Saturday 2 March 2013

விளைச்சல் யாவும் பதராக !

பொன்னிற பூமியாய்க் காலை
மஞ்சளாடையணிந்து சோலை
சென்னிற மேனியோடு வானம்
பனித்துளி தாங்கி புல்வெளி.

மேகவெண்மேனியுள் மலை
காலைக் கதிரவன் பாட்டு
கொஞ்சும் கிளியின் ராகம்
பச்சைப் பரப்பாய் வயல்கள்.

பட்டுடுத்தியே சிட்டாய்சிட்டு
பஞ்சமெங்கே காணோம்
இயற்கையிலில்லைத் தவறு!

அழகழகாய்த் தோரணம்
அன்னத்தின் நீச்சல் சீதனம்
கள்ளமில்லாப் பார்வைகள்
கபடுகளறியா உறவுகள்!

அறிவு வளர்தோம் எதற்காக?
ஆஸ்தி தேடினோம் நமக்காக!
விதைகளில் கலந்த தீமையாலே
விளைச்சல் யாவும் பதராக!

பகிர்வும் நமக்குத் தூரமாய்
பண்பு மனதில் பாரமாய்!
தொலைத்து தொலைந்தோம்
தொலைந்து அழுகிறோம்!

எதற்காக இந்த ஓட்டங்கள்
யாருக்காயிந்த தேட்டங்கள்!
மண்ணுக்குரிமை எல்லாமும்
பெண் ஆண் பேதங்களில்லை
வந்தோம் ஆடையணியாமல்
போவோம் அதை இங்கெறிந்தே!

12 comments:

  1. எல்லாமும் கலப்படம் ஆனால் என்செய்வது...? (மனம் உட்பட)

    /// தொலைத்து தொலைந்தோம்...
    தொலைந்து அழுகிறோம்...! ///

    ReplyDelete
  2. ஹா.. ஹா... ஹா...

    கடைசி வரிகள் சூப்பர் சசிகலா.

    ReplyDelete
  3. " மண்ணுக்குரிமை எல்லாமும் "/.....

    அற்புத வரி.

    ReplyDelete
  4. சிந்திக்க தூண்டிய கவிதை

    "அறிவு வளர்தோம் எதற்காக?
    ஆஸ்தி தேடினோம் நமக்காக!
    விதைகளில் கலந்த தீமையாலே
    விளைச்சல் யாவும் பதராக!"

    ReplyDelete
  5. இனிய வணக்கம் தங்கை சசி.
    நலமா??


    கீதையின் சாரம் தெரிகிறது கவிதையில்...
    நமக்கான தேடல்களும்
    அதற்கான ஓட்டங்களும்
    ஏதோ ஒரு பயனை முன்வைத்தே இருக்கட்டும்...
    நாளைய நாளை வெற்றிகொள்ள முயலாது...
    நிகழ் காலத்தை வாழ்ந்து
    எதிர்காலத்தில் நிகழில் முகம் புதைத்து
    ஏற்றமுள்ள வாழ்வினை வாழ்ந்திட விழைவோம் ....

    ReplyDelete

  6. வணக்கம்

    விளைச்சல் யாவும் எனும்தலைப்பில்
    விரித்த கவிதை சுவைத்திட்டேன்!
    இளைத்தல் இன்றி வலைப்பதிவை
    வழங்கும் ஆற்றல் உயருகவே!
    உளைச்சல் போக்கி உயா்வழியை
    ஊட்டும் ஆக்கம் தொடருகவே!
    சுளைச்சொல் ஏந்தித் தமிழ்த்தென்றல்
    சுழலும் புவியைத் தழுவுகவே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்ஃ கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  7. எதற்காக இந்த ஓட்டங்கள்
    யாருக்காயிந்த தேட்டங்கள்!//
    நல்ல கேள்வி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இயற்கையிலில்லைத் தவறு!//
    உண்மையான வரிகள்.

    அறிவு வளர்தோம் எதற்காக?
    ஆஸ்தி தேடினோம் நமக்காக!
    விதைகளில் கலந்த தீமையாலே
    விளைச்சல் யாவும் பதராக!//
    உண்மையான வரிகள்.
    அதிக விளைச்சலுக்கு என்று வீரிய விதைகளை கண்டுபிடித்து விளைச்சலை நாசம் செய்தது உண்மை .

    கவிதை அருமை.

    ReplyDelete
  9. தொலைத்து தொலைந்தோம்
    தொலைந்து அழுகிறோம்!

    விளைச்சல் யாவும் பதராக!
    வினைகள் யாவும் துயரமாக.....

    ReplyDelete
  10. மேகவெண்மேனியுள் மலை

    வந்தோம் ஆடையணியாமல்
    போவோம் அதை இங்கெறிந்தே!

    படிக்க மிக இனிமையாகவும் அதே நேரத்தில் அருமையான பொருள் சொல்லும் கவிதை .மிக இனிமையான வாய் நோகாத சொற்கள்

    ReplyDelete
  11. இந்த கவிதையின் முத்தாய்ப்பான வரிகள்:

    // பெண் ஆண் பேதங்களில்லை
    வந்தோம் ஆடையணியாமல்
    போவோம் அதை இங்கெறிந்தே! //

    ReplyDelete