பின்னிய வரிகள் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 10. இன்றைய சமூக நிலையை குறிப்பாய் உணர்த்தி பின்னிய வரிகள் ரசித்தேன்

  ReplyDelete
 11. கவிதை நன்றாக இருக்கின்றது.

  காலத்தின் மாற்றங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க இன்னும் என்னென்ன மாறுமோ ?

   Delete
 12. சசிகலா நீங்கள் சொல்லிய விதம் அருமை.

  உதறிப் போகும் உறவுகளை
  அள்ளி முடியாக் கூந்தலும்
  குறிப்பாய் உணர்த்திப் போகுதோ ....?

  அந்தச் சற்றுநேர அம்மாவின் அருகாமை...
  உண்மையில் திருமணம் ஆவதற்கு முன்புவரையில்
  எனக்கு அம்மா தான் சடைபோட்டு விடுவார்கள்.
  (நீண்ட கூந்தல்) மாமி வீட்டில் இருந்த கொஞ்ச
  நாட்களிலும் மாமி, நாத்தனார்... என்று
  உறவினர்கள் பின்னிவிட்டார்கள்.
  ஆனால் இங்கே தனிமையில் வந்ததும்...
  தலைவர முடியாமையாலேயே பாதியை
  வெட்டிவிட்டேன்.
  நீங்கள் சொன்ன உவமை ஆழ்ந்து நோக்கினால் அருமை சசிகலா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அய்யோ வெட்டி விட்டீரா ? நாங்க எல்லாம் வளரவில்லையே என்று வருத்தப்படுகிறோம்.

   Delete
 13. தலைவிரி கோலமாய் செல்வது தானே இப்போது பேசனாகிப் போய்விட்டது...
  :-)

  ReplyDelete
 14. படங்களும் கட்டுரையும் மிகவும் ரம்யம்.

  // கட்டோடு குழல் ஆட ஆட
  கண்ணென்ற மீன் ஆட ஆட
  கொத்தோடு நகை ஆட ஆட
  கொண்டாடும் மயிலே நீ ஆடு //

  என்ற பெரிய இடத்துப் பெண் பாடல் வரிகள் ஞாபகம் வந்தன.

  ReplyDelete
 15. நச் என்று தலைவிரி கோலத்தை அருமையாக கவிதை யாத்தவிதம் அருமை!

  ReplyDelete
 16. ஓஹோ..இதுல இப்படி ஒரு விசயமிருக்கா...நல்லா ஒப்பிட்டு இருக்கிங்க...

  ReplyDelete
 17. வணக்கம் தங்கை சசி...

  வாரிவிடும் உறவுகள்..(தலை முடியை)
  வாரிவிடும் உறவுகள் (கால்களை)

  நடந்த ...நடக்கின்ற...நடக்கும்... நிகழ்வுகளை
  அன்று இன்று என பாகுபடுத்தி கூறியமை அழகு...

  ReplyDelete
 18. கூந்தலை மூன்றாய் பிரித்து....
  பின்னிப் பிணைத்து ...அம்மா
  ஜடை போட்ட விதத்தை அருமையாய்
  உறவுகளுடன் பின்னிப்பிணைந்து கவிதையாய்
  காட்டிய பின்னலுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 19. // கட்டோடு குழல் ஆட ஆட
  கண்ணென்ற மீன் ஆட ஆட
  கொத்தோடு நகை ஆட ஆட
  கொண்டாடும் மயிலே நீ ஆடு //

  என்ற பெரிய இடத்துப் பெண் பாடல் வரிகள் ஞாபகம் வந்தன.

  ReplyDelete
 20. உதறிப் போகும் உறவுகளை
  அள்ளி முடியாக் கூந்தலும்
  குறிப்பாய் உணர்த்திப் போகுதோ ....?
  உண்மைதான்! கருத்துள்ள கவிதை! நன்றி!

  ReplyDelete