Friday 8 June 2012

புரிதலின் வேகம் !


சோர்ந்த முகத்தோடும் சொப்பனங்கள் நிறைந்த கண்களோடும் இரண்டு கதவின் இடைவெளியில் கால் வைத்த படி கதவுகளின் இடைவெளியைக் கூட நிரந்தரமாக்கி ரசிப்பதில் சொற்ப மகிழ்ச்சி பெற்றிருந்தாள் சுதா .

எதிலும் விரக்தி! எல்லோர் மீதும் கோபம்! எல்லாம்  அம்மா செய்த வேலை... கல்யாணம் வேண்டாம் என்றவளையும் அழுதே சாதித்து சந்தேகப் பேர்வழி ஒருவன் தலையில் கட்டி இன்று வாழா வெட்டியாக வந்து அமர்ந்திருக்கிறேனே என்று தனக்குள்ளே வெந்து நொந்து கொண்டாள்.

மின்சாரம் இல்லாத வேளையிலேயே இப்படி மிரட்டும் எண்ணங்கள் மின்னலென வந்து போகும். மின்சாரத்தில் சொர்க்கத்தையே கண்டது போல் மகிழ்ந்திருந்தாள். அதற்குக் காரணமும் இருந்தது .

கொஞ்ச நாட்களுக்கு முன்பு கணினியில் பழக்கமான நட்பே காரணம். முதலில் எதையும் சொல்லக்கூடாது என்று இருந்தவளே கரைப்பார் கரைக்க கல்லும் தேயும் என்பது போல அவன் அன்பில் கரைத்துக்கொண்டிருந்தாள் சோகம் முழுமையும் .

கதைப்பதில் உண்டான ஆனந்தம் அவளிடம் மாற்றங்கள் பலவற்றை உண்டாக்கியது உண்மையே . அவனது அன்பான பேச்சும், அரவணைப்பாய் வரும் வார்த்தைகளும், அனுசரித்துப் போகும் விதமும் முழுவதுமாய் அவனது நினைவுகளிலேயே கட்டுண்டு இருந்தாள்.

கனவுக் காதலன் போலும் அவன் கணினிக் காதலன்! அவன் வரவிற்காய் ஏங்க ஆரம்பித்தாள். வருகை தாமதமானால் வம்பிழுக்கவும் செய்தாள். ஒரு நாள் விடுப்பு என்றாலும் உலகமே இருண்டு விட்டதாய் உணர்ந்தாள். பசி , உறக்கம் எல்லாம் மறந்து கணினியே கதி என்றிந்தாள்.

மின்விசிறி சுழல ஆரம்பித்ததும் மின்னலென ஓடி கணினி முன்பு அமர்ந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அலுவலக வேலையாக அன்பு அவன் ஊருக்கு வருவதாகவும் முதன் முறையாக அவளை நேரில் பார்க்க வருவதாகவும் பேசிக் கொண்டார்கள் .

அவள் கால்கள் தரையிலே படாமல் மிதப்பது போலவே உணர்ந்தாள். கண்ணாடி முன்பே நேரம் கழித்தாள். அலங்காரத்திற்கே  புதுசாய் அறிமுகமாகி இருந்தாள். அன்றேனும் மலர்ந்த மலராய்  அழகாய் அள்ளி முடிந்த கூந்தலும் அதில் சொருகிய ஒற்றை ரோஜாவும் அவள் அழகை இன்னும் கொஞ்சம் எடுப்பாக்கித் தான் காட்டின.

பெரும் இரைச்சலுக்கு நடுவே பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள் சுதா.  இருவரும் பார்த்தது இல்லை எப்படி அறிமுகம் செய்து கொள்வது, என்ன பேசுவது இப்படி சிந்தித்துக் கொண்டிருந்த வேளை கையில் இருந்த அலை பேசி ‘கண்ணா உனைத் தேடுகிறேன்’ என்றபடி சிணுங்கியது. முகத்தில் புன்முறுவல் ஒட்டிக்கொள்ள ஆன் செய்து பேசியவளின் பின்புறமிருந்து ஒலித்தது ஓர் குரல்.

பழகிய குரல் போலும் உள்ளதே என சற்றே நிதானித்து திரும்பிய அவளுக்கு படபடவென இதயம் அடித்துக்கொள்ள அவமானத்தால் வெட்கித் தலைகுனிந்தாள். உள்ளுக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் துளைத்தன.

யாரை வேண்டாமென வெறுத்து ஒதுக்கி ஓடி வந்தாளோ... அந்த உருவமே அவள் முன்பு சிலையாய் நின்றது!

35 comments:

  1. தற்காலத்திற்கு ஏற்ற அருமையான கதை சசி

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகையும் காலத்திற்கு ஏற்ற பதிவென்று பாராட்டியமை கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  2. எதிர்பாராத முடிவுடன் அமைந்த அழகான கதை. பழகுதலில் எத்தனை உஷாராக இருக்க வேண்டும் என்று படிப்பினை தரும் கதையும் கூட. அருமை தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்படி முடித்து விட்டீர்கள் எனக் கூறாமல் பாராட்டியது கண்டு மகிழ்கிறேன் .

      Delete
  3. வணக்கம்

    கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.http://www.googlesri.com/

    யாழ் மஞ்சு

    ReplyDelete
  4. கதை வாசித்தேன் சசிகலா. எனக்கு சிறுகதை வாசிக்க ஏனோ ஆர்வமில்லை. என்ன செய்வது நமது கருத்தாளர்கள் என்று வாசிப்பேன். இக்கதை எதிர் பாராத முடிவாக இருந்தது. சிறுகதைகளிற்கு கருத்துத் தராவிடில் குறை விளங்க வேண்டாம். மற்றவைகளிற்கு நான் வந்து கருத்திடுவேன் என்று உறுதி கூறுகிறேன். (புரிஞ்சுக்குங்க..) முயற்சிக்கு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அவரவர்க்கென்று விருப்பங்கள் இருக்குமல்லவா அதில் நான் ஒன்றும் குறை கூறவில்லை .

      Delete
  5. தூரமாய் ஒளி தெரிகிறது,
    பாரமான மனம் அதைநோக்கி,
    தீவிரமய்ப் போகிறது.
    இனிப்போக இடமில்லை,
    எதிரில் சாலையல்ல கடல்,
    தூரமாய்ப் போகிறது ஒளி,
    யாரையோ சுமந்துகப்பலாய்.
    பாவம் அவள் கணனிஉறவோடு,
    நின்றிருக்க வேண்டும் அதுவும்,
    கனவாய்,நினைவாய்..சுதாவாய்,
    எத்தனையோ இதயங்கள்!
    எச்சரிக்கை கதை-அழகு!!

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் தங்கள் வரிகள் கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  6. எவருடனும் பழகுவதில் எச்சரிக்கை வேண்டும் என்று உணர்த்திய சூப்பரான கதைக்கா. ரொம்ப நல்லா இருக்கு. (தென்றலைச் சந்திக்க வர லிங்க் வேணுமாக்கா? தென்றலின் திசை எனக்குத தெரியாதா என்ன?)

    ReplyDelete
    Replies
    1. நிரூ மா தங்கள் தளம் வந்தேன் அப்படியே அழைத்தேன் வேறு ஒன்றும் இல்லை .

      Delete
  7. உங்கள் கதையைப் பற்றி என் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே கணினி காதலனை சந்திக்கத் தயாரானாள் என்று வரும்போதே வந்தவன் அவளது கணவன்தானே என்று கேட்டுவிட்டாள். அது எப்படீங்க.?

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெண்ணின் மனம் பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது போல என் மனம் அவர்களுக்கு தெரிந்ததில் வியப்பில்லை . அவர்களுக்கும் நன்றி கூறியதாக சொல்லவும் .

      Delete
  8. நல்ல சிறுகதை. இணையத்தின் மூலம் கிடைக்கும் நல்லது கெட்டது புரிந்து அதில் பழக வேண்டியதை உணர்த்திய கதை. நன்றாக இருந்தது.

    உங்கள் பக்கத்தினை ஃபாலோ செய்ய முடியவில்லை. நிரஞ்சனா பக்கத்தில் நீங்கள் கொடுத்த சுட்டி மூலம் வந்தேன். ஃபாலோ கேட்ஜெட் சேர்த்தால், நீங்கள் புதிய பதிவெழுதும்போது படிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  9. ஃபாலோ கேட்ஜெட் வைக்க முடியவில்லை ஏனோ தெரியவில்லைங்க . தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் . நன்றிங்க .

    ReplyDelete
  10. நல்லா இருங்குங்க உங்க கதை....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  11. கதையின் முடிவு எதிர்பார்த்திரா ஒன்றாயினும் எச்சரிக்கை மணியை அடித்துச்செல்கிறது தோழி...சில ஒப்பீடுகள் மிகவும் அழகு...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி .

      Delete
  12. இப்போதைய தேவையை உணர்ந்து எழுதியுள்ளீர்கள்
    அக்கா.

    அருமை....

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு பரிமாறாமல் யாரோடு பேச அதுவே கதையாக .

      Delete
  13. அன்பு சகோதரி,
    கதையிலும் ஜொலிக்கிறீர்கள்.
    பழகுதலின் தருணம் நாம்
    எவ்வளவு கவனமுடன்
    இருக்கவேண்டும் என அழகாக
    ஒரு கதைமூலம் சொல்லிவிட்டீர்கள்..
    நன்று...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் .

      Delete
  14. தூரத்து பச்சை கண்ணுக்கு அழகு என்பதை உணர்த்துவதுபோல் இருந்தது கதையைப் படித்தபோது.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் என் கருத்தும் அதுவே எண்ணத்தை புரிந்து கொண்டு என்னை பாராட்டிய தங்களுக்கு நன்றி .

      Delete
  15. அருமையான கதை
    எதிர்பாராத முடிவு
    நிழ்லில் காட்டிய அனபையும் அக்கறையும்
    நிஜத்தில் காட்டிய்ருந்தால் இந்தப் பிரச்சனை
    இல்லையே என எண்ண வைத்துப் போனது
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் என் கருத்தும் அதுவே எண்ணத்தை புரிந்து கொண்டு என்னை பாராட்டிய தங்களுக்கு நன்றி ஐயா.

      Delete
  16. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/06/7.html

    ReplyDelete
  17. காலக் கண்ணாடி!
    நன்றி!

    -காரஞசன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  18. ம்(:
    நல்ல கதை
    எதிர் பாக்காத முடிவு

    இது நீங்கள் எழுதிய ஒரு கதையாக இருக்கலாம்
    ஆனால் தோழி இது நம் சமூகத்தில் நிகந்த நிகழ்கின்ற ஒரு சம்பவம்
    இது தற்பொழுது சமூக தளங்களில் அதிகம் நடைபெறுகிறது

    உங்கள் கதையை இப்படி முடித்து இருக்கீர்கள்
    இதைவிட மேசமான முடிவுகளில் போய் விட்டு இருக்கிறது
    சமூகத்தில் நடக்கும் நிஜக் கதைகள்

    எச்சரிக்கை கதைக்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க நிஜத்தில் இன்னும் மோசமாகத்தான் நடக்கிறது .

      Delete
  19. நல்ல கதை. முடிவு எதிர்பாராத ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete