Tuesday 19 February 2013

எமனை அழைக்கும் மானுட வர்க்கம் !




-- இதம் தரும் காற்றை
கட்டிட இடிபாடுகளுக்குள்
தொலைத்து விட்டு...

கடல் அலை தேடி 
ஓடும் காலமிது.

புழுதி பறக்கும் சாலையில்
உயிர் பிழைக்க
புகலிடம் தேடும் 
இயற்கை காற்றும்...

வாகன புகையில்
சிக்கிச் சிதைந்து
சின்னா பின்னப் பட்டும்
தன் பணியை செய்யும்
பிரான வாய்வாக.

வாசலில் வந்து நிற்கும்
காற்றை தாளிட்டு மூடி
வஞ்சகரை விரட்டுவது போல்
ஜன்னலுக்கும் திரைச் சீலையிட்டு
காற்றை விரட்டி..
ஏசி அறைக்குள்
எமனை அழைக்கும்
மானுட வர்க்கம்.

18 comments:

  1. வாசலில் வந்து நிற்கும்
    காற்றை தாளிட்டு மூடி
    வஞ்சகரை விறட்டுவது போல்
    ஜன்னலுக்கும் திரைச் சீலையிட்டு
    காற்றை விரட்டி..
    ஏசி அறைக்குள்
    எமனை அழைக்கும்
    மானுட வர்க்கம்.//

    அருமையாக சொன்னீர்கள்.
    கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதைதான்.
    தெரிந்தே மாட்டிக் கொண்டு விழிக்கிறோம்.

    ReplyDelete
  2. இயற்கையை நேசிக்க மறுக்கிறார்கள்.. விளக்கை கையில் வைத்து கொண்டு குழியில் விழுந்த கதைதான்..

    ReplyDelete
  3. கவிதை நன்று. எழுத்துப் பிழைகள் மட்டும் உறுத்துகின்றன

    //வாகன் புகையில் //

    //பிராண வாய்வாக//

    ReplyDelete
  4. ஏசி அறைக்குள்
    எமனை அழைக்கும்
    மானுட வர்க்கம்.

    இயற்கையை தொலைத்து
    செயற்கையில் அல்லலுறும் மனிதவர்க்கம் ..

    ReplyDelete
  5. வேறு வழியிலை - போக வேண்டியது தான் மேலே...

    வாகன் - வாகன
    சிரைந்து - சிதைந்து
    விறட்டுவது - விரட்டுவது

    ReplyDelete
  6. .. ஏசி அறைக்குள்
    எமனை அழைக்கும்
    மானுட வர்க்கம். ...

    உண்மைங்க...

    ReplyDelete
  7. உண்மையை உணர்த்தும் வரிகள்! சிறப்பான கவிதை!

    ReplyDelete
  8. நல்லதொரு விழிப்புணர்வு கவிதை !

    பசுமையை நேசிப்போம் - காப்போம்

    ReplyDelete
  9. எமனை அழைக்கும் மானுட வர்க்கம்.

    நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல கவிதையை படித்த திருப்தி என்னுள் தோன்றுகிறது. உங்களது கற்பனைக்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
  10. // வாசலில் வந்து நிற்கும்
    காற்றை தாளிட்டு மூடி
    வஞ்சகரை விறட்டுவது போல்
    ஜன்னலுக்கும் திரைச் சீலையிட்டு
    காற்றை விரட்டி..
    ஏசி அறைக்குள்
    எமனை அழைக்கும்
    மானுட வர்க்கம்.//

    சரியாகச் சொன்னீர்கள் - பாதி வீடுகளில் வாயில் கதவையோ, சன்னலையோ திறக்கும் பழக்கமே இல்லை இப்போது!

    ReplyDelete
  11. மக்கள் தொகை பெருக்கம்,அதன் பயானக நகர்களின் விரிவாக்கம், நவீனவசதிப் பெருக்கம் எனவே நீங்கல் குறிப்பிடும் விளைவுகள் தவிர்க்க முடியாதவை சகோ!
    நன்று

    ReplyDelete
  12. தென்றலே வீடு
    தேடி வந்தாலும்
    வழிமறைக்கும் வாசம்!....

    ஆனால்
    தென்றல் வந்தால் பராவாயில்லை.
    திருடன் வந்துவிடுகிறானே...!
    என்ன செய்வதாம்...?

    கவிதை அருமை சசிகலா.
    வாழ்த்துக்கள். 7

    ReplyDelete
  13. ஜன்னலுக்கும் திரைச் சீலையிட்டு

    காற்றை விரட்டி..

    ஏசி அறைக்குள்

    எமனை அழைக்கும்

    மானுட வர்க்கம்.- சரியாக சொல்லப்பட்டுள்ளது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  15. தலைப்பு போலவே கவிதையும் அதிரடி.

    ReplyDelete
  16. ஏசி அறைக்குள்
    எமனை அழைக்கும்
    மானுட வர்க்கம்.

    அருமையான கருத்து! உண்மையான கருத்து!

    ReplyDelete
  17. யதார்த்தம் இங்கு கவிதையாக விரிந்துள்ளது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. ஏ,சி அறைகளில் இருக்கிற செயற்கைக் குளுமை மனிதனை மனிதனை மந்தப்படுத்திவிடுகிறதுதான்,.காற்றை எண்ணி ஒரு கவிதை வந்த யதார்த க்கவிதை/வாழ்த்துக்கள் மேடம்/

    ReplyDelete