Monday 20 August 2012

ஐடியா மாமி !


அலமு :  சசி .....சசி

சசி :  வாங்க மாமி என்ன காலையிலேயே .

அலமு : எல்லாம் உன்னால வந்ததுமா. நீ தான சொன்ன புத்தக வெளியீட்டு விழா இருக்குனு.  உனக்கே தெரியும் நான் எங்க வெளிய போனாலும் புதுசா ஒரு புடவை எடுத்துடுவேன்னு .

சசி : அதனால என்ன எடுத்துட்டிங்களா?

அலமு : அத ஏன்டி மா கேட்குற... காலைல மாமாவுக்கு சட்டை அயன் பண்ணிட்டு இருந்தேன்டிமா.  அந்த நேரம் பார்த்து தெருவுல மாச மாசம் தவண முறையில புடவை குடுப்பானே அவன் போய்ட்டு இருந்தான்.  நான் ஏங்க புடவை ....ஏங்க புடவைனு கூப்பிட்டேன்.  பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்த உங்க மாமா என்னடி ஆச்சினு அப்படியே ஓடி வர. தெருவுள போனவனும் அப்படியே நிக்க ஒரே கூத்தா போச்சுடிமா. அதனால இன்னக்கு லீவ போடு நாம திநகர் போய்ட்டு வந்துடலாம் சரியா.

சசி : ஹா  ஹா  சரிங்க மாமி.

38 comments:

  1. அட... ராஜி எழுதற மாதிரி உரையாடல்லயும் புகுந்து விளையாடறீங்களே தென்றல். படங்கள் மனசைப் பறிச்சிடுச்சு.

    ReplyDelete
    Replies
    1. கவிதையா இருக்கே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்னு நினைத்தேன் தங்களை அட போட வைத்ததில் மகிழ்ச்சி நன்றிங்க.

      Delete
  2. ஓஹோ...கத அப்படி போகுதா...அலமுக்கு மட்டும்தானா புடவை....
    புத்தக வெளியீட்டிற்கு வருபவரே புதுப்புடவை என்றால் விழாவின் நாயகி எப்படி வருவாங்கன்னு பாத்துக்கவேண்டியதுதான்... அதை தான் இங்கு சொல்லாம சொல்லி இருக்காங்க சசி.... பாப்போம்...நேருல வருவாங்கத்தானே அந்த அலமு... பாராட்டுக்கள் அழகிய உரை ஆடல்...ஆடை அலங்காரம்..காரமில்லா புகைப்படம்... விளம்பரமில்லாமல் விளம்பரத்தை போட்டு அசத்திவிட்டீர்கள் சசி கலா..... உங்களின் யுத்தியை வெகுவாக பாராட்டுகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நாயகி எல்லாம் இல்லங்க மிகச்சாதரணமானவள் தான் சசி.

      Delete
  3. ஹா ஹா ஹா கவிதையிலிருந்து நகைச்சுவைக்கு மாறியாச்சா.. பேஷ் பேஷ் ரொம்ப நன்ன இருக்கு TM 4

    ReplyDelete
    Replies
    1. தங்களை சிரிக்க வைத்ததில் சந்தோஷம்.

      Delete
  4. உரையாடல் பாணியில் அசத்தல் பதிவு எழுத இன்னொரு ஆள் இருக்கு போல ராஜி அக்காவிற்கு பிறகு! (TM 5)

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நேற்று ராஜியிடம் பேசியதன் விளைவே .

      Delete
  5. கவிதை,நகைச்சுவை ரெண்டுமே அழகா எழுதுறீங்க சசி.. கலர் கலரா புடவை அணிவகுப்பு ஒவ்வொன்னும் வாங்க ஆசையை தூண்டுதே... சூப்பர்..!

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ எனக்கும் ஒரு புடவை வாங்கனும்னு ஆசையா தான் இருக்கு.

      Delete
  6. good photoes..sasi...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. அக்கா கலக்கல் டிசைன் .. எல்லாத்துலையும் ஒன்னு பார்சல்

    ReplyDelete
    Replies
    1. ஆமா பா இங்க ஒரு புடவைக்கே இந்த கதி.

      Delete
  8. அடடே..அடுத்த அடியா..வையுங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பெண் பதிவர்களுக்கு ஏதோ என்னால முடிந்தது.

      Delete
  9. அசத்தல் படங்கள் போங்க...

    சகோதரி ராஜியிடம் பேசியதற்கே, இப்படி ஒரு நல்ல போட்டியா ?

    நன்றி சகோ... (TM 8)

    ReplyDelete
    Replies
    1. போட்டி இல்லங்க இந்த பதிவு மூலமா நாங்க பேசிக்கிறோம்.

      Delete
  10. சின்ன குட்டி தேவதைகளை குட்டி புடவைகளில்
    பார்க்க கொள்ளை அழகு போங்க.
    இதில இரண்டவது நீங்க தேத்திட மாட்டீங்க ?
    ஜமாயாங்க..... .



    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ ஒரு முயற்சி தான்.

      Delete
  11. Replies
    1. நண்பர் ரைட்டுனு சொல்லியாச்சி.

      Delete
  12. வித்தியாசமானமுயற்சி! சிறப்பு! அருமையாக இருந்தது!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete

  13. படங்கள் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அக்கா உங்க பதிவு மாறுபட்டதா இருக்கு மாமி போல அந்த வாண்டு எவ்வளவு அழக புடவை உடுத்த்யுண்டு இருக்கா அவளுக்கு திருஷ்டி பட்டுட போவுது நன்னா சுத்தி போடுங்கோ .. சரி சரி சிறப்ப எழுதி இருக்கேள் பதிவர் சந்திப்புல நன்னா அசத்துங்கோ வாழ்த்துகள் ....

      Delete
    2. புலவர் சா இராமாநுசம்
      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  14. மாலதி

    சகோ அந்த குழந்தை யாருனே தெரியளம்மா.

    ReplyDelete
  15. யதார்த்தமா இருக்கு, தொடர்ந்து எழுத முயற்சி செய்யலாமே..!!

    ReplyDelete
  16. புடவைகளும் அழகு,உங்கள் பதிவு போல்!

    ReplyDelete
  17. குட்டி குட்டி தேவதைகள்.. அழகோ அழகு..

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. குட்டித் தேவதைகள் புடவைகளில்
    கொள்ளை அழகு.
    உரையாடலும் வெகு சுவாரஸ்யம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. குட்டித் தேவதைகளின் அணிவகுப்பு கலக்கல்.

    ReplyDelete
  21. சசிகலா... நீங்கள் தி நகர் போய் வந்ததும்
    என்ன புடவை வாங்கியிருந்தாலும்
    அதையும் ஒரு பதிவா போட்டுவிடுங்கள்...

    இல்லையென்றால் நம் வலைப்பதிவு
    பெண்களுக்கெல்லாம் அதை நினைத்தே
    தலைவெடித்துவிடும்...
    ஓ.கே வா...?

    ReplyDelete
  22. ரங்கநாதன் தெரு ஜவுளிகடைகள்அறிவிப்பு : தென்றல் சசிகலா அவர்களின் நூல் வெளியீட்டு விழா நடப்பதால் அனைத்து புடவைகளும் விற்றுத் தீர்ந்த்விட்டன.
    26 ந் தேதிக்குப் பிறகு வரவும்

    ReplyDelete