Monday 11 June 2012

ரசிக்க மனமிருந்தால் !




அழகென்று எதைச் சொல்ல!
கூந்தல் அழகு 
கூந்தலில் சூடும் 
கொத்து மலர் அழகு 
கோபுர கலசம் அழகு 
கானக் குயிலோசை அழகு 
கன்னம் வருடும் மயிலிறகு அழகு 
கற்சிலையும் அழகு 
அச்சிலை சுமக்கும் 
மண்பாண்டம் அழகு 
மானுடம் அழகு 
அதில் வாழும் மனித நேயமழகு
மண்ணழகு அதில் வாழும்
மரம் அழகு குடியேறும்
பறவை அழகு அது கட்டும்
கூடழகு வாழும் குஞ்சழகு,
ஊட்டும் தாய் அழகு-அது,
பாடும் பாட்டழகு-அதை,
ரசிக்கும் மனமழகு!
கடல் அழகு,
நீலவான் அழகு,
வாழும் நிலவழகு,
மின்னும் வெள்ளியழகு,
மலரும் சுடரழகு,
பொழியும் மழை அழகு,
ஓடும் மேகமழகு,
ஆடும் மயிலழகு,
ரசிக்க மனமிருப்பின்,
காற்றென்ன முத்தென்ன,
பாலையும் அழகுதான்.

31 comments:

  1. அழும் குழந்தையும் அழகு, ஓடும் நதியும் அழகு, சில்லென்ற மழை அழகு... எல்லாமே நம் பார்வையில் தான் இருக்கிறது. ரசனையுடன் கூடிய கவிதையை மிகவே ரசித்தேன் தென்றல். நன்று.

    ReplyDelete
    Replies
    1. வர்ணனையோடு வந்து ரசித்தமைக்கு நன்றி வசந்தமே .

      Delete
  2. கவி அழகு
    கவி கூறும் பொருளும் பேரழகு

    ReplyDelete
    Replies
    1. அழகான வரிகளுடன் வந்து வாழ்த்திய விதம் அழகு .

      Delete
  3. அக்கா என்றென்றும் தங்களின் கவியும் அழகு...!!!

    ReplyDelete
    Replies
    1. உரிமையுடன் வந்து ஊக்கப்படுத்திய விதம் அழகு .

      Delete
  4. சின்னச் சின்ன ரசனைகள் ரொம்பவே ரசிக்க வெக்குது. இந்த அழகு வரிசையில உங்களோட கவிதையையும் சேர்த்துக்கலாம். ரொம்ப ரொம்ப அழகு.

    ReplyDelete
    Replies
    1. உரிமையுடன் வந்து ஊக்கப்படுத்திய விதம் அழகு .

      Delete
  5. பொதுவாக அழகை ரசிக்க மனம் இருந்தால் போதும். எல்லாம் அழகே. பாலையும் (வனாந்தரம்) அழகு என்றது முத்தாய்ப்பான வரி. அழகு கவிதை.

    ReplyDelete
    Replies
    1. அழகான வரிகளோடு வந்து பாராட்டிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  6. கவிதை தொடக்கம் அழகு.

    கவி கட்டிய வார்த்தைகளும் அழகு..

    கடைசியில் கவிதையை முடித்த விதமும் அழகோ அழகு...

    ReplyDelete
    Replies
    1. அழகோ அழகென்று அழகாய் வாழ்த்திய விதம் அழகு .

      Delete
  7. இரசனை உள்ளவனுக்கு
    குப்பை மேடும் அழகுதானே அக்கா....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோதரி .

      Delete
  8. தென்றல் வருடலில்
    கவிதை
    அழகு

    ReplyDelete
    Replies
    1. அழகான வரிகளோடு வந்து பாராட்டிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. உங்களின் எழுத்தே எப்போதும் அழகு

    அதிலும் இந்த கவிதை மிக அழகு

    அதற்கென நீங்கள் இட்ட படமும் அழகு

    உங்கள் சிந்தனைகள் மிக அழகு

    அந்த சிந்தனைகள் பிறக்கும் உங்கள் மனமும் அழகு

    ஆக மொத்தத்தில் உங்கள் ப்ரோபைலில் போட்ட உங்கள் படத்தை போல எல்லாமே அழகாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. அழகென்ற சொல்லாலே அர்ச்சனை செய்தது அழகு .

      Delete
  10. உனது கவிதைக்கு தனி அழகு வாழ்த்துக்கள் சசி!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய சகோவிற்கு நன்றி .

      Delete
  11. அன்பு சகோதரி,
    அழகெனில் யாதென்றால்
    என்ற பட்டிமன்ற தலைப்பே இட்டு
    பேசலாம் போல..
    அவ்வளவு அழகு..

    ReplyDelete
    Replies
    1. அந்த அளவுக்கு திறமை இருக்க தெரியல அண்ணா .

      Delete
  12. அதுதான் கவிதையின் தலைப்பே சொல்கிறதே. எல்லாமே அழகுதான், ரசிக்க மனமிருந்தால். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் தென்றலுக்கு அழகு சேர்க்கிறது . நன்றி ஐயா.

      Delete
  13. புகைப்படமும் கவிதையும் மிக அழகு

    ReplyDelete
  14. ரசிக்க மனமிருப்பின்,
    காற்றென்ன முத்தென்ன,
    பாலையும் அழகுதான்.//

    கண்ணிலே அன்பிருந்தால்தானே
    கல்லிலே தெய்வம் வரும்
    ரசிக்கத் தெரிந்தவனுக்கு
    பார்ப்பதெல்லாம் அழகுதான்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. ரசிக்க மனமிருப்பின்,
    காற்றென்ன முத்தென்ன,
    பாலையும் அழகுதான்.

    -உண்மைதான்!
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  16. மனம் அழகாக இருந்தால் பார்க்கும் அத்தனையும் அழகுதான்.

    ReplyDelete
  17. எல்லாம் அழகுதான்.ரசிக்க மனமிருப்பின் காற்றில் தவழ்ந்து வந்து சோற்றுத்தட்டில் விழுகிற கூந்தலின் ஒற்றை முடி கூட/

    ReplyDelete
  18. ''..நீலவான் அழகு,
    வாழும் நிலவழகு,
    மின்னும் வெள்ளியழகு,
    மலரும் சுடரழகு,
    பொழியும் மழை அழகு,
    ஓடும் மேகமழகு,..''

    அன்பான மனமிருந்தால் அத்தனையும் அழகழகு. உம் கவிதையும் அழகு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete