Tuesday 5 June 2012

அன்பொன்றே கோவில் !


தேய்ந்துபோகும் நிலவாய்க் காதல்,
வாழ்வதில் அர்த்தமில்லை.
மண்ணில் சாய்ந்த மரமாய் மனங்கள்,
மரிப்பதில் மாட்சியில்லை.
கண்ணில் விரியும் காட்சிகள்யாவும்,
சொந்தங்கள் ஆவதில்லை.
கனவில்வந்த நிழல்பட வாழ்க்கை,
உண்மையின் பிம்பமில்லை.
கூடநடக்கும் நிழலும் கூடநம்முடன்,
இரவில் வருவதில்லை.
உறவும் பிரிவும் ஒன்றாய் இணைந்தால்,
பயணத்தில் பொருளில்லை.
பாசமும் கபடமும் கைகோர்த்து வாழ்தல்,
உண்மை வாழ்க்கையில்லை.
கொண்டுவந்ததும் கொண்டுபோவதும்,
பாவத்தின் சுவடுகளே.
விட்டுச் செல்வதும் கட்டி வைப்பதும்,
நமதில்லை சொப்பனங்களே .
விலையின்றி கொண்டதை விலைபேசி,
வலைவீசும் ஆசைகளே.
நமைக்கொல்லும் நாளை அறிந்தவர்யாரும்,
வீழார் அவனியிலே.
இருப்பதைப் பகிர்ந்து இல்லார்க்கு கொடுப்பார்,
இதயம் உள்ளவரே.
நேற்றும் நமதில்லை இன்றிலும் நாமில்லை,
நாளையும் கனவுதானே.
காயங்கள்யாவும் நாம்செய்த பாவத்தின்
பயனால் முளைத்தவையே.
காலங்களோடு போட்டி போட்டு ஓடும்,
ஓட்டத்தில் பயனிலையே.
ஒருவர்வாழ்வில் மற்றவர் ஏற்றும் தீபம்,
இதயஅன்பொன்றே.
அடுத்தவர் உயர்வில் அகம் மகிழும் மனமே,
கோவில் சொல்கின்றேன்.
தனைஅழித்து தன்குலம் வளர்த்தும்
 நண்டினம், வாழ்வதுபோல்.
அன்புக்காய் தனையே கொடுக்கின்ற வாழ்வே,
கவிதையில் தேனாகும்.
அவர்பாதம் பணிந்து அடிமையாய்வாழ நானும்.
வரமே வேண்டுகிறேன்!

19 comments:

  1. http://mytamilpeople.blogspot.in/2012/06/microsoft-ends-support-of-windowsxp.html

    ReplyDelete
  2. அன்பு
    .....ம் ஒரு பெரு மூச்சு
    இதைத்தவிர எண்ண சொல்ல தோழி

    உங்கள் பாடல் அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  3. கூட நடக்கும் நிழலும் கூட நம்முடன் இரவில் வருவதில்லை

    ம்ம் நிச்சயம் அக்கா எதுவும் நிரந்தரமில்லை காதலில்..


    அருமையான கவி அக்கா....

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வரவு கண்டு மகிழ்ந்தேன் . நன்றி மா .

      Delete
  4. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  5. அடுத்தவர் உயர்வில் அகம் மகிழும் மனமே, கோவில்.
    -மிகச் சரியான வார்த்தைகள் தென்றல். அன்பிற்காய் தனையே கொடுக்கின்ற வாழ்வைத்தான் என் மனமும் விரும்புகிறது. ரசிக்க வைத்த அருமையான கவிதை. கவிதைகளில் நீங்கள் (ராட்)சசிதான்!

    ReplyDelete
    Replies
    1. அழகான வரிகள் கண்டு மகிழ்ந்தேன் . அது என்ன அப்படி ஒரு வசவு ....

      Delete
    2. அது வசவு இல்லை தென்றல். ஒருவரின் எழுத்தைப் புகழ்ந்து சொல்லும் போது எழுத்தரக்கர் என்று புகழ்ந்தார் என் மதிப்புக்குரிய அப்பாதுரை சார். அதுபோல கவிதைகளில் உங்களின் திறமையை உச்சபட்ச பாராட்டாகத்தான் சொல்லியிருக்கிறேன் சசி.

      Delete
  6. //ஒருவர்வாழ்வில் மற்றவர் ஏற்றும் தீபம்,
    இதயஅன்பொன்றே.//
    உண்மை.அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  7. நல்ல கவிதை!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. hi kala madam, wonderfu, arputham madam, nala oru arumayana oru arutham madam
    good sasi madam

    ReplyDelete
  9. அடுத்தவர் உயர்வில் அகம் மகிழும் மனமே,
    கோவில் சொல்கின்றேன்.
    //
    அருமையான பாடல்/கவிதை...

    ReplyDelete
  10. “ஒருவர்வாழ்வில் மற்றவர் ஏற்றும் தீபம்,
    இதயஅன்பொன்றே.“

    அருமையான வரி.
    ஆழ்ந்த கருத்துக் கவிதை.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  11. தனைஅழித்து தன்குலம் வளர்த்தும்
    நண்டினம், வாழ்வதுபோல்.
    அன்புக்காய் தனையே கொடுக்கின்ற வாழ்வே,
    கவிதையில் தேனாகும்.
    //
    அருமை!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  12. வியாபார நோக்கமில்லா அன்பு என்றும் நிலைத்து வாழும் !

    ReplyDelete