Sunday 10 June 2012

பூவிற்றகாசும் மணமாயில்லை!

 
அருமைத் தாய்மடிதன்னில்,
அழகாய்ப் பாத்தியமைத்து,
சீரான இடைவெளியில்,
பதிகளை நட்டுவைத்து,
நீரூற்றி உயிர் கொடுத்து,
நிலமகளின் கருவறையில்,
வளர்ந்த பூங்கொடியை,
உரமிட்டு பார்த்திருந்து,
பூ பூக்க காத்திருந்தான்.
காவல்நாய் வடிவெடுத்து.                  

வேனிற்காலம் விடைபெற,
தென்றல்வந்து தாலாட்ட,
மொட்டினங்கள் தலைதூக்கி,
பனிமழையில் குளித்தகாலை,
வானத்து விண்மீன் கூட்டம்,
வாழ்த்துப் பாடிச்செல்ல,
வான்மதி மென் ஒளிபோல்,
சிந்தையில் பூங்கவிதைதந்த,
ரோஜா மலர்க் கூட்டம்,
கூடியாடிமயிலாய் நடனமட,
திருவிழாவந்த காளைகள் போல்,
வண்டினங்கள் வந்து கூட,
மணம் பரப்பி நின்றவரை,
மகிழ்ச்சியோடு அவன் பார்த்து,
குதூகலித்த அந்த நேரத்தில்,
வந்தனன்காண் எஜமானன்,
பூப்பறிக்க ஆளுடனே!
வியாபாரிக் கருணையின்றி,
பூவெல்லாம் பறித்தெடுக்க,
பரிதவித்த காவல் மனம்,
பார்வையாளன் ஆனதுவே!

கூடை கூடையாய் பூக்கள்,
சாரைசாரையாய் வண்டிகளில்,
தாரைதாரையாய் கண்ணீரோடு,
பனிமலரகள் ஊர்கோலமாய்,
அரவையிடம் நோக்கிச் செல்ல,
எஜமானன் விலைத்தொகையை,
வாங்கிமடியிலே கட்டிவிட்டு,
எருமைமாதிரி நிற்காதே,
போய் வேலையைப்பார் விரட்ட,
எதிர்பார்ப்பு ஏதுமன்றி,
கடமை செய்திட முனைந்தானே.
நாய்விற்ற காசு குரைப்பதில்லை போல்,
பூவிற்றகாசும் மணமாயில்லை-அவனுக்கு!

25 comments:

  1. இதயத்திலென்ன ஊற்றாவாழ்கிறது,
    கதையென்றும்,கவிதையெனவும்,
    மாற்றி மாறி அழகாய் அரங்கேற்றம்,
    தமிழ்மேல் கொண்ட தாகத்தை,
    தணிக்குமும் நற்படைப்புகளை,
    நாடுபோற்றும் காலம்மலர,
    ரசிகனாய் வாழ்த்துகிறேன்,
    தொடரட்டும் தமிழ்த்தொண்டு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  2. நாய்விற்ற காசு குரைப்பதில்லை போல்,
    பூவிற்றகாசும் மணமாயில்லை-அவனுக்கு!//

    அருமையான சிந்தனை
    அழகான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  3. //நாய்விற்ற காசு குரைப்பதில்லை போல்,
    பூவிற்றகாசும் மணமாயில்லை-அவனுக்கு!//

    அது அப்படித்தான் சகோ

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் பின்னோட்டம் கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  4. நோக்க வைக்கும் தலைப்பு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  5. அருமைத் தாய்மடிதன்னில், என்று அழகாய் ஆரம்பித்து எழுதிய உங்கள் பதிவு மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

      Delete
  6. ஒரு வேலைக்காரனின் மனநிலையில் நல்ல கவிதை.ஆரம்பமும் முடிவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

      Delete
  7. ஆம். மனிதனைப் பாடாய்ப் படுத்தி வைக்கும் பணத்திற்கு எந்த வாசமும் இல்லைதான். தொழிலாளியின் உணர்வுகள் மட்டும் புரிந்து விடுமா என்ன? தோட்டக்காரனின் பார்வையிலேயே கவிதை ‌சொன்னது பிரமாதம் தென்றல்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

      Delete
  8. // நாய்விற்ற காசு குரைப்பதில்லை போல்,
    பூவிற்றகாசும் மணமாயில்லை-அவனுக்கு!//

    அருமையான சொல்லாட்சி.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

      Delete
  9. அருமை அக்கா...

    என்னும் அழகான பின் புலத்தை தேர்வு செய்திருக்கலாமே

    அக்கா....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விருப்பப்படியே செய்யலாம் சகோதரி .

      Delete
  10. அழகுப்பூக்களை ரசிக்கும் மனம், அரைத்து வரும் மணத்தை ரசிப்பதில்லைதான். அருமையான கருவை அழகிய கவிதையாக்கி, மனந்தொட்டுவிட்டீர்கள். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் தந்து பாராட்டிய விதம் அழகு .

      Delete
  11. பூக்கள் செடிகளில் இருக்கும்போது இருக்கும் அழகு பறித்த பின் எங்கிருந்தாலும் அழகில்லைதான்.கவிதையில் சொல்லாட்சி பிரமாதம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

      Delete
  12. // எதிர்பார்ப்பு ஏதுமின்றி,
    கடமை செய்திட முனைந்தானே //
    அவன் பிழைப்பு அவனுக்கு. ரசனையைப் பார்த்தால் பிழைக்க முடியாது. ஒரு தொழிலாளியின் நிலைமையைச் சில வரிகளில் சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  13. அன்புத் தங்கை சசி,
    இயல்நடையில் இனிய
    சொற்பொருள் கவிதை...
    அருமை அருமை...

    ReplyDelete