Monday 18 June 2012

சில்லறைச் சிணுங்கல்!



சில்லறைச்சிணுங்கலில்
எல்லாம் உன் சிரிப்பொலியே
கேட்கிறது .....

உன் சுவாசக்
காற்றடிக்கும் திசை
நோக்கி என் மனச்சிறகும்
பறக்கிறதே..

வீதி கூட்டும் புயல்
எனையும் அள்ளியெடுத்து
உன் மடிதனில் சேர்த்ததுவே ..

துரும்பென எண்ணி
நீயும் உதறி எறிந்து
சென்றாயோ ?

30 comments:

  1. சில்லறைச் சிணுங்கலில் சிரிப்பொலி! பறக்கும் மனச் சிறகு! -பிரமாதமான சொல்லாடல். உங்கள் கவிதையை ரசிக்கையில் என் மனதும் பறந்தது தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அழகிய பின்னூட்டமே ரசிக்க வைக்கிறது . நன்றி வசந்தமே .

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

      Delete
  3. ஆனால் கடைசி வரி கவலையா போச்சுங்களே சசி.

    ReplyDelete
    Replies
    1. காதலுக்கே உரியது கவலையும் . என்ன செய்வது சகோ .

      Delete
  4. சிணுங்கல் அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

      Delete
  5. நல்லா சினுங்கியிருக்கிறீங்க.....அருமை..:)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

      Delete
  6. அருமையாக அழகான வரிகளில் சில்லறை சிணுங்கல்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

      Delete
  7. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

      Delete
  8. உங்களது மன்னவன் உங்களை புரிந்துணர்ந்து கொள்வார்...உங்களது வாழ்கையெனும் ஓடம் அழகாய் மிதந்து செல்லுமென வாழ்த்துகிறேன். அருமையான வரிகள் சசிகலா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

      Delete
  9. எனக்குள் இருக்கும் ஒரு வகையான சோகத்தை கவியாக்கியுள்ளீர்கள் அக்கா அருமை..

    ReplyDelete
    Replies
    1. சோகமும் சுகமே தமிழோடு பகிர்ந்து கொண்டால் .

      Delete
  10. மனதை அள்ளும் அழகான சினுங்கல் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

      Delete
  11. சிணுங்கள் மனத்தைச் சிதைத்தது சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

      Delete
  12. //துரும்பென எண்ணி
    நீயும் உதறி எறிந்து
    சென்றாயோ ?//

    உதறிச்செல்ல பலநேரங்களில் வலுவான காரணங்கள் உண்டு,துரும்பு அல்ல கரும்பாகவே இருந்தாலும்!,அருமை சசிகலா

    ReplyDelete
  13. ம்ம்ம்... அருமை சகோ

    ReplyDelete
  14. நல்லா சிணுங்கியிருக்கிறீங்க சசிகலா...

    ReplyDelete
  15. சில்லறைச் சிணுங்கல்! ஒரு குலுங்கல் கவிதையாய்!

    ReplyDelete
  16. புரிதலில்லா காதலின் வேதனை வெளிப்பாட்டை மிகத் துல்லியமாய்ச் சொல்லும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  17. சில்லறைச் சிணுங்கல் மிகவும் சுகமான சிணுங்கலாக இருக்கிறது....


    இதற்க்காவே இன்னொரு முறை காதல் செய்ய வேண்டும் என்பது போல இருக்கிறது அதுவும் தோல்வியில் முடிய வேண்டும் இல்லையென்றால் மனைவி கட்டையை எடுத்து வந்துவிடுவார்கள்

    ReplyDelete
  18. முத்துச் சிதறலாய்....சில்லரையின் சிணுங்கள்...உள்ளத்தில் உள்ள வலி உள்ளபடி..விதைப்பு.....!

    ReplyDelete