Thursday 7 June 2012

அழிவின் ஆரம்பம் !


சினத்தை வெளிக்காட்ட
அழுகையாய் கோபத்தை
வெளிக்காட்டுகிறது குழந்தையும் !
சொல் பேச்சு கேளாமையால்
அடிப்பதாய் மிரட்டும்
அன்னையும்  தந்தையும் !
அறிவைப் புகட்டும் ஆசானும்
குட்டி உணர்த்தும் நற்குணப் பண்புகளை !
அன்பின் மிகுதியால்
அடித்து அணைக்கும் தோழனும் !
உறவின் மிகுதியால்
உரக்க குரல் கொடுக்கும் மனைவியும் !
கோபமெனும் ஓர் குணமே
இல்லா மானிடரை இங்கே காணோம்
இருப்பவரிடம் ஓர் அங்கமாகவும்
இல்லாதவனிடம் பருவ மாற்றத்தை போலும்
பாவங்களும் சாபங்களும்,
கோபத்தின் பிள்ளைகளாய்.
பாரங்களும் சோகங்களும்,
தொடரும் தொடர்கதையாய்.
அன்பால் வரும் கோபம்,
வளர வழி காட்டும்.
ஆணவத்தில் விளையும் கோபம்,
அழிவின் ஆரம்பமாய்.
நம் தவறை நாமறிந்து நம்மீது,
நாம்கொளும் கோபம்.
நம்மை சீரமைக்கும் ஆயுதமாய்.
கோபமில்லாமல் அன்பில்லை,
கோபம் மட்டும் அன்புமில்லை.

27 comments:

  1. கோபமில்லாமல் அன்பில்லை. கோபம் மட்டும் அன்பு இல்லை. சூப்பர் சசி! ‌சமையல் குறிப்பில் மிளகாய் ‌‌தேவையான அளவு என்று சொல்வது போல் கோபமும் தேவையான அளவு இருக்க வேண்டியது அவசியம்தானே! கோபம் நியாயமான விஷயத்திற்காய் இருக்க வேண்டும். நா. பார்த்தசாரதி ‘சத்திய வெள்ளம்’ நாவலில் ‘நியாயமான விஷயத்துக்காக கோபப்படுபவர்கள், வளைவான வாத்தியக் கருவியிலிருந்து எழும் நேரான இசை போன்றவர்கள்’ என்று குறிப்பிடுவார். நல்ல கருத்துச் சொன்ன தென்றலுக்கு ஜே!

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான ஒரு எடுத்துக்காட்டுடன் வரிகளை பாராட்டிய விதம் அழகு வசந்தமே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  2. ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிகிறது சசி.ஒரு படிப்பினையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.அருமை !

    ReplyDelete
    Replies
    1. என்ன படிச்சாலும் பட்டுன்னு முன்னாடி வந்து நிற்பது கோபம் தான் என்ன செய்வது சகோதரி .

      Delete
  3. //கோபமில்லாமல் அன்பில்லை,
    கோபம் மட்டும் அன்புமில்லை.//

    மிக அருமையாக முடித்துள்ளிர்கள்

    ReplyDelete
    Replies
    1. கோபத்தின் முடிவென்னவோ நன்றாக இருப்பதில்லை சகோ .

      Delete
  4. கோபமிருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பார்கள். ஆனால் முன் கோபம் பொல்லாதது.

    ReplyDelete
    Replies
    1. மிக மிக சரியான உண்மைதான் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  5. //அன்பால் வரும் கோபம்,
    வளர வழி காட்டும்.
    ஆணவத்தில் விளையும் கோபம்,
    அழிவின் ஆரம்பமாய்.
    நம் தவறை நாமறிந்து நம்மீது,
    நாம்கொளும் கோபம்.
    நம்மை சீரமைக்கும் ஆயுதமாய்.
    கோபமில்லாமல் அன்பில்லை,
    கோபம் மட்டும் அன்புமில்லை.//

    கோபத்தின் கொடுமையை மிக அருமையாக
    விளகுகினீர் முடிவில் முத்தான இரண்டு வரிகள்!
    நன்று!

    சா இராமாநுசம் த ம ஓ 3

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் அந்த கொடூரத்தின் பிடியில் சிக்காமல் இருக்க முடிவதில்லை ஐயா .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  6. //கோபமில்லாமல் அன்பில்லை,
    கோபம் மட்டும் அன்புமில்லை.//
    அருமையான கருத்தை இரண்டே வரிகளில் அழகாகச் சொல்லி விட்டீர்கள்.நன்று

    ReplyDelete
    Replies
    1. அன்பிருக்கும் இடத்தில கோபமும் இருக்கும் என்கிறீர்களா ஐயா .

      Delete
  7. hi sasi

    unka intha varikal enaku oru spl lesson, superb meaning and nala oru kavi, hats up sasi avl

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  8. ஒரு பாடநூலில் வெளியடக் கூடிய தரத்துடன் இருக்கிறது வாழ்த்துக்கள்...தொடரட்டும் சேவை!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  9. உரிமைகள் உடமைகள் பறிக்கப்படும்போது அதனை எதிர்க்கும் முதல் ஆயுதம் நம் கோபம்தான், அருமையான கவிதை சசி

    ReplyDelete
    Replies
    1. உரிமை இருக்கும் இடத்தில் உல்லாசமாகவே வருகிறதே கோபம் .

      Delete
  10. //கோபமில்லாமல் அன்பில்லை,
    கோபம் மட்டும் அன்புமில்லை.//

    முத்தான இரண்டு வரிகள்...

    அழகான கவிதை...

    ReplyDelete
  11. கோபத்துக்கும் வாழ்வுகொடுக்கும்,
    கோடானகோடி மானிடருண்டு,
    கோபமெனறகோடு வாழ்வில்,
    கோலமாகாதிருப்பின் நன்று!

    ReplyDelete
  12. கோபம் அழிவின் ஆரம்பம் அல்ல . இயலாமை யின் வெளிப்பாடு கூட
    கோபமாக வெளிபடலாம் சசிகலா

    ReplyDelete
  13. எல்லாம் இருப்பதால் தான் நாம் மனிதர்களாய் உலவுகிரோம் ..!

    தா.மா.ஓ 5

    ReplyDelete
  14. ஒவ்வொரு வரிகளும் கருத்துாண்றப்
    பெற்றவையாக உள்ளன அக்கா..

    ம்ம் அருமை.....................

    ReplyDelete
  15. // நம்மை சீரமைக்கும் ஆயுதமாய்.
    கோபமில்லாமல் அன்பில்லை,
    கோபம் மட்டும் அன்புமில்லை. //
    நம் வாழ்க்கையில் வரம்புக்குட்பட்ட கோபமும் ஒரு அம்சம்தான். சிலர் இதனை உணர்வதில்லை. இதனை கவிதையாய் உணர்த்திய உங்களுக்கு பாராட்டு.

    ReplyDelete
  16. அணைக்கிற கைதான் அடிக்கும் அடிக்கிற கைதான் அணைக்கும்./

    ReplyDelete
  17. கோபமும்,அன்பும் மாறி,மாறி காட்சியளிக்கிற நம்மை உள் வாங்கி வைத்திருக்கிற சமூகமாய் இது/

    ReplyDelete