Thursday 7 February 2013

சத்தமில்லாது விழுங்கிவிடு !



மண் உழுத விவசாயி
மண்ணாய் போகும் நிலை வாழின்
இந்த இரவு விடியாது போகட்டும்.

கருவறை ஆய்ந்து பார்த்து
பெண்ணை கல்லறைக்கு
அனுப்பும் பெண் கொடுமை
தொடரின்...
இந்த இரவு விடியாது போகட்டும்.

மதம் என்னும் பித்து
மனிதனை பிடித்து
மதவெறி தொடருமெனில்
இந்த இரவு விடியாது போகட்டும்.

எவரிலும் எங்கும்
 சுயநலமே வாழ்ந்திருக்க
அன்பெனும் வார்த்தையே
மனதில் இல்லாமல் போகுமெனில்
இந்த இரவு விடியாது போகட்டும்.

பச்சிளம் குழந்தைகளின்
பாலியல் கொடுமைகள்
பலாத்காரமாய் தொடருமெனில்
இந்த இரவு விடியாது போகட்டும்.

மெத்த படித்து விட்டு
மேல் நாட்டு மோகம் கொண்டு
தாய் நாட்டை மறப்பவர்
நிலை தொடருமெனின்
இந்த இரவு விடியாது போகட்டும்.

பெற்றவரை தவிக்க விட்டு
தரணியில் ஒழுக்கம் குறையுமெனில்
இந்த இரவு விடியாது போகட்டும்.

விடியாத இரவுக்கு ஏன்
சந்திர சூரியன்...

சூரியனே சுட்டெரிக்கும்
பார்வையால் தீமைகளை
அழித்து நன்மை புரிவாயோ ?
இல்லாது போயின்..
ஏ.. சந்திரனே
சத்தமில்லாது விழுங்கிவிடு
உலக உருண்டையை...

14 comments:

  1. மனதில் ஏற்பட்ட வலியின் காரணமாய் கவிதை மூலம் சாபம் இட்டிருக்கிறீர்கள். நல்லவை நடக்கட்டும் அல்லவை அகலட்டும். அதனால் உங்கள் சாபத்திற்கு வேலை இல்லாமல் போகட்டும்.

    ReplyDelete
  2. நாட்டின் வளர்ச்சி விவசாயின் உழைப்பில்

    கவிதை அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. எல்லாமே தொடர்கிறது... அதனால் சீக்கிரம் உலகம் அழியட்டும்...

    ReplyDelete

  4. சூரியனே சுட்டெரிக்கும்
    பார்வையால் தீமைகளை
    அழித்து நன்மை புரிவாயோ ?

    நன்மை நடக்க வேண்டும் எல்லோரது ஆசையும் அது தான்

    விடியாத இரவுக்கு ஏன்
    சந்திர சூரியன்...

    ரசித்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆம் விழுங்கி விடத் தான் வேண்டும்.
    நன்று !

    ReplyDelete
  6. அன்பெனும் வார்த்தையே
    மனதில் இல்லாமல் போகுமெனில்
    இந்த இரவு விடியாது போகட்டும்.

    அல்லவை தேயட்டும் ..
    நல்லவை வளரட்டும் ...

    ReplyDelete
  7. மலைப்பாம்பின் இரைவிழுங்கலாய்
    தமிழதை உணவாய் உண்ணுமுன்
    கவிதையாய் எங்களுக்குப் பகிர்ந்ததை
    மண்புழுவாய் நாங்கள் உண்டோம்...
    மண்ணும் மணமும் இனிக்கிறதெமக்கு
    உண்கதை போதுமாயினி கனவோடு
    உறங்க நாங்கள் செல்லலாமா-நன்றி!

    ReplyDelete
  8. அருமையான கவிதை

    ReplyDelete
  9. ’இரவு விடியாமலே போய்விட்டால், தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை அதிகரித்து விடுவார்கள் சகோதரி! நல்ல பகலாக விடியட்டும் என்றும் ஆசைப்படுவோமாக! :-)
    அறச்சீற்றம் நன்று!

    ReplyDelete
  10. விடியாத இரவுமில்லை, மாறாத பொழுதுமில்லை...

    அருமையான வரிகள் தோழி

    ReplyDelete
  11. //பெற்றவரை தவிக்க விட்டு//

    இது வருங்காலங்களில் அதிகமாகும் என்பதுதான் வேதனை!

    ReplyDelete
  12. எதுவும் ஒருநாள் மாறும். அதற்காகக் காத்திருப்போம். சீற்றம் கொண்ட கவிதையும் மனதைத் தொடுகிறது. அருமை தென்றல்!

    ReplyDelete
  13. நல்லவை குறைந்து அல்லவை பெறுகும் போது ஏற்படும் கோபம் கவிதை வடிவில் வந்து இருக்கிரது.

    நல்லவை அதிகமாகி, அல்லவை அழிய இறைவன் அருளபுரிவான்.நாளைய பொழுது நல்லதாக விடிய தினம் இறைவனை வணங்குவோம்.

    ReplyDelete