Monday 4 February 2013

என்ன காதலோ ?



உள்ளுர ஏதோ ஒரு உணர்வு
நீ வந்திருப்பதை உணர்த்தினாலும்
எதிரில் வந்து நிற்க நாணி
கதவிடுக்கில் கர்ணமடித்துக்கொண்டிருக்கும் காதல்.

கை விரல் மெதுவாக
கதவை துணைக்கழைத்து
கால்கள் ஆற்றுப்படுகையை
தொடுவதைப்போல் அசைய...

இடையோ மெல்ல மெல்ல
இருப்பதை மறந்து...
எங்கோ
இடுக்குகளில் சிக்கிக்கொண்ட
நடையை நீண்ட ஒப்பனைகளின்
சிரமத்திற்கு நடுவே...
கொலுசொலி கேட்காமலும்
கொஞ்சலும் கெஞ்சலுமாக..
உனை நெருங்க....

ச்சீ...கனவில் கூட 
உன்னருகே வர இத்தனை 
அவஸ்தையை அனுபவிக்க வேண்டி இருக்கிறதே

என்ன காதலோ ?

15 comments:

  1. அதானே....., என்ன காதலோ

    ReplyDelete
  2. அன்பின் வெளிப்பாடு காதல்...

    அன்பை அனைவரிடத்திலும் செலுத்துவோம்.

    ReplyDelete
  3. amma-ella...enna kathalo

    நான்வேறு நீவேறில்லை ஆனாலும்
    நானிங்கும் நீயங்கும் நினைவேந்தி!
    நிம்மதியது குடைசாய்ந்து போனாலும்
    நிழலாய் கனவுகளும் கண்ணீர் உறவும்!
    கலைந்தோடும் வாழ்வில் நாமெங்கோ
    பறந்தோடும் எண்ணக் கைதிகளாய்!
    வாழ்வு விடை கேட்குமுன் நீவாராயோ
    வானவில் வண்ணமாயெனைச் சேராயோ!
    enna kathlo......

    ReplyDelete
  4. காதல்..காதல்..

    ReplyDelete
  5. இனிமையான அவஸ்தைதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இனிய காதல் கவிதை மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி !...

    ReplyDelete
  7. அருமையான காதல் அவஸ்தை !

    ReplyDelete
  8. காதல். இனிதான அவஸ்தை....

    ReplyDelete
  9. காதலின் உச்சம்!

    ReplyDelete
  10. அட! கவிதை கவிதை சூப்பர்

    ReplyDelete
  11. தென்றலே தீண்டினாலும் அவஸ்தை ...!

    ReplyDelete
  12. இனிய அவஸ்தைகளை தன்னகத்தே கொண்டதே காதல்

    கவிதையின் வரிகள் நல்லாருக்கு

    ReplyDelete
  13. இரசித்தேன்!நன்றி!

    ReplyDelete