Monday 4 June 2012

சிறகுகள் பறக்கத்தான்...!

நம்மால் முடியுமென்பதும் முடியாதென்பதுவும்,
நாமறியா பகல் கனவென்ற நம்பிக்கையே.
முடிந்ததெல்லாம் நன்மையாய் முடியவில்லை,
முடியாமல் போனதெல்லாம் தீதாயும் ஆகவில்லை.

உறவுகள் பிரிவெழுதின் நம்பிக்கை துரோகமென்போம்,
காலங்கள் கடந்துபோனால் இயற்கையதுவிதிவெனபோம்.
கைவிரல் ஐந்தும் சேர்ந்திருந்தால் பிரிக்க வழி பார்ப்போம்,
தனித்தனியாய் இணைந்திருந்தால் அழகு என்றுரைப்போம்.

வயதில்லா மழலையின் வார்த்தை தேனிசையாய்,
வாலிபத்தின் மொழியெல்லாம் மயக்கும் கனிமொழியாய்,
வசந்தகால நினைவெல்லாம் நிகழ்கால தாலாட்டாய்,
நாளைய வாழ்வெல்லாம் இன்றய கனவுகளாய்!

கணக்கில் பிழையேதும் இருப்பதாயத் தெரியவில்லை,
நம்கணக்கு சரியில்லை இதுவே யதார்த்தமென்று,
அறிந்தவன் சிரித்துக் கொடுத்து வாழ்கின்றான்,
புரியாதோர் புன்னகைத் தொலைத்து மாய்கின்றார்!

சிறகுகள் பறக்கத்தான் காற்றுள்ள எல்கைவரை,
சிந்தனையும் அப்படித்தான் நினைவுள்ள காலம்வரை,
அழுகையும் சிரிப்பும் யார்சொல்லி வந்ததென,
அறிந்தவர் யாருமில்லை நினைப்பதில் லாபமில்லை.

வாழ்கின்ற காலங்கள் கடுகளவு கூட இல்லை,
வானத்தில் பறந்தாலும் நிம்மதி இல்லையெனில்,
பிறந்ததில் பயனில்லை வாழ்விலும் பொருளில்லை,
அனைத்துமே அன்புதான் அதன்வழி நிம்மதியே,
ஆதலால் அன்பு செய்து மனங்கள் வென்றிடுவோம்!
படம் உதவி கூகிள் நன்றி கூகுளுக்கு .

27 comments:

  1. சிறகுகள் பறக்கத்தான். அன்பிற்கு மிஞ்சியது எதுவுமில்லை.. நற்கருத்துக்களை உரைத்திட்ட கவிதை நன்று. பச்சை நிற எழுத்துக்கள் படிக்க சிறப்பு, தொடருங்கள் தென்றல.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகையும் அன்பிற்கு மிஞ்சியது எதுவுமில்லை எனக் கூறிய விதமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி வசந்தமே .

      Delete
  2. BEAUTIFUL LINES... LOVELY WORDS.. THANKS

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  3. நல்ல கருத்துள்ள கவி

    //கைவிரல் ஐந்தும் சேர்ந்திருந்தால் பிரிக்க வழி பார்ப்போம்,
    தனித்தனியாய் இணைந்திருந்தால் அழகு என்றுரைப்போம்//

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  4. //ஆதலால் அன்பு செய்து மனங்கள் வென்றிடுவோம்!//
    இன்ரைய வாழ்வுக்கான நல்மருந்து இதுவே!நன்று .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  5. ம்(: அருமை தோழி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  6. //அன்பு செய்து மனங்கள் வென்றிடுவோம்!//
    நூற்றில் ஒரு சொல். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. நல்ல பொருள் பொதிந்த கவிதை சசி...அத்தனையும் அனுபவப்பின்னல்களாய் காணக்கிடைத்தது...

    அறிந்தவன் சிரித்துக் கொடுத்து வாழ்கின்றான்,
    புரியாதோர் புன்னகைத் தொலைத்து மாய்கின்றார்!
    இவ்விடம் மிகவும் ரசித்தேன்...வாழ்த்துகள் சசி :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. அழகான வாழ்வியல் கவிதை
    வாழ்த்துக்கள் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. mmmmmmm supper akka
    azhkana kavithai..

    very nice...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  10. அழகான கவிதை.
    மனம் அதில் லாய்த்தது சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  11. சிறகுகள் பறக்கத்தான். கூண்டில் அடைபடாதவரை. அன்பு செய்து வென்றிடுங்கள் என்ற வரி மிகவும் பிடித்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  12. அகரத்தையும் சிகரத்தையும்,
    ஆள்வதற்குத் தகுதியுள்ள,
    இதயத்தின் உயிர் மூச்சு,
    ஈகையான அன்புக்குண்டு,
    உணர்வினை கவிதையாக்கி,
    ஊக்கமாய் விளம்புகின்ற,
    எழுத்தோவிய சிற்பியின்,

    ஏக்கமாய் வாழ்ந்திருக்கும்,
    ஐக்கியமென்ற கருத்துரைகள்,
    ஒவ்வொன்றும் வாழட்டும்,
    ஓங்கிய அன்பு வடிவெடுக்கும்,
    ஔடதக் கவிதைகளாய்,
    அஃதே எமதாசை அவனியிலே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  13. உயிர்ப்பான வரிகளில் உள்ளம் தொலைத்தேன். பாராட்டுகள் சசிகலா. ரேவா குறிப்பிட்ட வரிகள் என்னையும் மிகவும் கவர்ந்த வரிகள். வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடு என்று நம்பிக்கையுடன் அழைக்கிறது கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  14. எப்பவும்போல விரிவாக அன்பைச் சொல்லும் கவிதை சசி....வாழ்த்துகள் !

    ReplyDelete